Diwali Sweets: வந்துவிட்டது தீபாவளி! கடைகளில் காஜூ கட்லி காஸ்ட்லியா..? எளிதாக வீட்டிலேயே இப்படி செய்யலாம்!
Kaju Katli Recipe: நமது ஆரோக்கியத்தை கணக்கில் கொண்டு அனைவரும் விரும்பும் ஒரு இனிப்பை வீட்டிலேயே எப்படி தயாரிக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம். அந்தவகையில், முந்திரியை கொண்டு தயார் செய்யப்படும் காஜூ கட்லியை இந்த முறையில் எளிதாக செய்து குடும்பத்துடன் ருசிக்கலாம்.

தீபாவளி பண்டிகை (Diwali) காலம் நெருங்கி வருகிறது. இதன் உற்சாகம் இப்போதே தொடங்கிவிட்டது. மக்கள் ஷாப்பிங் செய்வதிலும், வீடுகளை சுத்தம் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். துணி கடைகள், இனிப்பு கடைகள் என மக்கள் கூட்டம் அலை மோதி வருகிறது. இந்த சீசனில் பல இனிப்பு (Sweets) கடைகளில் கலப்பட அல்லது பழைய இனிப்புகள் விற்கப்படுகின்றன. இது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே, நமது ஆரோக்கியத்தை கணக்கில் கொண்டு அனைவரும் விரும்பும் ஒரு இனிப்பை வீட்டிலேயே எப்படி தயாரிக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம். அந்தவகையில், முந்திரியை கொண்டு தயார் செய்யப்படும் காஜூ கட்லியை இந்த முறையில் எளிதாக செய்யலாம்.
ALSO READ: தீபாவளி ஸ்வீட்ஸில் புது ட்விஸ்ட்! சர்க்கரை இல்லாத ரசமலாய் செய்வது எப்படி..?




காஜூ கட்லி செய்ய தேவையான பொருட்கள்
- முந்திரி – 1 கப் (200 கிராம்)
- சர்க்கரை – 1/2 கப் (100 கிராம்)
- தண்ணீர் – 1/4 கப்
- வெள்ளி வேலைப்பாட்டின் தாள்
ALSO READ: அடுத்தடுத்து பண்டிகை காலம்! சூப்பரா ஸ்வீட்ஸ் செய்ய டிப்ஸ் இதோ!
காஜூ கட்லி செய்ய தேவையான பொருட்கள்:
- காஜூ கட்லி செய்வது மிகவும் எளிது. இதை தயாரிக்க, முதலில் நீங்கள் முந்திரி பொடியை தயாரிக்க வேண்டும். முந்திரி பொடியை தயாரிக்க, முந்திரிகளை நன்கு சில மணிநேரத்தில் உலர வைக்கவும். உலர்த்திய பிறகு, முந்திரிகளை நன்றாக பொடியாக அரைக்கவும். அவற்றை முழுவதுமாக அரைக்காமல் துகள்களாக அரைத்து கொள்ளவும்.
- இதனை தொடர்ந்து, ஒரு பாத்திரத்தில் 1/2 கப் சர்க்கரை மற்றும் 1/4 கப் தண்ணீரை சேர்த்து, சர்க்கரை கரையும் வரை குறைந்த தீயில் கிளறவும். சர்க்கரை முழுவதுமாக கரைந்தது, சிரப் உருவாகும் வரை சிறிது நேரம் சமைக்கவும். சிரப் தயாரானதும், முந்திரி துகள் கலவையை அதில் கொட்டவும்.
- முந்திரி துகள்களை கொட்டியதும் தொடர்ந்து கிளற வேண்டும். இல்லையெனில் அது அடிப்பிடித்து கருகிவிடும். அது வாணலியில் கொட்டிய முந்திரி கலவை சர்க்கரை சிரப்புடன் சேரும் வரை கிண்டி கொண்டே இருக்கவும். இப்போது, இது பேஸ்ட் பதத்திற்கு தயாரானதும், அடுப்பை அணைத்து, சிறிது ஆற விடவும். அது தொடும் அளவுக்கு குளிர்ந்ததும், உங்கள் கைகளால் முந்திரி கலவையை லேசாகப் பிசையவும்.
- இப்போது, கலவையை நெய் தடவிய தட்டில் பரப்பவும். சமமாகப் பரவியவுடன், அதை வைர வடிவங்களில் வெட்டவும். இறுதியாக, நீங்கள் மேலே வெள்ளிப் படலத்தைப் பூசலாம். உங்கள் காஜு கட்லி தயாராக உள்ளது. இதை தீபாவளி பண்டிகைக்கு குடும்பத்துடன் உட்கார்ந்து உண்ணலாம்.