Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ராமின் இயக்கத்தில் எனக்கு மிகவும் பிடித்தப் படம் பேரன்பு – இயக்குநர் வெற்றிமாறன்

Director Vetrimaaran: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் வெற்றிமாறன். இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் இயக்குநர் ராம் இயக்கத்தில் தனக்கு மிகவும் பிடித்தப் படம் என்று பேரன்பு படத்தை குறிப்பிட்டு பேசியுள்ளார். அது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

ராமின் இயக்கத்தில் எனக்கு மிகவும் பிடித்தப் படம் பேரன்பு – இயக்குநர் வெற்றிமாறன்
இயக்குநர் வெற்றிமாறன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 16 Oct 2025 18:38 PM IST

தமிழ் சினிமாவில் மனித உணர்வுகளையும், உறவுகளையும் மையமாக வைத்து படங்களை இயக்கி தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இயக்குநர் தான் இயக்குநர் ராம் (Director Ram). இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இயக்குநர் ராம் எழுதி இயக்கிய படம் பேரன்பு. கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப்ப் பெற்றது. இந்தப் படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மம்முட்டி நாயகனாக நடித்து இருந்தார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்து இருந்த நிலையில் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ ராஜலட்சுமி பிலிம்ஸ் சார்பாக தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் தயாரித்து இருந்தார்.

இந்தப் படத்தில் நடிகர் மம்முட்டி உடன் இணைந்து நடிகர்கள் அஞ்சலி, சாதனா, அஞ்சலி அமீர், லிசி ஆண்டனி, வடிவுக்கரசி, லிவிங்ஸ்டன், அருள்தாஸ், பாவெல் நவகீதன், சண்முகராஜன், பி.எல்.தேனப்பன், ஜி.ஆர்.ஆதித்யா, பூ ராம், நிதிஷ் வீரா, அரியானா ரோமானோ, பாவா செல்லதுரை, சமுத்திரக்கனி, ஜே. சதீஷ் குமார் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.

அந்தப் படம் உண்மையிலேயே பேரன்புதான்:

இந்த நிலையில் முன்னதாக பேட்டி ஒன்றில் பேசிய இயக்குநர் வெற்றிமாறனிடம் இயக்குநர் ராம் இயக்கத்தில் உங்களுக்கு மிகவும் பிடித்தப் படம் என்ன என்று கேள்வி எழுப்பப்படுகின்றது. அதற்கு பதிலளித்த இயக்குநர் வெற்றிமாறன் எனக்கு ராமின் இயக்கத்தில் மிகவும் பிடித்தப் படம் பேரன்பு தான்.

அது படத்தின் பெயரைப் போல உண்மையிலேயே பேரன்புதான். ராம் ஒரு இயக்குநராகவும் மனிதரகாவும் கற்றது தமிழ் படத்தில் இருந்து எப்படி வளர்ந்தார் என்பதற்கு சான்றாக அந்தப் படம் இருக்கும் என்றும், ஒரு இயக்குநராகவும் எழுத்தாளராகவும் ராம் மனிதர்களை எப்படி காதலிக்கிறார் என்பதுதான் அதில் தெரிகிறது என்றும் இயக்குநர் வெற்றிமாறன் அந்தப் பேட்டியில் தெரிவித்து இருப்பார். இந்தப் பேட்டி ரசிகர்களிடையே தற்போது கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… 3 படம் முதல் மதராஸி படம் வரை… பர்த்டே பாய் அனிருத் ரவிச்சந்தரின் இசைப் பயணம் ஒரு பார்வை!

இணையத்தில் கவனத்தை ஈர்க்கும் இயக்குநர் வெற்றிமாறன் பேச்சு:

 

View this post on Instagram

 

A post shared by Wide Angle (@wideangle._)

Also Read… சட்டம் பொண்ணுங்க சொன்னா நம்பும்பா… ஆண்பாவம் பொல்லாதது ட்ரெய்லர் இதோ!