Diwali Safety: தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிக்க ஆசையா? வெடிக்கும்போது செய்யக்கூடாத விஷயங்கள்!
Diwali Crackers Safety: ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியின்போது நூற்றுக்கணக்கான குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். பட்டாசுகளால் பலர் கைகளிலோ அல்லது உடலின் பிற பகுதிகளிலோ பலத்த காயத்தை ஏற்படுத்துகிறது. அப்படி இல்லையென்றால், ஒரு சிலருக்கு கண் பார்வை ஏற்படும் அபாயமும் உண்டாகிறது.

நாடு முழுவதும் வருகின்ற 2025 அக்டோபர் 20ம் தேதி தீபாவளி பண்டிகை (Diwali) கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளி பண்டிகை மகிழ்ச்சியானது என்றாலும் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். பட்டாசுகளால் (Crackers) பலர் கைகளிலோ அல்லது உடலின் பிற பகுதிகளிலோ பலத்த காயத்தை ஏற்படுத்துகிறது. அப்படி இல்லையென்றால், சிலருக்கு கண் பார்வை ஏற்படும் அபாயமும் உண்டாகிறது. அதன்படி, பண்டிகையின்போது பட்டாசு வெடிக்கும்போது கவனமாக இருப்பது நல்லது. அந்தவகையில், சிறியவர்களோ பெரியவர்களோ பட்டாசுகளை வெடிக்கும்போது மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
பட்டாசு வெடிக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:
- பட்டாசுகள் ஆபத்தானவை என்றும் தெரிந்தும் அதனுடன் விளையாடுகிறீர்கள். அதாவது, பட்டாசுகளை கொளுத்தி மற்றவர்கள் மீது வீசுவது, கையில் வைத்து வெடிப்பது, நாய் போன்ற வாயில்லா ஜீவன்கள் மீது வைப்பது போன்றவற்றை செய்யாதீர்கள்.
- பட்டாசு வெடிக்கும்போதோ அல்லது தீபாவளி நாளில் வெளியே செல்லும்போதோ பேஷ் மாஸ்க் பயன்படுத்துங்கள். பட்டாசுகளை வெடிக்கும்போது வெளியாகும் கார்பன மற்றும் பிற இரசாயனங்களால் உங்கள் நுரையீரலை பாதிக்க செய்யும். மேலும், பட்டாசுகளை வெடிக்கும்போது உங்கள் காதுகளையும் மூடி கொள்வது நல்லது.
ALSO READ: தீபாவளி நாளில் சிறுவர்களுக்கு காயம் ஏற்படும் பயமா? இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை முக்கியம்!




- பட்டாசு வெடிப்பதற்கு முன், நீங்கள் அணிந்திருக்கும் ஆடைகளில் கவனம் செலுத்துவது முக்கியம். பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. ஏனெனில், எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டால் இது அதிக சிக்கலை தவிர்க்கும். அதேநேரத்தில், மற்ற துணிகள் சட்டென தீ பிடித்து எறிய தொடங்கும்.
- சில நேரங்களில் பற்ற வைக்கும் வெடிகள் வெடிக்காதபோது மீண்டும் பற்றவைக்க முயற்சிக்காதீர்கள். சில பட்டாசுகள் தாமதமாக வெடிக்க தொடங்கும். எனவே, பட்டாசுகள் வெடிக்கவில்லை என்று கைகளை வைக்க வேண்டாம்.
- பட்டாசுகளிலிருந்து வரும் தீப்பொறி கூட உங்கள் கண்பார்வையை பாதிக்க செய்யும். எனவே, பட்டாசு வெடிக்கும்போது கண்ணாடி அணிவது நல்லது.
- சிறுவர்கள் பட்டாசு வெடிக்கும்போது பெரியவர்கள் மேற்பார்வையிட வேண்டும். பட்டாசு வெடிக்கும்போது குழந்தைகளை கவனிக்காமல் விட்டால் ஏதேனும் விபத்து ஏற்படலாம்.
- பூந்தொட்டி, கொட்டாங்குச்சி போன்றவற்றில் வைத்து வெடிப்பார்கள். இது மிகவும் ஆபத்தான ஒன்றாகும். இதனால் பலருக்கும் காயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அமையும்.
- கைகளால் ராக்கெட்டுகளை ஏவாதீர்கள். பாட்டில்களை பயன்படுத்து ராக்கெட்டுகளை ஏவுங்கள். ராக்கெட்டை பாட்டிலில் சரியாக வைப்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள்.
ALSO READ: தீபாவளி நாளில் தீக்காயம் ஏற்பட்டால் முதலில் என்ன செய்ய வேண்டும்..? எதை செய்யவே கூடாது?
- பட்டாசு வெடித்த பிறகு கைகளை கழுவ மறக்காதீர்கள். பட்டாசு வெடிக்கும் இடத்தில் ஒரு வாளி தண்ணீரை வைத்திருங்கள்.
- பொட்டாசியம் குளோரேட் கொண்ட பட்டாசுகள், அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகளை பயன்படுத்த வேண்டாம்.
- பட்டாசு வெடிப்பதால் கண்ணில் காயம் ஏற்பட்டால், மருத்துவரை அணுகாமல் கண் சொட்டு மருந்துகளை பயன்படுத்த வேண்டாம்.
- பட்டாசு தீப்பொறி உங்கள் கண்களில் பட்டால், அவற்றை தேய்க்க வேண்டாம். மேலும், தாமதிக்காமல் ஒரு கண் மருத்துவரை பாருங்கள்.