ஜனநாயகன் படத்துக்கு வலுக்கும் சிக்கல் – சென்சார் போர்டு செய்த சம்பவம் – வருத்தத்தில் ரசிகர்கள்
Jana Nayagan movie release dispute: விஜய்யின் ஜனநாயகன் படம் தொடர்பாக உயர்நீதிமன்ற தனி நீதிபதியின் விசாரணையின்போது தங்கள் வாதத்தையும் கேட்க வேண்டும் என தணிக்கை வாரியம் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. இதனால் படம் வெளியாவதில் சிக்கல் தொடர்கிறது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் (Jana Nayagan) திரைப்படம் வெளியாகுமா, இல்லையா என்ற கேள்விக்கு இன்னும் விடை தெரியாமல் தொடர்கிறது. தொடர்ச்சியான சட்ட நடவடிக்கைகள் காரணமாக படம் வெளியிடப்படாமல் இருப்பதால் ரசிகர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரி 9, 2026 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தணிக்கைச் சான்று வழங்கப்படாததால் இந்தப் படம் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என்பதால், தேர்தலுக்கு பிறகே படம் வெளியாகும் என கூறப்படுகிறது.
ஜனநாயகன் படத்துக்கு மேலும் வலுக்கும் சிக்கல்
விஜய்யின் 69வது திரைப்படமான ஜனநாயகன். இது அவரின் கடைசி படம் என விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதற்குப் பிறகு முழுமையாக அரசியலில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்துள்ளார். அவர் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் கட்சி, சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது. இந்த நிலையில், விஜய் நடித்த கடைசி படத்தின் வெளியீட்டில் சிக்கலை சந்தித்து வருவது அவரது ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க : Lockdown: பதைபதைக்க வைத்ததா அனுபமா பரமேஸ்வரனின் ‘லாக்டவுன்’ படம்? விமர்சனம் இதோ!




இதற்கிடையில், ஜனநாயகன் தயாரிப்பு நிறுவனம் படத்தை தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியது. சான்றிதழ் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தங்களின் வாதத்தையும் கேட்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தணிக்கை வாரியம் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. இதன் பின்னர், வழக்கு மீண்டும் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
உயர்நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், இந்த விவகாரத்தை மீண்டும் தனி நீதிபதி அமர்வே விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது. இந்த நிலையில் உயர்நீதிமன்ற தனி நீதிபதியின் விசாரணையின்போது தங்கள் வாதத்தையும் கேட்க வேண்டும் என தணிக்கை வாரியம் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. இதனால் படம் வெளியாவதில் சிக்கல் தொடர்கிறது.
இதையும் படிக்க : Anaswara Rajan: எனது வாழ்க்கையிலே ஒரே நாளில் ஓகே சொன்ன படம் இது தான்- அனஸ்வரா ராஜன் பேச்சு!
இதனிடையே, அரசியல் செயல்பாடுகளிலும் விஜய் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் சுற்றுப்பயணத் திட்டங்கள் தயாராகி வரும் நிலையில், கரூர் சம்பவம் தொடர்பாக அவர் இரு முறை சிபிஐ விசாரணைக்கு ஆஜராகியதும் கவனம் பெற்றது. இத்தகைய சூழ்நிலையில், அவரது கடைசி திரைப்படத்தின் வெளியீடு சட்ட சிக்கலில் மாட்டியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் பெரும் வருத்தத்தில் இருக்கின்றனர்.