AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Ajith Kumar: நான் சரியான பாதையில் செல்கிறேன் என்பதை அது உறுதிசெய்கிறது – அஜித் குமார் பேச்சு!

Ajith About Fans Support: தென்னிந்திய சினிமாவில் பிரபாலமான் ஒருவராக இருப்பவர் அஜித் குமார். இவர் தற்போது கார் ரேஸில் பிசியாக இருந்துவரும் நிலையில், சமீபத்தில் ஆங்கில பத்திரிகை சந்திப்பில், தனது ரசிகர்களின் ஆதரவு மற்றும் அதை அவர் கையாளும் விதம் குறித்தும் அவர் தெரிவித்துள்ளார்.

Ajith Kumar: நான் சரியான பாதையில் செல்கிறேன் என்பதை அது உறுதிசெய்கிறது – அஜித் குமார் பேச்சு!
அஜித் குமார்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 07 Feb 2026 10:37 AM IST

தமிழில் அதிக ரசிகர்கள் இருக்கக்கூடிய நடிகர்களில் ஒருவர் அஜித் குமார் (Ajith Kumar). இவர் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பெரிய படங்களில் நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் மட்டுமே கடந்த 2025ம் ஆண்டில் விடாமுயற்சி (Vidaamuyarchi) மற்றும் குட் பேட் அக்லி (Good Bad Ugly) என இரு திரைப்படங்கள் வெளியாகியிருந்தது. இதில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்த குட் பேட் அக்லி படமானது சிறப்பான வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் திரைப்படமாக வெற்றி பெற்றிருந்தது. இந்த படங்களின் ஷூட்டிங்கை முடித்த அஜித் குமார் கடந்த 2024ம் ஆண்டு இறுதியிலே கார் ரேஸில் (Car Race) இறங்கிவிட்டார். இவர் தொடர்ந்து கிட்டத்தட்ட 1 ஆண்டுக்கும் மேலாக கார் ரேஸ் பயிற்சி மற்றும் போட்டியில் பங்குபெற்றுவருகிறார். இதுவரை கிட்டத்தட்ட 5 கார் ரேஸில் இவரின் அணியுடன் கலந்துகொண்ட நிலையில், 4 போட்டிகளில் வெற்றிபெற்றிருக்கிறார். மேலும் துபாயில் சமீபத்தில் நடந்த ரேஸில், அஜித்தின் கார் தீப்பற்றிய நிலையில், அவரின் அணி அந்த போட்டியிலிருந்து விலகியிருந்தது.

அந்த விதத்தில் தொடர்ந்து, விடாமல் கார் ரேஸ் பயிற்சியில் அஜித் குமார் இருந்துவருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஆங்கில பத்திரிகை நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த அஜித் குமார், தனது ரசிகர்கள் தனக்கு அளிக்கும் ஆதரவு குறித்து வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: என்னைக்கும் விடாமுயற்சி…1- வருடத்தை கடந்த அஜித் குமாரின் ‘விடாமுயற்சி’.. படக்குழு வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ!

தனது ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவு குறித்து பேசிய அஜித் குமார்:

அந்த நேர்காணலில் பேசிய அஜித் குமார், “எனக்கு இது நிறைய அர்த்தங்களை தருகிறது. சில நேரங்களில் பலரும் தங்களின் கம்ஃபர்ட் சோனை விட்டுவரும்போது பல விமர்சனங்கள் மற்றும் பல தடைகளை தாண்டித்தான் வரவேண்டும். நானும் அதை கடந்துதான் வந்திருக்கிறேன். மேலும் எனது ரசிகர்கள் எனக்கு மலேசியா மற்றும் துபாயில் மட்டுமில்லாமல் பல்வேறு இடங்களிலும் எனக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: யாரும் எதிர்பார்க்காத காம்போ.. சியான்63 படத்தில் விக்ரமிற்கு ஜோடியாகும் பிரபல நடிகை.. யார் தெரியுமா?

நான் சரியான பாதையில் செல்கிறேன் என்பதை இது எனக்கு உறுதியளிக்கிறது. உண்மையைச் சொன்னால், நான் இதை எனக்காக மட்டும் செய்யவில்லை. மேலும் எனக்கு இந்த ரேஸ் விளையாட்டு மிகவும் பிடிக்கும், மேலும் என்னால் முடிந்தவரை ஒரு கார் ரேஸராக இருக்க விரும்புகிறேன்” என அதில் அவர் வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.

ரசிகர்கள் குறித்து அஜித் குமார் பேசிய வீடியோ பதிவு:

நடிகர் அஜித் குமார் இன்னும் கார் ரேஸில் பிசியாக இருக்கும் நிலையில், இன்னும் படங்களில் எதிலும் நடிக்கவில்லை. இவர் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், மீண்டும் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படமானது பேமிலி என்டர்டெயினர் கதைக்களத்தில் உருவாகவுள்ளதாம். இதில் அஜித் குமாருடன் ஸ்ரீலீலா கதாநாயகியாக நடிக்கவுள்ளாராம். மேலும் இதற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பதாக கூறப்படுகிறது. இதன் ஷூட்டிங் 2026ம் ஆண்டு பிப்ரவரி இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us