Monsoon Tips: மழைக்காலத்தில் வீட்டை இப்படி பாரமரிங்க.. எதிர்கால சிக்கலை தடுக்கலாம்!
Monsoon Tips for Home Maintenance: மழைக்காலத்தில் வீட்டை சுத்தமாக வைத்திருக்க தினமும் பாடாத கஷ்டம் பட வேண்டியிருக்கும். அதன்படி, மழைக்காலம் இனிமையானதாக இருந்தாலும், வேலைப்பளுவை அதிகரிக்கிறது. பெரும்பாலும், இதுபோன்ற பிரச்சனைகளை வீட்டில் இருக்கும் பெண்களே அதிகமாக எதிர்கொண்டு தொல்லையை சந்திக்கிறார்கள்.
மழைக்காலத்தில் (Monsoon) ஆரோக்கியமாக இருப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. உங்கள் வீட்டை சரியாக சுத்தம் செய்யாவிட்டால், அது உங்களுக்கு நாளடைவில் பிரச்சனைகளை அதிகரிக்கும். இதன் காரணமாக, மழைக்காலத்தில் வீட்டை சுத்தமாக வைத்திருக்க தினமும் பாடாத கஷ்டம் பட வேண்டியிருக்கும். அதன்படி, மழைக்காலம் இனிமையானதாக இருந்தாலும், வேலைப்பளுவை அதிகரிக்கிறது. பெரும்பாலும், இதுபோன்ற பிரச்சனைகளை வீட்டில் இருக்கும் பெண்களே அதிகமாக எதிர்கொள்கிறார்கள். அந்தவகையில், மழைக்காலத்தில் வீட்டை (Home Cleaning) சரியான முறையில் எப்படி பராமரிக்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
வீட்டின் கூரைகளை கவனித்தல்:
மழைக்காலம் வந்துவிட்டால் சிலரின் வீடுகளில் உள்ள கூரை, ஜன்னல்கள் மற்றும் கதவுகள் வழியாக மழைத்துளிகள் வீட்டிற்குள் வரும். இது பிரச்சனையாக மாறும். இதையடுத்து, வீடுகளில் மேல் அல்லது சுற்றுப்புற சுவர்களில் உள்ள விரிசல்களை கண்டறிந்து பாலியூரிதீன், சிமென்ட், தெர்மோபிளாஸ்டிக் போன்றவை பயன்படுத்தி நீர் கசிவதை தடுக்கலாம். இது மழைநீர் வீட்டிற்குள் நுழைவதை தடுக்கும்.
ALSO READ: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சூப்பர் ஃபுட்கள்.. மழைக் காலத்தில் மிஸ் பண்ணாதீங்க!




வடிகால் மற்றும் குழாய்களை சுத்தம் செய்தல்:
வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் அடைபட்ட வடிகால்களில் பல கிருமிகள் இனப்பெருக்கம் செய்கின்றன. இது கூரை, குளியலறை மற்றும் சிங்க் ஆகியவற்றிலிருந்து தண்ணீர் நிரம்பி வழியும். தேங்கிய தண்ணீரும் கடுமையான துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. குழாய்களில் தண்ணீர் தேங்குவதைத் தடுக்க, அவற்றை தொடர்ந்து சுத்தம் செய்யவும். மாற்றாக, ஒரு கப் பேக்கிங் சோடா, ஒரு கப் டேபிள் உப்பு மற்றும் ஒரு கப் வெள்ளை வினிகர் ஆகியவற்றைக் கலந்து வடிகாலில் ஊற்றவும். 15 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு, அதன் மேல் கொதிக்கும் நீரை ஊற்றவும். உங்கள் குழாய்கள் முற்றிலும் சுத்தமாக்கும்.
கிட்சன் சுத்தம்:
சமையலறையில் ஈரமான மற்றும் பூஞ்சை காளான் உள்ள பகுதிகளில் பூச்சிகள் மற்றும் ஈக்கள் வேகமாக இனப்பெருக்கம் செய்கின்றன. மழைக்காலங்களில் சமையலறை அலமாரிகள், சுவர்கள் மற்றும் தரைகள் போன்ற உட்புற மேற்பரப்புகளை அடிக்கடி செய்வது நல்லது. ஈரப்பதம் மற்றும் கிருமிகளைத் தடுக்க, டிராயர்கள் மற்றும் சமையலறை அலமாரிகளில் கற்பூரம், நாப்தலீன் பந்துகளை பயன்படுத்தலாம். அப்படி இல்லையென்றால், எளிதாக கிடைக்கக்கூடிய கிராம்பு அல்லது வேப்ப இலைகளை சமையலறையில் வைத்திருப்பது கிருமிகள் இனப்பெருக்கம் செய்வதைத் தடுக்கிறது.
உணவுகளை பாதுகாத்தல்:
மழைக்காலத்தில் உணவுகள் மற்றும் உணவு பொருட்கள் விரைவாக கெட்டுப்போகும். இதை தடுக்க, அலமாரிகளை காற்றோட்டமாக விடுவது நல்லது. மேலும், உணவுப் பொருட்களை பிளாஸ்டிக்கிற்கு பதிலாக காற்று புகாத ஜாடிகள் அல்லது கண்ணாடி கொள்கலன்களில் போட்டு வைக்கலாம்.
மின்சார பாதுகாப்பு:
மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு உங்கள் வீட்டில் உள்ள ஒவ்வொரு இணைப்பையும் ஒரு எலக்ட்ரீஷியன் முழுமையாக ஆய்வு செய்யுங்கள். இது மழைக்காலத்தில் ஏற்படும் மின்சார விபத்துகளை தடுக்கும். மேலும், ஜெனரேட்டர் அறை, இன்வெர்ட்டர் யூனிட் மற்றும் MCB-களில் தண்ணீர் கசிவுகள் உள்ளதா என்பதையும் சரிபார்க்கவும்.
ALSO READ: மழையில் இப்படி பைக்கை ஓட்டினால் விபத்து ஏற்படாது.. பாதுகாப்பு குறிப்புகள் இதோ..!
கால் மேட்:
மழைக்காலத்தில் அழுக்கு பாதங்கள் ஒரு பெரிய பிரச்சனையாகும். அவை பல்வேறு பாக்டீரியாக்களை உள்ளே கொண்டு வந்து உங்களை நோய்வாய்ப்படுத்தும். எனவே, இந்த நேரங்களில் உங்கள் வீட்டிற்கு வெளியே கால்மேட்டை பயன்படுத்துங்கள். அதன்படி, மழைக்காலத்தில் ரப்பர், மைக்ரோஃபைபர், பாலியஸ்டர், பாலிவினைல் குளோரைடு அல்லது பாலிப்ரொப்பிலீன் போன்ற பொருட்களால் செய்யப்பட்ட கால் மேட்களை பயன்படுத்தலாம்.