Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Yash : ராமாயணம் படத்தில் யாஷுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை.. அட இவரா?

Ramayana Part 1 Update : பான் இந்திய நடிகர்களில் ஒருவராகக் கருதப்படுபவர் நடிகர் யாஷ். கடந்த 2018ம் ஆண்டு வெளியான கேஜிஎப் படத்தில் நடித்து மிகவும் பிரபலமானார். இதைத் தொடர்ந்து வரலாற்றுத் திரைப்படமான ராமாயணம் படத்தில் ராவணனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாகப் பிரபல நடிகை நடக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது. இது குறித்து விவரமாகப் பார்க்கலாம்.

Yash : ராமாயணம் படத்தில் யாஷுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை.. அட இவரா?
நடிகர் யாஷ் Image Source: Social Media
barath-murugan
Barath Murugan | Published: 17 May 2025 18:50 PM

கன்னட சினிமாவில் முன்னணி நடிகர்களில்  ஒருவராகக் கலக்கி வருபவர் யாஷ் (Yash). இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் கேஜிஎப் சாப்டர் 2 (KGF Chapter 2). கடந்த 2022ம் ஆண்டு வெளியாகி இந்த படமானது பான் இந்தியா முழுவதும் ஹிட்டாகியது . இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் யாஷ், இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் டாக்சிக் (Toxic) என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் அறிவிப்புகள் கடந்த 2023ம் ஆண்டில் இறுதியில் அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து மிகவும் பிரம்மாண்டமாகத் தயாராகி வருகிறது. கிட்டத்தட்டப் பல கோடிகளில் இந்த படம் உருவாகிவருவதாகக் கூறப்படுகிறது. இதில் தமிழ் முன்னணி நாயகி நயன்தாராவும் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். இந்த படங்களைத் தொடர்ந்து நடிகர் யாஷ் இந்தியில் நடித்து வரும் படம் ராமாயணம் பார்ட் 1 (Ramayana Part 1).

இந்த படத்தை இயக்குநர் நிதேஷ் திவாரி (Nitesh Tiwari)  இயக்கிவருகிறார். இந்த படத்தில் நடிகர் யாஷ் ராவணனாக நடிக்கிறார். ராவணனின் மனைவி மண்டோதரியின் கதாபாத்திரத்தில் பிரபல நடிகை காஜல் அகர்வால்  (Kajal Aggarwal) நடிப்பதாகத் தகவல்கள் பரவி வருகிறது. இந்த தகவல் தகவலைத் தினத்தந்தி செய்தி இணையதளத்தில் பகிர்ந்துள்ளது . தற்போது இந்த தகவலானது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் படு வைரலாகி வருகிறது.

நடிகை காஜல் அகர்வாலின் இன்ஸ்டாகிராம் பதிவு :

நடிகை காஜல் அகர்வால் நடித்துவரும் படங்கள் :

நடிகை காஜல் அகர்வால் இறுதியாக நடிகர் சல்மான்கான் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். ஆனால் இந்த படம் அவருக்கு அந்த அளவிற்கு வரவேற்பைக் கொடுக்கவில்லை, மேலும் தமிழிலும் இந்தியன் 2 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தின் நிலைமை என்னவென்று அனைவருக்கும் தெரிந்ததே.

இந்த தோல்வி படங்களைத் தொடர்ந்து நடிகரும், தயாரிப்பாளருமான விஷ்ணு மஞ்சு நடிப்பில் உருவாகியுள்ள கண்ணப்பா படத்தில் பார்வதி தேவியாக நடித்துள்ளார். இந்த படங்களைத் தொடர்ந்துதான் நடிகை காஜல் அகர்வால் , இயக்குநர் நிதிஸ் திவாரியின் இயக்கத்தில் உருவாகிவரும் இராமாயண பார்ட் 1 படத்தில் மண்டோதரி கதாபாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது,

ராமாயணம் பார்ட் 1 படம் :

இந்த படத்தில் நடிகர் ரன்பீர் கபூர் ராமனாக நடிக்கிறார், மேலும் நடிகை சாய் பல்லவி சீதையாகவும் நடித்து வருகிறார். மேலும் நடிகர் யாஷ் ராவணனாக நடித்து வருகிறார். ஒட்டுமொத்த பான் இந்திய பிரபலங்கள் பலரும் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படமானது 2 பாகங்களாக உருவாகிவருகிறது. முதல் பாகம் வரும் 2026ம் ஆண்டு தீபாவளியை ஒட்டி வெளியாகவுள்ளதாம்.

அதைத் தொடர்ந்து பாகம் 2 வரும் 2027ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை ஒட்டி வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் தீவிரமாக நடந்துவரும் நிலையில், இது குறித்தான அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

அதிகப்படியான தண்ணீர் குடிப்பதும் ஆபத்தா? இவ்வளவு ரிஸ்க் இருக்கு!
அதிகப்படியான தண்ணீர் குடிப்பதும் ஆபத்தா? இவ்வளவு ரிஸ்க் இருக்கு!...
எது திராவிட மாடல், எது காவி மாடல் என தெளிவுபடுத்திய மு.க ஸ்டாலின்
எது திராவிட மாடல், எது காவி மாடல் என தெளிவுபடுத்திய மு.க ஸ்டாலின்...
வெடிக்கும் மோதல்.. கூட்டத்தை தொடர்ந்து புறக்கணிக்கும் அன்புமணி..
வெடிக்கும் மோதல்.. கூட்டத்தை தொடர்ந்து புறக்கணிக்கும் அன்புமணி.....
மைசூரில் உங்களுக்குத் தெரியாத 7 சாகச விளையாட்டுகள் பற்றி இதோ..!
மைசூரில் உங்களுக்குத் தெரியாத 7 சாகச விளையாட்டுகள் பற்றி இதோ..!...
ஸ்மார்ட்போன் பேட்டரி சீக்கிரம் காலியாகுதா? இத டிரை பண்ணுங்க!
ஸ்மார்ட்போன் பேட்டரி சீக்கிரம் காலியாகுதா? இத டிரை பண்ணுங்க!...
மழையால் ஐபிஎல் 2025க்கு மீண்டும் சதி..? தவிக்கும் கேகேஆர்..!
மழையால் ஐபிஎல் 2025க்கு மீண்டும் சதி..? தவிக்கும் கேகேஆர்..!...
கமலின் தக் லைஃப் பட டிரெய்லரில் மிகப்பெரிய டிவிஸ்ட்!
கமலின் தக் லைஃப் பட டிரெய்லரில் மிகப்பெரிய டிவிஸ்ட்!...
இது நடந்தால் நான் இந்தியா வருவேன்! விராட் கோலிக்கு ஆதரவாக ஏபிடி!
இது நடந்தால் நான் இந்தியா வருவேன்! விராட் கோலிக்கு ஆதரவாக ஏபிடி!...
சாலையில் ஏற்பட்ட பள்ளம்: தலைகீழாக கவிழ்ந்த காருக்குள் இருந்த பேபி
சாலையில் ஏற்பட்ட பள்ளம்: தலைகீழாக கவிழ்ந்த காருக்குள் இருந்த பேபி...
சிகரெட் வாங்கித்தர மறுத்த மென்பொருள் ஊழியர் கொலை..!
சிகரெட் வாங்கித்தர மறுத்த மென்பொருள் ஊழியர் கொலை..!...
ஷ்ரேயாஸ் ஐயர் புறக்கணிப்பா..? இந்தியா ஏ அணியில் இல்லாத இடம்..!
ஷ்ரேயாஸ் ஐயர் புறக்கணிப்பா..? இந்தியா ஏ அணியில் இல்லாத இடம்..!...