Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஜன நாயகன் படத்தின் விநியோக உரிமையை தட்டித்தூக்கிய பிரபல நிறுவனம் – வைரலாகும் தகவல்

Jana Nayagan Movie Update: நடிகர் விஜய் நடிப்பில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் ஜன நாயகன். இந்தப் படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

ஜன நாயகன் படத்தின் விநியோக உரிமையை தட்டித்தூக்கிய பிரபல நிறுவனம் – வைரலாகும் தகவல்
ஜன நாயகன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 14 Oct 2025 17:09 PM IST

கோலிவுட் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் தளபதி விஜய் (Actor Vijay). இவரது நடிப்பில் இறுதியாக கடந்த 2024-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். அப்பா மற்றும் மகன் என இரட்டை வேடங்களில் நடிகர் விஜய் இந்தப் படத்தில் நடித்து இருந்தார். படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு (Director Venkat Prbhu) எழுதி இயக்கி இருந்த நிலையில் நடிகர் விஜயுடன் இணைந்து ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தனது 69-வது படம் தான் இறுதிப் படம் இனி படங்களில் நடிக்கப்போவதில்லை என்று அறிவிப்பை வெளியிட்டது அவரது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.

அதனைத் தொடர்ந்து நடிகர் விஜயின் நடிப்பில் உருவாக உள்ள கடைசிப் படத்தை யார் இயக்க உள்ளார் என்று ரசிகர்கள் மிகவும் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் இயக்குநர் எச்.வினோத் அந்தப் படத்தை இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதனைத் தொடர்ந்து இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரடெக்‌ஷன் தயாரித்து வரும் நிலையில் நடிகர் விஜயின் சினிமா பயணத்தை ஒரு வீடியோவாக வெளியிட்டு ரசிகர்களை எமோஷ்னலாக்கியது குறிப்பிடத்தக்கது.

ஜன நாயகனின் விநியோக உரிமையைப் பெற்ற ரோமியோ பிக்சர்ஸ்:

இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ள நிலையில் நடிகர் பாபி தியோல் வில்லனாக நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரடெக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.

மேலும் இந்தப் படம் வருகின்ற 9-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் தமிழ் நாட்டில் இந்தப் படத்தின் விநியோக உரிமையை பிரபல் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வைரலாகி வருகின்றது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… பாகுபலி தி எபிக் படக்குழு வெளியிட்ட புது அப்டேட் – வைரலாகு எக்ஸ் போஸ்ட்

இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:

Also Read… மெண்டல் ஹாஸ்பிடல் மாதிரி இருக்கு… பிக்பாஸ் தமிழ் சீசன் 9 போட்டியாளர்களை விமர்சித்த சதீஸ்!