Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Diwali Sweets: தீபாவளி பலகாரம்! பாரம்பரியமிக்க அதிரசம் செய்முறை இதோ!

Diwali Special Adhirasam Recipe: தீபத் திருவிழா என்று அழைக்கப்படும் தீபாவளிக்கு ஆரோக்கியமான பொருட்களால் செய்யப்பட்ட குறைந்த இனிப்பு இனிப்பை வீட்டிலேயே எளிதாக தயாரிக்கலாம். அந்தவகையில், தீபாவளி ஸ்பெஷலாக மிக எளிதாக செய்யக்கூடிய மற்றும் ஆரோக்கியமான அதிரசம் ரெசிபியை தெரிந்து கொள்வோம்.

Diwali Sweets: தீபாவளி பலகாரம்! பாரம்பரியமிக்க அதிரசம் செய்முறை இதோ!
அதிரசம்Image Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 10 Oct 2025 20:51 PM IST

தீபத் திருவிழா என்று அழைக்கப்படும் தீபாவளி (Diwali) ஒவ்வொரு ஆண்டு சுவையான இனிப்புகளுடன், சூப்பரான பட்டாசுகளுடன் சுவையான நினைவுகளை பெறுவோம். இப்படி தீபாவளி நெருங்க நெருங்க, கடைகளை நோக்கி இனிப்புகளை வாங்க செல்வோம். ஆனால், கடைகளில் தயாரிக்கப்படும் இனிப்புகள் தரமானதா என்ற கேள்வி எழுகிறது. இதற்கு பதிலாக வீட்டிலேயே தரமான மற்றும் ஆரோக்கியமான இனிப்பு வகைகளை மேற்கொள்ளலாம். இனிப்பு வகைகள் (Sweets) பொதுவாக அதிக கலோரிகள் கொண்டவை மற்றும் மிகவும் இனிமையானவை. அவற்றை அதிகமாக உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே, ஆரோக்கியமான பொருட்களால் செய்யப்பட்ட குறைந்த இனிப்பு இனிப்பை வீட்டிலேயே எளிதாக தயாரிக்கலாம். அந்தவகையில், தீபாவளி ஸ்பெஷலாக மிக எளிதாக செய்யக்கூடிய அதிரசம் ரெசிபியை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: வந்துவிட்டது தீபாவளி! கடைகளில் காஜூ கட்லி காஸ்ட்லியா..? எளிதாக வீட்டிலேயே இப்படி செய்யலாம்!

அதிரசம்

தேவையான பொருட்கள்:

  • அரிசி மாவு – 2 கப்
  • துருவிய வெல்லம் – 3/4 கப்
  • ஏலக்காய் தூள் – 1/4 ஸ்பூன்
  • உலர்ந்த இஞ்சி தூள் – 1/4 ஸ்பூன்
  • எண்ணெய் – தேவையான அளவு
  • தண்ணீர் – தேவையான அளவு

ALSO READ: தீபாவளி ஸ்வீட்ஸில் புது ட்விஸ்ட்! சர்க்கரை இல்லாத ரசமலாய் செய்வது எப்படி..?

அதிரசம் செய்வது எப்படி..?

  1. பச்சரிசியை 3 முதல் 5 முறை நன்றாக கழுவி அலசி எடுத்தபின், குறைந்தது 2 மணி நேரத்திற்கு ஊற வைக்கவும். 2 மணி நேரம் கழித்து ஊறவைத்த அரிசியில் இருக்கும் தண்ணீரை வடிகட்டி, ஒரு துணியின் மீது விரித்து, 30 நிமிடங்கள் ஒதுக்கி வெயிலில் காய வைக்கவும். அதன்படி, நீங்கள் எடுக்கும்போது அரிசியில் ஈரப்பதம் இருக்கக்கூடாது. இப்போது அதை ஒரு மிக்ஸி ஜாடியில் போட்டு நன்றாக அரைக்கவும். அதனுடன் ஏலக்காய் பொடி சேர்க்கவும்.
  2. ஒரு கனமான அடிப்பகுதி கொண்ட பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். வெல்லத்தை பாத்திரத்தில் வைக்கவும். வெல்லம் மூடியிருக்கும் அளவுக்கு சிறிது தண்ணீர் ஊற்றி அடுப்பை பற்ற வைக்கவும். சூட்டில் வெல்லம் உருகி சிரப்பானதும், உலர்ந்த இஞ்சி தூள் சேர்க்கவும்.
  3. அரிசி மாவை சலித்து வெல்ல சிரப்புடன் சேர்க்கவும். கட்டிகள் எதுவும் உருவாகாமல் பார்த்துக் கொண்டு நன்றாகக் கலக்கவும். இப்போது ஒரு கொள்கலனுக்கு மாற்றி அறை வெப்பநிலையை அடையும் வரை ஒதுக்கி வைக்கவும்.
  4. இப்போது மாவைப் பிசைந்து எலுமிச்சை அளவிலான உருண்டைகளாக எடுத்துக்கொள்ளவும். இப்போது, ஒரு வாழை இலை/பாலிதீன் தாளை எடுத்து, சிறிது எண்ணெய் தடவி, விரல்களால் தட்டையாக்கி நடுவில் விரல்களால் ஓட்டை போட்டு கொள்ளுங்கள். தட்டிய மாவு சற்று தடிமனாக இருக்க வேண்டும் என்பது முக்கியம்.
  5. அடுத்ததாக எண்ணெயைச் சூடாக்கி, பொன்னிறமாகும் வரை காத்திருந்து பொரித்து எடுக்கவும். அதிகப்படியான எண்ணெயை வெளியேற்ற சல்லடை கரண்டியால் அதிரசத்தை எடுக்கவும். அவ்வளவுதான், சுவையான தீபாவளி ஸ்பெஷல் அதிரசம் தயார்.