Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Food Recipe: மண மணக்கும் மட்டன் தால்சா.. பிரியாணிக்கு இப்படி ஒரு சைடிஸா?

Mutton Dalsa: மட்டன் (Mutton) சாப்பிடுவது நல்லது என்றாலும், அதை மிதமாக சாப்பிட வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள். மேலும், இது அதிக கொழுப்பையும் கொண்டுள்ளது. மட்டனில் புரதத்தை தவிர இரும்பு, துத்தநாகம் மற்றும் வைட்டமின் பி 12 ஆகியவை உள்ளன.

Food Recipe: மண மணக்கும் மட்டன் தால்சா.. பிரியாணிக்கு இப்படி ஒரு சைடிஸா?
மட்டன் தால்சாImage Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 13 Nov 2025 18:30 PM IST

மட்டன் தால்சா என்பது பிரியாணியுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். தென் தமிழகத்தில் ஏதேனும் நல்ல நிகழ்வில் பிரியாணி (Biryani) பரிமாறினால், அதனுடன் மட்டன் தால்சா கண்டிப்பாக இடம்பெற்றிருக்கும். இருப்பினும், இதன் பூர்வீகம் ஹைதராபாத் என்று கூறப்படுகிறது. சிக்கனை காட்டிலும் ஆட்டிறைச்சியில் அதிக புரதம் மற்றும் தாதுக்கள் உள்ளன. மட்டன் (Mutton) சாப்பிடுவது நல்லது என்றாலும், அதை மிதமாக சாப்பிட வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள். மேலும், இது அதிக கொழுப்பையும் கொண்டுள்ளது. மட்டனில் புரதத்தை தவிர இரும்பு, துத்தநாகம் மற்றும் வைட்டமின் பி 12 ஆகியவை உள்ளன. இன்று மட்டன் தால்சா எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்.

ALSO READ: கொங்குநாடு ஸ்டைலில் சூப்பர் டிஷ்! பள்ளிபாளையம் சிக்கன் இப்படி செய்து பாருங்க!

தேவையான பொருட்கள்:

  • எலும்புடன் கூடிய மட்டன் – 250 கிராம்
  • துவரம் பருப்பு – 50 கிராம்
  • கடலை பருப்பு – 50 கிராம்
  • கத்திரிக்காய் – 5
  • முருங்கைக்காய் – 2
  • மாங்காய் – 1
  • பட்டை- சிறிதளவு
  • கிராம்பு – சிறிதளவு
  • ஏலக்காய் – சிறிதளவு
  • பிரிஞ்சி இலை – சிறிதளவு
  • சீரகம் – 1 ஸ்பூன்
  • இஞ்சி – பூண்டு பேஸ்ட்
  • வெங்காயம் – 1 (நறுக்கியது)
  • தக்காளி – 2 (நறுக்கியது)
  • எண்ணெய் – தேவையான அளவு
  • மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
  • கரம் மசாலா – 1 ஸ்பூன்
  • மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
  • மல்லி தூள் – 2 ஸ்பூன்
  • புளி கரைசல்
  • பச்சை மிளகாய் – 3
  • கறிவேப்பிலை – சிறிதளவு
  • கொத்தமல்லி – சிறிதளவு
  • உப்பு – தேவையான அளவு

ALSO READ: சமைத்த உணவுகளை மீண்டும் சூடாக்கி சாப்பிடலாமா? இது ஆரோக்கியத்தை சீர்குலைக்குமா?

மட்டன் தால்சா செய்வது எப்படி..?

  1. முதலில் கடைகளில் வாங்கி வந்த மட்டனை உப்பு மற்றும் மஞ்சள் போட்டு நன்றாக தண்ணீரில் அலசி எடுத்து கொள்ளவும். இப்போது ஒரு குக்கரை எடுத்து, எலும்புடன் கூடிய மட்டன், துவரம் பருப்பு, கடலை பருப்பு, சிறிதளவு மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 6-7 விசில் விடவும்.
  2. விசிலை திறந்து பார்த்து மட்டன் வெந்துவிட்டதா என்பதை சோதித்து பார்த்துவிட்டு, மட்டன் துண்டுகளை மட்டும் தனியாக எடுத்து வைக்கவும். இதனுடன் அதே குக்கரில் உள்ள பருப்புகளை நன்றாக மசித்து கொள்ளவும்.
  3. அடுத்ததாக ஒரு கடாயை வைத்து சூடானதும் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் பட்டை,கிராம்பு, ஏலக்காய், சீரகம் ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும். இதனுடன் வெட்டி வைத்த வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை நன்றாக வதக்கவும்.
  4. வெங்காயம் வதங்கியதும் இஞ்சி- பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். இதனுடன், நறுக்கிய தக்காளி, மிளகாய், மல்லி, கரம் மசாலா சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். நறுக்கிய கத்திரிக்காய், முருங்கைக்காய், பூசணிக்காய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.
  5. காய்கறி பாதி வந்ததும் ஏற்கனவே மசித்து வைத்துள்ள பருப்பையும், மட்டனை சேர்க்கவும். மீண்டும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, தால்சா ஓரளவு கெட்டியாகும் வரை கொதிக்க வைக்கவும். கடைசியாக புளி கரைசலை சேர்த்து சிறிது கிளறி, 10 நிமிடங்கள் 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
  6. அவ்வளவுதான் நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி இறக்கினால் மட்டன் தால்சா ரெடி. இதனை சூடான நெய் சோறு, பிரியாணியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.