Food Recipe: பக்கா டேஸ்டில் மட்டன் தந்தூரி சாப்பிட ஆசையா..? டக்கென செய்யும் ரெசிபி இதோ!
Mutton Tandoori Recipe: நமக்கெல்லாம் பெரும்பாலும் தந்தூரி சிக்கன் (Tandoori Chicken) தந்தூரி பனீர், தந்தூரி கோபி, தந்தூரி காளான் என சில வகைகளே தெரியும். தந்தூரி செய்ய தயிர், மிளகாய் தூள், இஞ்சி- பூண்டு விழுது, கஸ்தூரி மேத்தி, எலுமிச்சை சாறு போன்றவற்றை பயன்படுத்தி கிரில் செய்து சாப்பிடுவார்கள். இதை பிரட்டி எடுக்கும்போது நறுமணம் ஆளை மயக்கும்.
தந்தூரிக்கு இந்தியா முழுவதும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. இதன் சுவைக்காகவே மக்கள் விரும்பி கடைகளில் வாங்கி சாப்பிடுவார்கள். தந்தூரியில் பல வகை என்றாலும், நமக்கெல்லாம் பெரும்பாலும் தந்தூரி சிக்கன் (Tandoori Chicken) தந்தூரி பனீர், தந்தூரி கோபி, தந்தூரி காளான் என சில வகைகளே தெரியும். தந்தூரி செய்ய தயிர், மிளகாய் தூள், இஞ்சி- பூண்டு விழுது, கஸ்தூரி மேத்தி, எலுமிச்சை சாறு போன்றவற்றை பயன்படுத்தி கிரில் செய்து சாப்பிடுவார்கள். இதை பிரட்டி எடுக்கும்போது நறுமணம் ஆளை மயக்கும். இந்த பட்டியலில் தற்போது மட்டன் தந்தூரி (Mutton Tandoori) ரோஸ்டையும் சேர்க்கலாம். இந்த ரெசிபியில் சிறப்பான விஷயம் என்னவென்றால், இதை தயாரிக்க 30 நிமிடங்களே போதுமானது. அந்தவகையில், எளிதாக மட்டன் ரெசிபி எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்.
ALSO READ: மழைக்காலத்தில் சூடாக சாப்பிட சூப்பர் ஸ்நாக்ஸ்.. 5 நிமிடத்தில் டீயுடன் ருசிக்கலாம்..!
தேவையான பொருட்கள்:
- எலும்பில்லாத பெரிய மட்டன் துண்டுகள் – 500 கிராம்
- இஞ்சி-பூண்டு விழுது: 1 ஸ்பூன்
- தயிர்: 1/2 கப்
- சிவப்பு மிளகாய் தூள்: 1-2 ஸ்பூன்
- கரம் மசாலா தூள்: 1/2 ஸ்பூன்
கருப்பு மிளகு தூள்: 1/2 ஸ்பூன் - தந்தூரி மசாலா தூள்: 2 ஸ்பூன் (கடைகளில் கிடைக்கும்)
- மஞ்சள் தூள்: 1/2 ஸ்பூன்
- கொத்தமல்லி தூள்: 1 ஸ்பூன்
- சீரக தூள்: 1 ஸ்பூன்
- எலுமிச்சை சாறு: 2 ஸ்பூன்
- கடுகு எண்ணெய் அல்லது நெய்: 2 ஸ்பூன்
- உப்பு: தேவையான அளவு
- சிவப்பு நிற ஃபுட் கலர் – சிறிதளவு
ALSO READ: மழைக்காலத்தில் மகத்தான ரெசிபி.. ஆரோக்கியமான காளான் சூப் செய்வது எப்படி?




மட்டன் தந்தூரி ரோஸ்ட் செய்வது எப்படி..?
- கடைகளில் வாங்கிய மட்டன் துண்டுகளை நன்கு கழுவி தண்ணீரை வடித்து கொள்ளவும். வாங்கி வந்த மட்டன் சற்று கடினமாக இருந்தால், மட்டன் மீது சிறிது உப்பு தடவி 15-20 நிமிடங்கள் விடவும். இது மட்டன் வேகமாக வேக உதவி செய்யும்.
- அடுத்ததாக ஒரு பாத்திரத்தில் தயிர், இஞ்சி-பூண்டு பேஸ்ட், தனி மிளகாய் தூள், மஞ்சள், கொத்தமல்லி தூள், சீரகத் தூள், கரம் மசாலா, மிளகு தூள், எலுமிச்சை சாறு, தந்தூரி மசாலா தூள், உப்பு மற்றும் கடுகு எண்ணெய் அல்லது நெய் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும். இதனுடன் உங்களுக்கு விருப்பம் இருந்தால் சிறிது ஃபுட் கலர் சேர்க்கலாம்.
- மேலே தயார் செய்த மசாலா கலவையில் மட்டன் துண்டுகளைச் சேர்த்து நன்கு தேய்க்கவும். இப்போது ஃபிரிட்ஜில் குறைந்தது 2 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் ஊறவிடவும்.
- உங்கள் சமையலறையில் இருக்கும் நான்-ஸ்டிக் பான் அல்லது தவாவை சூடாக்கி, அதன் மேற்பரப்பில் சிறிது எண்ணெய் அல்லது நெய்யைத் தடவவும்.
- கடைசியாக நீண்ட நேரம் ஊறவைத்த மட்டன் துண்டுகளை பான் மீது வைத்து, மிதமான தீயில் வைத்து, முன்னும் பின்னும் திருப்பி வெந்ததும் எடுத்தால், சுவையான மட்டன் தந்தூரி ரோஸ்ட் ரெடி.