AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Kara Movie: ‘கர’ படத்தின் டப்பிங் பணியை முடித்த தனுஷ்? – இணையத்தில் வைரலாகும் தகவல்!

Dhanushs Kara Movie Update : தென்னிந்திய சினிமாவில் சிறந்த நாயகனாக இருந்துவருபவர் தனுஷ். இவரின் நடிப்பில் ஆக்ஷன் திரில்லர் கதைக்களத்தில் தயாராகியுள்ள படம்தான் கர. இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், தற்போது இதன் டப்பிங்கை தனுஷ் முடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகிறது.

Kara Movie: ‘கர’ படத்தின் டப்பிங் பணியை முடித்த தனுஷ்? – இணையத்தில் வைரலாகும் தகவல்!
தனுஷ் கர திரைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 08 Feb 2026 11:06 AM IST

இயக்குநர் விக்னேஷ் ராஜா (Vignesh Raja) இயக்கத்தில், தனுஷ் (Dhanush) நடித்துள்ள ஆக்ஷன் திரில்லர் திரைப்படம்தான் கர (Kara). இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துவரும் நிலையில், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் (GV. Prakahs Kumar) இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் தனுஷின் பல படங்கள் உருவாகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த விதத்தில் கர படத்தில் தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் முதல் முறையாக தனுஷிற்கு ஜோடியாக இணைந்துள்ளார். இப்படமானதுகிராமத்தை சார்ந்த அதிரடி திரில்லர் கதைக்களத்தில் தயாராகிவரும் நிலையில், விரைவில் வெளியாகும் என ஏதிர்பார்க்கப்படுகிறது.

அந்த விதத்தில் இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், தனுஷ் தனது டப்பிங் பணியை முழுவதுமாக முடித்துள்ளாராம். இது குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: முட்ட கலக்கி.. கென் கருணாஸின் ‘யூத்’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு!

தனுஷின் கர திரைப்பட டீசர் குறித்து படக்குழு வெளியிட்ட வீடியோ பதிவு:

தனுஷின் கர திரைப்படத்தின் ரிலீஸ் அப்டேட் :

இந்த கர திரைப்படமானது தனுஷின் 54வது படமாக தயாராகியுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2025 ஜூலை மாதத்தில் தொடங்கிய நிலையில், டிசம்பர் மாதத்தின் இறுதியில் சிறப்பாக நிறைவடைந்தது. இப்படம் ஷூட்டிங் தொடங்கி சில மாதங்களிலே நிறைவடைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் தனுஷ் மற்றும் மமிதா பைஜுவுடன் நடிகர்கள் ஜெயராம், சுராஜ் வெஞ்சாரமூடு. எம்.எஸ். பாஸ்கர், கருணாஸ் மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இதையும் படிங்க: ரூ500ல் இருந்த மகிழ்ச்சி.. கோடியில் சம்பளம் வாங்கும்போது இல்லை – அனிருத் பேச்சு!

இந்த படமானது பேமிலி பொழுதுபோக்கு, காதல், எமோஷனல் மற்றும் ஆக்ஷ்ன் திரில்லர் என கலவையான கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இந்நிலையில் இப்படம் இந்த 2026 பிப்ரவரி மாதத்தில் வெளியாகும் என ஆரம்பத்தில் தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் அறிவித்திருந்த நிலையில், இன்னும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை. அதன்படி இப்படத்தை 2026 ஏப்ரல் மாதத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விரைவில் இந்த கர திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டுவருகிறது.

Follow Us