Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Pooja Hegde: ‘அன்பு நிறைந்த பிறந்தநாள்’… நன்றி தெரிவித்த பூஜா ஹெக்டே

Pooja Hegde Instagram Post: பான் இந்திய பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் பூஜா ஹெக்டே. இவரின் முன்னணி நடிப்பில் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளிலும் படங்கள் உருவாகிவருகிறது. இந்நிலையில் நேற்று 2025 அக்டோபர் 13ம் தேதியில் தனது 35வது பிறந்தநாளை கொண்டாடியிருந்தார். அது தொடர்பாக நன்றி தெரிவித்து புதிய பதிவை பகிர்ந்துள்ளார்.

Pooja Hegde: ‘அன்பு நிறைந்த பிறந்தநாள்’… நன்றி தெரிவித்த பூஜா ஹெக்டே
பூஜா ஹெக்டே Image Source: Instagram
Barath Murugan
Barath Murugan | Published: 14 Oct 2025 21:01 PM IST

நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hegde) தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நாயகியாக இருந்துவருகிறார். மிஸ் அழகி போட்டியின் மூலம் பிரபலமான இவர், இயக்குநர் மிஷ்கின் (Mysskin) இயக்கத்தில் வெளியான முகமூடி (Mugamoodi) திரைப்படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தில் நடிகர் ஜீவாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தில் பாடல்கள் தற்போது வரையிலும் இணையத்தில் ட்ரெண்டிங் லிஸ்டில் இருந்துவருகிறது. அந்த வகையில், தற்போது இவர் பான் இந்திய நடிகைகளில் ஒருவராக இருந்துவருகிறார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் சிறப்பாக நடித்துவருகிறார். இந்நிலையில்,  2025 அக்டோபர் 13 ஆம் தேதியில் தனது 34வது பிறந்தநாளை கொண்டாடியிருந்தார். இந்நிலையில் இவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதத்தில் பல்வேறு பிரபலங்கள் பதிவுகளை வெளியிட்டிருந்தனர்.

மேலும் இவர் நடித்துவரும் புதிய படங்களான ஜன நாயகன் (Jana Nayagan) மற்றும் DQ41 போன்ற படங்களில் இருந்து சிறப்பு போஸ்டர் வெளியாகியிருந்தது. இந்நிலையில், தனது பிறந்தநாளுக்கு வாழ்த்துகளை தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதத்தில், நடிகை பூஜா ஹெக்டே சிறப்பு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஜெயிச்சுடு கபிலா… பைசன் காலமாடன் படத்தின் ட்ரெய்லரைப் புகழ்ந்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்

நடிகை பூஜா ஹெக்டே வெளியிட்ட லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் பதிவு :

 

View this post on Instagram

 

A post shared by Pooja Hegde (@hegdepooja)

இந்த பதிவில் நடிகை பூஜா ஹெக்டே, “இந்த பிறந்தநாள் சிரிப்பு, முட்டாள்தனம், அமைதி மற்றும் அன்பு நிறைந்த பிறந்தநாள் ஆகும். பிறந்தநாளை வாழ்த்துக்களை தெரிவித்த உங்கள் அனைவருக்கும் நன்றி” என நடிகை பூஜா ஹெக்டே அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

பூஜா ஹெக்டேவின் புதிய படங்கள் :

பூஜா ஹெக்டேவின் நடிப்பில் தமிழில் இறுதியாக ரெட்ரோ என்ற படமானது வெளியானது. இந்த படத்தை அடுத்ததாக தளபதி விஜயுடன் மீண்டும் இணைந்துள்ளார். இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில், தளபதி விஜய் நடிக்கும் ஜன நாயகன் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் “கயல்” என்ற வேடத்தில் பூஜா ஹெக்டே நடித்திருப்பதாக படக்குழு ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டிருந்தது.

இதையும் படிங்க: டியூட் படத்தின் டிக்கெட் முன்பதிவு எப்போட் தொடங்குது தெரியுமா? அப்டேட் கொடுத்த படக்குழு

இந்த படத்தைத் தொடர்ந்து சுமார் 3 வருடங்களுக்கு பின் மீண்டும் தெலுங்கு மொழியில் படத்தில் இணைந்துள்ளார். DQ41 என்ற படத்தில் நடிகர் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் ரவி நெலகுடி இப்படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.