Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Diabetes: சிறுவர்களுக்கும் சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படுமா..? இதை கட்டுப்படுத்துவது எப்படி?

Type 1 Diabetes: இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் குழந்தைகளை வேகமாக பாதிக்கப்பட்டுவருகின்றனர். டைப் 1 சர்க்கரை நோய் என்பது ஒரு தன்னுடன் தாக்க நோயாகும். இது, உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு இன்சுலினை உற்பத்தி செய்யும் கணையத்தின் பீட்டா செல்களை தவறாக தாக்குகிறது.

Diabetes: சிறுவர்களுக்கும் சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படுமா..? இதை கட்டுப்படுத்துவது எப்படி?
டைப் 1 சர்க்கரை நோய்Image Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 18 Nov 2025 14:47 PM IST

டைப் 1 சர்க்கரை நோய் என்பது வளர்ந்து குழந்தைகளிடம் கண்டறியப்படும் சர்க்கரை நோயாகும். இது இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் குழந்தைகளை வேகமாக பாதிக்கப்பட்டுவருகின்றனர். டைப் 1 சர்க்கரை நோய் (Diabetes) என்பது ஒரு தன்னுடன் தாக்க நோயாகும். இது, உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு இன்சுலினை உற்பத்தி செய்யும் கணையத்தின் பீட்டா செல்களை தவறாக தாக்குகிறது. இன்சுலின் என்பது உடல் சர்க்கரையை ஆற்றலாக மாற்ற உதவும் ஒரு அத்தியாவசிய ஹார்மோன் ஆகும். வகை 1 சர்க்கரை நோயில் உடல் இன்சுலின் (Insulin) உற்பத்தியை நிறுத்துகிறது. இதனால், இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இந்த வகை சர்க்கரை பொதுவாக குழந்தைகள், இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்களிடையே காணப்படுகிறது. இந்த வகை நீரிழிவு “சிறார் நீரிழிவு” என்றும் அழைக்கப்படுகிறது. இது எந்த வயதிலும் ஏற்படலாம் என்றாலும், பெரும்பாலும் 14 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் பாதிக்கப்படுகின்றன.

ALSO READ: அடிக்கடி சிறுநீர் வெளியேற்றம்..? அதிக தாகமா..? இவை சர்க்கரை நோயின் அறிகுறிகள்!

சர்க்கரை நோய் எத்தனை வகைப்படும்..?

சர்க்கரை நோயில் 2 வகைகள் உள்ளன. வகை 1 மற்றும் வகை 2 சர்க்கரை நோயாகும். இந்த 2 வகைகளையும் கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் முக்கியம். வகை 1 சர்க்கரை நோய் என்பது ஒரு தன்னுடல் தாக்க நோயாகும். இதில், உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு இன்சுலின் உற்பத்தி செய்யும் கணைய செல்களை தாக்குகிறது. குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரை பாதிக்கும் இந்த நிலைக்கு இன்சுலின் ஊசி அல்லது இன்சுலின் பம்ப் மூலம் மட்டுமே சிகிச்சையளிக்க முடியும்.

வகை 1 சர்க்கரை நோயின் அறிகுறிகள்:

அடிக்கடி சிறுநீர் கழித்தல், தாகம், பசி அதிகரிக்காலும் எடை குறைப்பு, சோர்வு மற்றும் பலவீனம், மங்கலான பார்வை, காயம் ஆறுவதில் தாமதம், சிறு குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழித்தல் போன்றவை வகை 1 சர்க்கரை நோயின் அறிகுறிகளாகும்.

ALSO READ: மருந்து சாப்பிடாமலேயே சர்க்கரை அளவை கட்டுப்படுத்த வேண்டுமா? இந்த 3 விஷயத்தை ஃபாலோ பண்ணுங்க!

வகை 1 சர்க்கரை நோயை எவ்வாறு கட்டுப்படுத்துவது..?

  • இன்சுலின் சிகிச்சை வகை 1 சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவுகிறது. இந்த வகை சர்க்கரை நோயை கட்டுப்படுத்த நோயாளிகள் தினமும் இன்சுலின் எடுத்துக்கொள்ள வேண்டும். இது ஊசிகள் அல்லது இன்சுலின் பம்ப் மூலம் கட்டுப்படுத்தலாம்.
  • இரத்த சர்க்கரை அளவை தினமும் கண்காணிப்பதன் மூலம் மட்டுமே சாதாரண இரத்த சர்க்கரையை பராமரிக்க முடியும். இரத்த சர்க்கரை அதன் உயர்வு மற்றும் வீழ்ச்சியை மதிப்பிடுவதற்கு ஒரு நாளைக்கு பல முறை சரிபார்க்கப்படுகிறது. இதற்கு ஒரு குளுக்கோஸ் மீட்டர் பயன்படுத்தப்படுகிறது.
  • டைப் 1 சர்க்கரை நோயை கட்டுப்படுத்த, சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் உட்கொள்வதை கட்டுப்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. சரியான நேரத்தில் உணவு மற்றும் ஆரோக்கியமான காய்கறிகளை சாப்பிடுவது அவசியம்.
  • இந்த சர்க்கரை நோயை கட்டுப்படுத்த, லேசான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளை தினமும் செய்வதும் முக்கியம்.