Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Jana Nayagan: கரூர் சோகம்.. தளபதி விஜய்யின் ஜன நாயகன் பட பர்ஸ்ட் சிங்கிள் ஒத்திவைப்பா?

Jana Nayagan First Single Update: தளபதி விஜய்யின் கடைசி திரைப்படமாக உருவாகிவருவது ஜன நாயகன். இந்த படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கியிருக்கும் நிலையில் வரும் 2025 ஜனவரி 9ம் தேதியில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அடுத்த மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக இணையத்தில் தகவல் வைரலாகிவருகிறது.

Jana Nayagan: கரூர் சோகம்.. தளபதி விஜய்யின் ஜன நாயகன் பட பர்ஸ்ட் சிங்கிள் ஒத்திவைப்பா?
விஜய்யின் ஜன நாயகன் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 05 Oct 2025 22:59 PM IST

கோலிவுட் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் ஹெச்.வினோத் (H. Vinoth). இவரின் இயக்கத்தில் இறுதியாக அஜித் குமாரின் துணிவு என்ற படமானது வெளியானது. இந்த படத்தை அடுத்ததாக இவர், தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) ஜன நாயகன் (Jana Nayagan) திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படமானது கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் தளபதி69 (Thalapathy 69) என அறிவிக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து இப்படத்தின் ஷூட்டிங் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்றுவந்த நிலையில், வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ, தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது.

அதைத் தொடர்ந்து, இப்படத்தின் முதல் பாடல் எப்போது வெளியாகவும் என்பது தொடர்பான தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது. அதன்படி ஜன நாயகன் படத்தின் பாடல் ரிலீஸ் அறிவிப்பு, இன்று 2025 அக்டோபர் 5ம் தேதியில் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டநிலையில் கரூர் விவகாரம் (Karur tragedy) தொடர்பாக அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான தகவல் இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டுக்கே பெருமை… இதற்காக நடிகர் அஜித் குமாருக்கு நன்றி…. உதயநிதி ஸ்டாலின் பாராட்டு

ஜன நாயகன் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் ஒத்திவைப்பு :

விஜய்யின் லியோ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இன்றுடன் (2025 அக்டோபர் 5) 2 வருடங்களின் நிலையில், ஜன நாயகன் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதியை இன்று அறிவிக்க படக்குழு ஆரம்பத்தில் திட்டமிட்டுள்ளதாம். இந்நிலையில் கரூர் விவகாரம் நாடு முழுவதும், மக்களிடையே தற்போது வைரலாக பேசப்பட்டுவரும் நிலையில், முதல் சிங்கிள் ரிலீஸ் தேதியை படக்குழு தள்ளிவைத்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : துணை நடிகர் டூ பிக்பாஸ் தொகுப்பாளர்.. விஜய் சேதுபதி கடந்து வந்த பாதை

அதன்படி, ஜன நாயகன் படத்தின் முதல் பாடல் வரும் 2025 அக்டோபர் 20ம் தேதியில் தீபாவளியுடன் வெளியாகவிருந்த நிலையில், இப்படலானது 2025 நவம்பர் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக 2025 தீபாவளிக்கு ஜன நாயகன் படத்திலிருந்து எந்த அப்டேட்டும் வெளியாவதற்கு வாய்ப்புகள் குறைவுதான் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜன நாயகன் திரைப்படத்தின் டீசர் தொடர்பாக படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு :

இந்த ஜன நாயகன் படமானது அரசியல் தொடர்பான மாறுபட்ட கதைக்களத்தில் தயாராகியுள்ளதாம். இதில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

மேலும் நடிகர்கள் பிரியாமணி, மமிதா பைஜூ, டிஜே அருணாச்சலம், நரேன், பாபி தியோல், ஸ்ருதி ஹாசன், வரலட்சுமி சரத்குமார் என பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் 3 மாதங்கள் மட்டும் இருக்கும் நிலையில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது.