டியூட் படத்தின் டிக்கெட் முன்பதிவு எப்போட் தொடங்குது தெரியுமா? அப்டேட் கொடுத்த படக்குழு
Dude Movie: நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் டியூட். இந்தப் படம் குறித்த அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வரும் நிலையில் படத்தின் டிக்கெட் முன்பதிவு எப்போது தொடங்க உள்ளது என்பது குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

நடிகர் பிரதீப் ரங்கநாதன் (Actor Pradeep Ranganathan) நடிப்பில் மூன்றாவதாக உருவாகியுள்ள படம் டியூட். இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார். இவரது இயக்கத்தில் உருவாகும் முதல் படம் என்பதால் தமிழ் சினிமாவில் இயக்குநராக கீர்த்திஸ்வரன் அறிமுகம் ஆகும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் பிரதீப் ரஙக்நாதனுக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ நடித்துள்ளார். மலையாள சினிமாவில் ஹிட் நாயகியகா வலம் வந்த நடிகை மமிதா பைஜூ தொடர்ந்து தமிழ் சினிமாவில் 4 படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக கமிட்டானது விஷ்ணு விஷாலின் இரண்டு வானம் படத்தில் என்றாலும் அந்தப் படம் இன்னும் திரையரங்குகளில் வெளியாக காரணத்தால் தமிழி இவர் அறிமுகம் ஆகும் படமாக டியூட் அமைந்துள்ளது.
அறிமுகங்கள் நிறைந்த படமாக இந்த டியூட் படம் இருக்கும் நிலையில் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகும் படமாக டியூட் உள்ளது. இந்தப் படத்தில் இளம் நடிகர்கள் அதிகமாக இருப்பது போல இயக்குநரும் இளம் இயக்குநர் தொடர்ந்து இசையமைப்பாளரும் இளம் இசையமைப்பாளராக அமைந்துள்ளது. மேலும் இந்தப் படத்தின் மூலம் நடிகர் பிரதீப் ரங்கநாதன் பாடகராகவும் அறிமுகம் ஆகியுள்ளார். அதன்படி பிரதீப் ரங்கநாதன் இந்தப் படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்று மாலை 7 மணிக்கு தொடங்குகிறது டியூட் படத்தின் டிக்கெட் முன்பதிவு:
இந்த நிலையில் டியூட் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகின்ற 17-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இன்று 14-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு மாலை 7 மணிக்கு படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்க உள்ளதாக டியூட் படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இந்தப் பதிவு தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… #Love சீரிஸிக்காக ஒன்றிணைந்த அர்ஜுன் தாஸ் – ஐஸ்வர்யா லட்சுமி!
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#DUDE Tamil Nadu bookings open today at 7 PM ❤🔥
Grand Tamil Nadu Release by @agscinemas ✨
Grand Festive Release on October 17th in Tamil & Telugu ✨
⭐ing ‘The Sensational’ @pradeeponelife
🎬 Written and directed by @Keerthiswaran_
Produced by @MythriOfficial
Music by… pic.twitter.com/toKCnWZel6— Mythri Movie Makers (@MythriOfficial) October 14, 2025
Also Read… ஷூட்டிங் ஆரம்பிக்கிற ஒரு வாரம் முன்னாடிதான் பைசன் கதை படிச்சேன் – நடிகர் துருவ் விக்ரம்