Anirudh: ரூ500ல் இருந்த மகிழ்ச்சி.. கோடியில் சம்பளம் வாங்கும்போது இல்லை – அனிருத் பேச்சு!
Anirudhs Emotional Share : தென்னிந்திய சினிமாவில் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் அனிருத் ரவிச்சந்தர். இவர் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில், தனது சிறுவயது சந்தோசம் குறித்தும், தற்போது கோடிகளில் சம்பளம் வாங்குவது குறித்தும் பகிர்ந்துகொண்ட விஷயம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இசையமைப்பாளராக தென்னிந்திய சினிமாவையே தனது கைக்குள் வைத்திருப்பவர் அனிருத் ரவிச்சந்தர் (Anirudh Ravichander). இவர் தமிழில் பிரபல இசையமைப்பாளராக இருந்துவந்த நிலையில், தற்போது தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளிலும் படங்களுக்கு இசையமைத்துவருகிறார். இவரின் இசையமைப்பில் தமிழில் தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் தனுஷ் (Dhanush) வரை பல உச்ச நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. அந்த விதத்தில் இவர் தற்போது தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழி படங்களிலும் இசையமைத்துவருகிறார். இவர் தளபதி விஜய்யின் இறுதி திரைப்படமான ஜன நாயகன் (Jana Nayagan) திரைப்படத்திற்கும் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் (Rajinikanth) அடுத்தடுத்த படங்களுக்கும் இவர்தான் இசையமைத்துவருகிறார் என்பது தெரிந்ததே. அந்த விதத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்த அனிருத், தனது சிறுவயது சந்தோசம், தற்போது இல்லை என தெரிவித்துள்ளர். இது தொடர்பான தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் பட ஓடிடி- சாட்டிலைட் உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்?
தனது சிறுவயது சந்தோஷம் குறித்து அனிருத் நினைவுகூர்ந்த விஷயம் :
அதில் பேசிய அனிருத், “நான் சிறுவயதில் திருமண நிகழ்ச்சிகளுக்கு இசையை வாசிக்க செல்லும்போது, எனக்கு ரூ 500 சம்பளமாக கொடுத்தார்கள். அப்போது எனக்கு ஒரு இனம்புரியாத மகிழ்ச்சியானது மனதில் ஏற்படும். சில நிகழ்ச்சியில் சம்பளம் தராமல், வெறும் வெற்றிலை பாக்கு மட்டும் கொடுத்துவிட்டு நன்றி சொல்லி அனுப்பிவிடுவார்கள்.
இதையும் படிங்க: நான் சரியான பாதையில் செல்கிறேன் என்பதை அது உறுதிசெய்கிறது – அஜித் குமார் பேச்சு!
இப்போது எனது சம்பளம் கோடிகளில் மாறிவிட்டது. பரபரப்பாக நான் இசையமைக்கும் பணிகளில் இருந்தாலும், முன்பு இருந்த சந்தோசம் இப்போது எனக்கு இல்லை. என்னதான், நான் வேலையில் மூழ்கியிருந்தாலும், எனது சிறியவயது சந்தோஷத்தை மறக்கமுடியவில்லை” என அதில் அனிருத் தெரிவித்திருந்தார்.
இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்ட எக்ஸ் பதிவு:
13 billion streams on @Spotify @spotifyindia ❤️ Thank you fans and music lovers 🙏🏻 pic.twitter.com/Xo70SMVkc6
— Anirudh Ravichander (@anirudhofficial) January 17, 2026
இசையமைப்பாளர் அனிருத் தற்போது தமிழில் பல படங்களுக்கு இசையமைத்துவருகிறார். தலைவர்173 திரைப்படம், தெலுங்கில் அல்லு அர்ஜுனின் AA23, தி பாரடைஸ், மேஜிக், லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, டிசி,, ஜெயிலர் 2, அரசன், கிங் என பல படங்களுக்கு இசையமைத்துவருகிறார். இவரின் இசையமைப்பில் உருவான ஜன நாயகன் படமானது இன்னும் வெளியாகவில்லை. இப்படத்திலிருந்து இதுவரை 4 பாடல்கள் வெளியாகியிருந்த நிலையில், மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சில புது படங்களில் இவர் ஒப்பந்தமாகியுள்ள நிலையில், இது குறித்த அறிவிப்புகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.