இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள நடிகர் கென் கருணாஸ் – வைரலாகும் அறிவிப்பு வீடியோ
Actor Ken Karunas: தமிழ் சினிமாவில் வாரி நடிகராக அறிமுகம் ஆகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றவர் நடிகர் கென் கருணாஸ். தொடர்ந்து இவரது நடிப்பு ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வந்த நிலையில் தற்போது சினிமாவில் இயக்குநராக புது அவதாரம் எடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக ரசிகர்களிடையே நன்கு பரிச்சையமானவர் நடிகர் கருணாஸ் (Actor Karunas). இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடித்த நந்தா படத்தில் கருணாஸ் லொடுக்குப் பாண்டி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே நன்கு பிரபலம் ஆனார். அந்தப் படத்தை தொடர்ந்து ரசிகர்கள் பல நாட்களுக்கு கருணாஸை லொடுக்குப் பாண்டி என்றே அழைத்து வந்தனர். இவர் அதனைத் தொடர்ந்து பாடகி கிரேஸை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு மகள் மற்றும் மகன் என இருவர் உள்ளனர். இதில் கருணாஸின் மகன் கென் கருணாஸ் குழந்தை நட்சத்திரமாகவே சினிமாவில் அறிமுகம் ஆனார். அப்போது இருந்தே கென் கருணாஸ் நடிக்கும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற கென் கருணாஸிற்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தப் படம் அசுரன். இதில் நடிகர் தனுஷின் இரண்டாவது மகனாக நடித்து தனது மாஸான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை பாகம் இரண்டு படத்திலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றார் நடிகர் கென் கருணாஸ்.
இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள நடிகர் கென் கருணாஸ்:
தொடர்ந்து சினிமாவில் நடிகராக வலம் வந்த கென் கருணாஸ் தற்போது அடுத்தக் கட்டத்தை எட்டியுள்ளார். அதன்படி அவர் தற்போது எழுதி இயக்கி நடிக்க உள்ள படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பர்வத எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் மூலம் கென் கருணாஸ் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆக உள்ளார். இது தொடர்பான அறிவிப்பு வீடியோவை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… நோ டிசிப்ளின்.. துஷாரிடம் இருந்து வீட்டு தல பதவியை பறித்த பிக்பாஸ் – வைரலாகும் வீடியோ
கென் கருணாஸ் இயக்கும் படம் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
We are delighted to share that Paarvaatha Entertainments proudly begins its journey with Production Number 1 : Written, Directed & Performed by Ken & Gang, in association with Street Boy Studios ✨
Next cracker drops on Saturday 18th October 🧨💥
school fun begins soon 🎉… pic.twitter.com/OlqoP6m4Ee— Paarvathaa Entertainments (@paarvathaaent) October 16, 2025
Also Read… ஜெயிலர் 2 படத்திற்கு பிறகு ரஜினிகாந்தை இயக்கும் பிரபல இயக்குநர்? இணையத்தை கலக்கும் தகவல்