அனிருத்தின் பிறந்த நாள்… ஸ்பெஷல் போஸ்டர் வெளியிட்டு வாழ்த்திய பாரடைஸ் படக்குழு
The Paradise Movie: நடிகர் நானியின் நடிப்பில் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் படம் தி பாரடைஸ். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்தர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவர் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து படக்குழு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் நானி (Actor Nani). இவரது நடிப்பில் தெலுங்கு சினிமாவில் உருவாகும் படங்கள் தெலுங்கு ரசிகர்களிடையே மட்டும் இன்றி பான் இந்திய அளவில் ரசிகர்களிடையே தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இவர் இறுதியாக ஹிட் தி தார்ட் கேஸ் என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் நடிகர் நானி தற்போது தி பாரடைஸ் மற்றும் நானிஎக்ஸ்சுஜீத் என்ற இரண்டு படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து வருகிறார். அதன்படி தற்போது தி பாரடைஸ் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. பீரியட் ஆக்ஷன் ட்ராமாவாக உருவாகி வரும் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே ரசிகர்களிடையே இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தப் படத்தை தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வரும் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா எழுதி இயக்கி வருகிறார். படத்தின் போஸ்டர் மற்றும் வீடியோ முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் நானியின் தோற்றம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்து வருகிறார்.




அனிருத்தின் பர்த்டே ஸ்பெஷல் போஸ்டை வெளியிட்ட தி பாரடைஸ் படக்குழு:
இந்த நிலையில் இன்று இசையமைப்பாளர் அனிருத் தனது 35-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக நானியின் தி பாரடைஸ் படக்குழு ஒரு போஸ்டரை வெளியிட்டு தங்களது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்து உள்ளனர். அந்த போஸ்டர் தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
முன்னதாக நடிகர் நானி மற்றும் அனிருத் காம்போவில் வெளியான ஜெர்சி மற்றும் நானிஸ் கேங் லீடர் ஆகியப் படங்களின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல இந்த தி பாரடைஸ் படத்தின் பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
Also Read… தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் முன்னணி நடிகர்களின் படங்களின் அப்டேட்
தி பாரடைஸ் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Team #TheParadise wishes Rockstar @anirudhofficial a very Happy Birthday ❤🔥
The music and score of #TheParadise will be RAW, WILD & MAD 🎼🔥
In CINEMAS 𝟐𝟔𝐭𝐡 𝐌𝐀𝐑𝐂𝐇, 𝟐𝟎𝟐𝟔.
Releasing in Telugu, Hindi, Tamil, Kannada, Malayalam, Bengali, English, and Spanish.… pic.twitter.com/Kq9EGmQ0tN— THE PARADISE (@TheParadiseOffl) October 16, 2025
Also Read… ஓடிடி ரிலீஸ் தேதியை லாக் செய்தது விஜய் ஆண்டனியின் சக்தி திருமகன் படக்குழு