Toxic Movie: ‘டாக்சிக்’ படத்தில் ரெட்டை வேடத்தில் நடிக்கும் யாஷ்.. வெளியானது கதாபாத்திர அறிமுக போஸ்டர்!
Toxic Movie Update: தென்னிந்திய சினிமாவில் பிரபல நாயகனாக இருந்துவருபவர் யாஷ். இவரின் நடிப்பில் மிக பிரமாண்டமாக தயாராகியுள்ள திரைப்படம் டாக்சிக். இப்படத்தில் யாஷ் ரெட்டை வேடத்தில் நடித்திருக்கும் நிலையில், அவரின் 2வது கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியாகியுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
கே.ஜி.எஃப் என்ற திரைப்படத்தின் மூலமாக பான் இந்திய அளவிற்கு பிரபலமான நடிகர்தான் யாஷ் (Yash). இவரின் நடிப்பில் வெளியான இப்படமானது மக்கள் மத்தியில் மிக பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்றிருந்தது. இதையடுத்து இவரின் நடிப்பில் கே.ஜி.எஃப் 2 (KGF 2) படமும் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றியைப் பெற்றிருந்தது. இந்த படங்ககளின் வரிசையில், இவர் புதிதாக நடித்துள்ள பிரம்மாண்ட திரைப்படம்தான் டாக்சிக் : ஏ ஃபரி டேல் ஃபார் கிரௌன் அப்ஸ் (Toxic: A Fairy Tale for Grown Ups). இப்படத்தில் நடிகர் யாஷ் நடித்திருக்கும் நிலையில், பெண் இயக்குநர் கீது மோகன்தாஸ் (Geetu Mohandas) இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் வெறும் நடிகனாக மட்டுமில்லாமல் நடிகர் யாஷ், தயாரிப்பாளர் மற்றும் கதை எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். அந்த விதத்தில் இந்த படமானது மிக பிரம்மாண்டமாக தயாராகியுள்ளது. மேலும் இப்படத்தில் பாலிவுட் முதல் மலையாளம் போன்ற பல்வேறு திரைப் பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். இப்படமானது வரும் 2026 மார்க்க 19ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
மேலும் நேற்று 2026 பிப்ரவரி 20ம் தேதியில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்ட நிலையில், ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது அந்த வகையில் இப்படத்தில் யாஷ் ரெட்டை வேடத்தில் நடித்துள்ளார் என்பது தெரியவந்தது. ஏற்கனவே இவர் “ரயா” என்ற வேடத்தில் நடித்திருக்கும் நிலையில், மேலும் இவரின் 2வது கதாபாத்திரத்தின் அறிமுக போஸ்டர் வெளியாகியுள்ளது. அந்த 2வது கதாபாத்திரத்தில் யாஷ், “டிக்கெட்” (Ticket) என்ற வேடத்தில் நடித்துள்ளதாக அறிவிப்பது வெளியாகியுள்ளது.




இதையும் படிங்க: வரலட்சுமி சரத்குமார் இயக்கி நடிக்கும் சரஸ்வதி படத்தின் ட்ரெய்லரை வெளியிட்ட நடிகர் நானி!
டாக்சிக் பட தனது 2வது கதாபாத்திரம் குறித்து யாஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவு:
Your ‘Ticket’ to Hell #Toxic In Cinemas Worldwide from 19-03-2026
Kannada – https://t.co/UTLyUWnbKV
Hindi – https://t.co/XDSCoKljYl
Telugu – https://t.co/T5O6bZmtt3
Tamil – https://t.co/2791WirnvL
Malayalam – https://t.co/CM9pkqv1Js#ToxicTheMovie#ToxicOnMarch19th… pic.twitter.com/0OOCBaPugZ— Yash (@TheNameIsYash) February 21, 2026
இந்த டாக்டிக் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டிருந்தது. கே.ஜி.எஃப் படங்களை காட்டிலும் இப்படம் மிகவும் பிரம்மாண்டமாகவும், ஹாலிவுட் பட தரத்திலும் தயாராகியுள்ளது. இப்படத்தில் நடிகர் யாஷுடன், நயன்தாரா, டோவினோ தாமஸ், கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ஹுமா குரேஷி மற்றும் ருக்மிணி வசந்த் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் நடிகர் யாஷ், ரயா மற்றும் டிக்கெட் என இரு வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆமா யார் ஹீரோ? வெளியானது கமல் ஹாசன் – ரஜினிகாந்த் படத்தின் புரோமோ வீடியோ!
இந்த டாக்சிக் படமானது தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலம் உள்ளிய பல்வேறு மொழிகளில் தயாராகியுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் மற்றும் இறுதிக்கட்ட பணிகள் சிறப்பாக முடிந்த நிலையில், வரும் 2026 மார்ச் 19ம் தேதியில் வெளியாக காத்திருக்கிறது. இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் மக்கள் மத்தியில் இருந்துவருகிறது.