Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

குழந்தைகள் அதிகமாக சாக்லேட் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? காத்திருக்கும் ஆபத்து!

Parenting Tip : குழந்தைகள் அழுதால் அவர்களை சமாதானப்படுத்த உடனடியாக சாக்லெட் கொடுக்கும் பழக்கம் நம்மில் பலருக்கும் இருக்கும். இது உடல் பருமன் துவங்கி நீரிழிவு நோய் வரை குழந்தைகளுக்கு மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

குழந்தைகள் அதிகமாக சாக்லேட் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? காத்திருக்கும் ஆபத்து!
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 22 Aug 2025 23:15 PM

குழந்தைகள் (Children) அழும்போது பெரும்பாலான பெற்றோர்கள் அவர்களுக்கு சாக்லேட் கொடுத்து சமாதானம் செய்ய முயல்கிறார்கள். இதனால் குழந்தைகள் சாக்லேட்டிற்கு அடிமையாகிறார்கள்.  இதனால் அழுதால் சாக்லேட் கிடைக்கும் என்ற எண்ணம் அவர்களுக்கு உருவாகிறது. இப்படி நாம் தொடர்ந்து சாக்லேட் கொடுப்பதால், உடல் பருமன், நீரிழிவு நோய் என உடல் ஆரோக்கியத்தில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். சாக்லெட் சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு நாம் கொடுக்கும் ஆரோக்கியமான உணவுகள் பிடிப்பதில்லை. எனவே அவர்களுக்கு தேவையான சத்துகள் கிடைக்காமல் நோய்வாய்படுகின்றன. சமீப காலமாக சாக்லேட் தொடர்பான ஆராய்ச்சி முடிவுகள் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. இந்த கட்டுரையில் குழந்தைகள் சாக்லேட் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து பார்க்கலாம்.

அதிகமாக சாக்லேட் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

  • சாக்லேட்டில் அதிக கலோரிகளை கொண்டுள்ளது. மேலும் குறைவான ஊட்டச்சத்துக்களை மட்டுமே கொண்டுள்ளது. இதனால் குழந்தைகள் உடல் பருமன் பிரச்னையால் அவதிப்படுகிறார்கல்.
  • சாக்லேட்டில் உள்ள அதிக சர்க்கரை உள்ளடக்கம் இன்சுலின் எதிர்ப்பை அதிகரிக்கிறது. இதன் காரணமாக இளம் வயதிலேயே டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கிறது.
  • சாக்லேட்டில் உள்ள டிரான்ஸ் கொழுப்புகள் மற்றும் சர்க்கரை இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும். இது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. மேலும் தமனிகளை அடைப்பை ஏற்படுத்தி ஹார்ட் அட்டாக் போன்ற மோசமான நோய்களுக்கு காரணமாக அமைகிறது.

இதையும் படிக்க : 15 நாட்கள் டீ குடிக்காமல் இருந்தால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் – ஆச்சரிய தகவல்!

  • சில சாக்லேட்டுகளில் உள்ள ஈயம் மற்றும் காட்மியம் போன்ற தீங்கு விளைவிக்கும் உலோகங்கள் சிறுநீரகங்களை சேதப்படுத்தும்.
  • சாக்லேட்டில் நார்ச்சத்து குறைவாகவும், கொழுப்பு அதிகமாகவும் இருப்பதால், செரிமான பிரச்னைகள் ஏற்படும்.
  • சாக்லேட்டில் உள்ள காஃபின் காரணமாக குழந்தைகள் இரவில் நன்றாக தூங்க முடியாது. இது நினைவாற்றல் குறைவதற்கு வழிவகுக்கும்.

சாக்லேட் பார்கள் சாக்லேட்டை மட்டுமல்ல, பல ஆபத்தான பொருட்களையும் கொண்டிருக்கின்றன. இதில் உள்ள அதிக சர்க்கரை,  இரத்த சர்க்கரை அளவை உடனடியாக அதிகரிக்கிறது. குழந்தைகளை ஈர்க்கப் பயன்படுத்தப்படும் செயற்கை வண்ணங்கள் ஒவ்வாமையை ஏற்படுத்தும். மேலும் இதில் உள்ள டிரான்ஸ் கொழுப்புகள் இதயம் மற்றும் கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும்.

இதையும் படிக்க : வெள்ளை உணவுகள் உங்களுக்கு விருப்ப உணவுகளா..? இது உடலில் என்ன செய்யும் தெரியுமா..?

சாக்லேட்டை  எவ்வாறு குறைப்பது?

  • தினமும் சாக்லேட் கொடுப்பதைத் தவிர்த்து எப்போதாவது மட்டுமே சாக்லேட்டை மிகக் குறைந்த அளவில் கொடுங்கள்.
  • சாக்லேட்டுக்கு பதிலாக, பழங்கள், உலர் பழங்கள் அல்லது வீட்டில் தயாரிக்கப்பட்ட டார்க் சாக்லேட்டை கொடுங்கள்.
  • சாக்லேட் சாப்பிட்ட உடனேயே குழந்தைகள் பல் துலக்குவதையோ அல்லது தண்ணீர் குடிப்பதையோ ஒரு பழக்கமாக்குங்கள்.

சாக்லேட் குழந்தைகளை மகிழ்ச்சியடையச் செய்தாலும், அது ஏற்படுத்தும் உடல்நலப் பிரச்சினைகள் மிகவும் ஆபத்தானவை. பல் பிரச்சனைகள் மட்டுமல்ல, உடல் பருமன், நீரிழிவு நோய், இதய நோய் போன்ற நீண்டகால பிரச்சனைகளையும் கூட ஏற்படுத்தும். உங்கள் குழந்தைகளின் எதிர்கால ஆரோக்கியம் உங்கள் கையில்தான் உள்ளது. படிப்படியாக சாக்லேட் பழக்கத்தைக் குறைத்து, அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பாக மாற்றுங்கள்.