வணங்கான் படத்தில் மிஸ்ஸானது சூர்யா 46-ல் கிடைச்சுடுச்சு – நடிகை மமிதா பைஜூ
Actress Mamitha Baiju: மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி தற்போது தென்னிந்திய சினிமாவில் பலப் படங்களில் கமிட்டாகி தொடர்ந்து நடித்து வருகிறார் நடிகை மமிதா பைஜூ. இவரது நடிப்பில் தற்போது தமிழ் சினிமாவில் டியூட் படம் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது.

தமிழ் சினிமாவில் இயக்குநர் பாலா (Director Bala) இயக்கத்தில் இறுதியாக திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் வணங்கான். இந்தப் படம் கடந்த 10-ம் தேதி ஜனவரி மாதம் 2025-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் அருண் விஜய் நாயகனாக நடித்து இருந்தார். இதில் நடிகர் சூர்யா முன்னதாக நாயகனாக நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் சில காரணங்களுக்காக படத்தில் நடிகர் சூர்யா நடிக்க முடியாமல் போனதாகவும் இதனால் தங்களுக்குள் எந்த விதமான மனக்கசப்பும் இல்லை என்று பாலா மற்றும் சூர்யா இருவரும் தெரிவித்து இருந்தனர். இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து இந்தப் படத்தில் மலையாள நடிகை மமிதா பைஜூ நடிப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் சில காரணங்களால் அந்தப் படத்தில் நடிப்பதில் இருந்து விலகினார். அதற்கு காரணமாக இயக்குநர் பாலா மமிதா பைஜுவை ஷூட்டிங் நடைப்பெற்ற போது அடிக்க கை ஓங்கியதால் பிரச்னை ஏற்பட்டு நடிப்பதில் இருந்து விலகியதாக தெரிவித்தார். ஆனால் இதனை நடிகை மமிதா பைஜூ மறுத்தது குறிப்பிடத்தக்கது.




சூர்யா 46 படத்தால் மகிழ்ச்சியடைந்த நடிகை மமிதா பைஜூ:
இந்த நிலையில் நடிகை மமிதா பைஜூ சமீபத்தில் மலையாளத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் வணங்கான் படத்தில் சூர்யா உடன் நடிக்க இருந்த வாய்ப்பு கைவிட்டுப்போனபோது மிகவும் வருத்தப்பட்டதாகவும் அதனைத் தொடர்ந்து சூர்யா 46 படத்தில் சூர்யா உடன் இணைந்து ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். இந்தப் பேட்டி தற்போது சூர்யா ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… தல டாஸ்கால் பிக்பாஸ் வீட்டில் தொடரும் சண்டை… வைரலாகும் வீடியோ!
சூர்யா ரசிகர்களிடையே கவனத்தை ஈர்க்கும் நடிகை மமிதா பைஜூ பேசிய வீடியோ:
Exclusive : @_mamithabaiju about #Suriya46 ❤️🔥 pic.twitter.com/ewJopRywaf
— Suriya Fans Trends (@Trendz_Suriya) October 15, 2025
Also Read… இயக்குநருடன் கருத்து வேறுபாடு… மகுடம் படத்தை தானே இயக்குகிறார் விஷால்!