Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Food Recipe: மழைக்காலத்தில் மாலைநேர ஸ்நாக்ஸ்.. சூடான ப்ரான் பக்கோடா ரெசிபி இதோ!

Prawn Pakoda Recipe: வீட்டிலேயே சுவையானதாகவும், ஆரோக்கியமானதாகவும் நீங்கள் ஏதாவது ருசிக்க விரும்பினால் இறால் பக்கோடாவையை ட்ரை செய்யலாம். இதை செய்ய அதிக நேரமும் எடுக்காது, அதிக வேலையும் இருக்காது. அந்தவகையில், சுவையான இறால் (Prawns) பக்கோடா எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்.

Food Recipe: மழைக்காலத்தில் மாலைநேர ஸ்நாக்ஸ்.. சூடான ப்ரான் பக்கோடா ரெசிபி இதோ!
ப்ரான் பக்கோடா ரெசிபிImage Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 25 Nov 2025 16:24 PM IST

மழைக்காலம் (Rainy Season) வந்தாலே மாலை நேரத்தில் ஏதாவது ருசிக்க வேண்டும் என்று தோன்றும். அதுவும் அசைவ ஸ்நாக்ஸாக இருந்தால் அதன் சுவையே வேறு மாதிரியாக இருக்கும். பலரும் மழை பெய்யும்போது சில்லி சிக்கன் உள்ளிட்ட அசைவ ஸ்நாக்ஸ்களை சுவைக்க விரும்புவார்கள். இருப்பினும், கடைகளில் செய்யப்படும் இவை சுவையாக இருந்தாலும் ஆரோக்கியமானதாக இருக்காது. வீட்டிலேயே சுவையானதாகவும், ஆரோக்கியமானதாகவும் நீங்கள் ஏதாவது ருசிக்க விரும்பினால் இறால் பக்கோடாவையை ட்ரை செய்யலாம். இதை செய்ய அதிக நேரமும் எடுக்காது, அதிக வேலையும் இருக்காது. அந்தவகையில், சுவையான இறால் (Prawns) பக்கோடா எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்.

ALSO READ: மண மணக்கும் மட்டன் தால்சா.. பிரியாணிக்கு இப்படி ஒரு சைடிஸா?

தேவையான பொருட்கள்

  • இறால்: 250 கிராம்
  • கான்ப்ளார் மாவு: 1/2 கப்
  • மஞ்சள் தூள்: 1/2 ஸ்பூன்
  • இஞ்சி-பூண்டு விழுது: 1 ஸ்பூன்
  • நறுக்கிய வெங்காயம்: 1 நடுத்தர அளவு
  • நறுக்கிய பச்சை மிளகாய்: 2-3
  • அரிசி மாவு: 3-4 ஸ்பூன்
  • சிவப்பு மிளகாய் தூள்: 1 ஸ்பூன்
  • கரம் மசாலா தூள்: 1 ஸ்பூன்
  • கொத்தமல்லி தூள்: 1 ஸ்பூன்
  • சீரகம்: 1/2 ஸ்பூன்
  • நறுக்கிய கொத்தமல்லி
  • எலுமிச்சை சாறு: 1 தேக்கரண்டி
  • உப்பு: தேவையான அளவு
  • எண்ணெய்: தேவையான அளவு

ALSO READ: ஜில் மழையுடன் ஹாட் ஸ்நாக்ஸ்.. சிம்பிள் & டேஸ்ட் உருளைக்கிழங்கு நக்கட்ஸ் ரெசிபி!

இறால் பக்கோடா செய்வது எப்படி..?

  1. முதலில் மீன் மார்க்கெட்களில் வாங்கி வந்த இறால்களை நன்கு கழிவுகளை நீக்கி சுத்தம் செய்து எடுக்கவும். சுத்தம் செய்யப்பட்ட இறால்களை ஒரு பெரிய கிண்ணத்தில் போட்டு மேலே குறிப்பிட்ட அளவிலான உப்பு, தனி மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து எடுத்து கொள்ளவும். இதை சுமார் 15-20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
  2. அதன்பிறகு, மரைனேட் செய்யப்பட்ட இறால்களின் கிண்ணத்தில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, இஞ்சி-பூண்டு பேஸ்ட், கரம் மசாலா மற்றும் கொத்தமல்லி தழைகளை சேர்த்து மீண்டும் ஒருமுறை கலக்கவும்.
  3. இதனுடன் சிறிதளவு சீரகம், கான்ப்ளார் மாவு மற்றும் அரிசி மாவு சேர்க்கவும். இப்போது மீண்டும் ஒருமுறை அனைத்து பொருட்களையும் நன்றாக பிசையவும்.
  4. இவற்றை சிறிதுநேரம் அப்படியே விடும்போது வெங்காயம் மற்றும் இறாலில் இருக்கும் தண்ணீரானது வெளியேறும். எனவே ஆரம்பத்தில் தண்ணீர் சேர்க்க வேண்டாம். உங்களுக்கு இந்த கலவை மிகவும் கெட்டியாக தோன்றினால், லேசாக தண்ணீரை தெளிக்கலாம்.
  5. இப்போது, ஒரு பெரிய கடாயை வைத்து எண்ணெயை ஊற்றி சூடாக்கவும்.
  6. எண்ணெய் போதுமான அளவு சூடானதும், தீயை மிதமான சூட்டில் வைத்து இறால் கலவையை சிறிய பகுதிகளாக அல்லது உருண்டைகளாக வடிவமைத்து, மெதுவாக சூடான எண்ணெயில் விடவும்.
  7. போட்ட இறால் கலவைகள் மிதமான தீயில் பொன்னிறமாக வந்ததும், வெந்துவிட்டதா என்று ஒரு முறை சோதித்து எடுக்கவும்.
  8. எடுத்த இறால் பக்கோடாவை ஒரு டிஸ்யூ பேப்பரில் போட்டால், தேவையற்ற எண்ணெய் பேப்பரில் படியும். அவ்வளவுதான், சூடான, மொறுமொறுப்பான இறால் பக்கோடாவை டோமேடோ கெட்ச்அப்புடன் வைத்து சாப்பிட சூப்பராக இருக்கும்.