Harish Kalyan: தீபாவளிக்கு படம் வருவதற்கு என்ன தகுதி வேண்டும்? எமோஷனலாக பேசிய ஹரிஷ் கல்யாண்!
Harish Kalyan Emotional Speech: ஹரிஷ் கல்யாணின் நடிப்பில் வெளியீட்டிற்கு தயாராகி வரும் படம் தான் டீசல். இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியின்போது பேசிய இவர், டீசல் திரைப்படத்தின் மீதான விமர்சனம் குறித்து மிகவும் எமோஷனலாக பதிலளித்துள்ளார். அது குறித்து பார்க்கலாம்.

நடிகர் ஹரிஷ் கல்யாண் (Harish Kalyan) தமிழ் சினிமாவில் பிரபல நட்சத்திர நடிகராக இருந்துவருகிறார். இவரின் முன்னணி நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம்தான் லப்பர் பந்து (Lubber Pandhu). இந்த படத்தை இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கியிருந்தார். கடந்த 2024ம் ஆண்டில் வெளியான இந்த திரைப்படமானது இவருக்கு சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்திருந்தது. அதற்கு முன் இவர் நடித்திருந்த பார்க்கிங் படமானது 2023ம் ஆண்டிற்கான 3 தேசிய விருதுகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவரது நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள படம்தான் டீசல் (Diesel). இந்த படத்தை அறிமுக இயக்குநர் சண்முகம் முத்துசாமி (Shanmugam Muthusamy) இயக்கியுள்ளார். இதில் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை அதுல்யா ரவி (Athulya Ravi) இணைந்து நடித்துள்ளார்.
இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் ஹரிஷ் கல்யாண் எமோஷனலாக பேசியுள்ளார். இந்த டீசல் படம் தீபாவளியில் ரிலீசாவதற்கு என்ன தகுதி இருக்கிறது என்று, தயாரிப்பாளரிடம் நபர் ஒருவர் கேட்டது குறித்து விளக்கம் கொடுத்து பேசியுள்ளார்.




இதையும் படிங்க: இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில்.. சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தை கலாய்த்த சல்மான்கான்!
டீசல் திரைப்படம் குறித்து எமோஷனலாக பேசிய ஹரிஷ் கல்யாண் :
அந்த நிகழ்ச்சியில் மேடையில் பேசிய ஹரிஷ் கல்யாண், “ஒரு சில நாட்களுக்கு முன் எனது தயாரிப்பாளர் தேவா சாரிடம் ஒருவர், இந்த டீசல் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாவதற்கு என்ன தகுதி இருக்கிறது, எந்த பெரிய ஹீரோ நடித்திருக்கிறார், பெரிய இயக்குநர் இருக்காரா? என கேட்டிருக்காங்க. உண்மையாகவே தயாரிப்பாளர் மிகவும் மனதளவில் பாதிக்கப்பட்டார், நானும் பாதிக்கப்பட்டேன். தீபாவளிக்கு திரைப்படம் வருவதற்கு அப்படி என்ன தகுதி இருக்கனும் என தெரியவில்லை. நல்ல கதை, அந்த கதையை கொண்டுவரும் நல்ல டீம் மற்றும் நல்ல ப்ரோமோஷன் இருந்தால் அந்த படம் வரலாம் இல்லையா?
இதையும் படிங்க: தங்கலான் படத்திற்கு பிறகு விக்ரமிற்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை – இயக்குநர் பா.ரஞ்சித்
அந்த விதத்தில் இந்த் தீபாவளிக்கு நல்ல கதையுடன், நல்ல படத்துடன், மிகவும் விறுவிறுப்பாக கதையுடன் டீசல் என்ற படத்துடன் நாங்கள் வருகிறோம். எல்லாத்துக்கும் மேலாக நான் வணங்கும் இறைவனும், நான் வணங்கும் எனது பார்வையாளர்கள் நிச்சயமாக என்னை கைவிடமாட்டார்கள். எங்களை கையைப்பிடித்து கொண்டு செல்வார்கள் என மிகவும் நம்புகிறேன்” என்று நடிகர் ஹரிஷ் கல்யாண் மேடையில் எமோஷனலாக பேசியுள்ளார்.
டீசல் திரைப்படம் குறித்து ஹரிஷ் கல்யாண்
#Diesel trailer is here for you all – https://t.co/Sv6hFeL3Qp #DieselDiwali ❤️🙏 pic.twitter.com/zXQ0PhmHug
— Harish Kalyan (@iamharishkalyan) October 10, 2025
இந்த டீசல் திரைப்படமானது வரும் 2025 அக்டோபர் 17ம் தேதியில் வெளியாகிறது. இப்படத்துடன் பைசன் மற்றும் டியூட் என இரு திரைப்படங்ககளும் ஒன்றாக வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.