ஓடிடி ரிலீஸ் தேதியை லாக் செய்தது விஜய் ஆண்டனியின் சக்தி திருமகன் படக்குழு
Shakthi Thirumagan Movie: நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியான படம் சக்தி திருமகன். இந்தப் படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது ஓடிடியில் எப்போது வெளியாக உள்ளது என்பது குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

கோலிவுட் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்தவர் விஜய் ஆண்டனி (Vijay Antony). இவரது இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து படங்களில் இசையமைப்பாளராக இருந்து வந்த விஜய் ஆண்டனி அவ்வபோது படங்களில் சின்ன சின்ன கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த விஜய் ஆண்டனி நான் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக தமிழ் சினிமா ரசிகர்களிடையே அறிமுகம் ஆனார். இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து பலப் படங்களில் நாயகனாக நடித்து வருகிறார் நடிகர் விஜய் ஆண்டனி. அவர் நடிக்கும் படங்களை அவரை தயாரித்து வரும் நிலையில் தொடர்ந்து படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் சக்தி திருமகன். இந்தப் படம் கடந்த 19-ம் தேதி செப்டம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தை இயக்குநர் அருண் பிரபு எழுதி இயக்கி உள்ளார். இவர் முன்னதாக அருவி மற்றும் வாழ் என இரண்டு முக்கியப் படங்களை இயக்கி இருந்தார். இந்தப் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.




ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் சக்தி திருமகன் படம்:
பொலிட்டிகள் ஆக்ஷன் த்ரில்லர் படமாக வெளியான இந்தப் படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி உடன் இணைந்து நடிகர்கள் சுனில் கிர்பலானி, வாகை சந்திரசேகர்,
செல் முருகன், கிரிஷ் ஹாசன், துருத்தி ரவீந்திரன், ஹரிணி சுந்தர்ராஜன், ஷோபா விஸ்வநாத், ரியா ஜித்து, சந்துரு பி.சி.எஸ்., ஆர்.அரவிந்தராஜ், மாஸ்டர் கேசவ், நிஜந்தன், சந்திரன், பிரசாந்த் பார்த்திபன் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக உள்ளது. அதன்படி படம் 24-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Every mind has a master. Meet the mastermind #ShakthiThirumagan on OCt 24 only on JioHotstar 🔥#ShakthiThirumagan streaming from Oct 24 only on JioHotstar#ShakthiThirumaganOnJioHotstar #ShakthiThirumaganStreamingFromOct24 #JioHotstar #JioHotStarTamil @vijayantony… pic.twitter.com/tULjpQ50t0
— JioHotstar Tamil (@JioHotstartam) October 15, 2025
Also Read… டீசல் படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது – வைரலாகும் போஸ்ட்