Health Tips: மருந்து சாப்பிடாமலேயே சர்க்கரை அளவை கட்டுப்படுத்த வேண்டுமா? இந்த 3 விஷயத்தை ஃபாலோ பண்ணுங்க!
Blood Sugar Control: இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த, முதலில் கவனம் செலுத்த வேண்டியது உங்கள் உணவு முறைதான். கீரை, காய்கறிகள், குடை மிளகாய் மற்றும் தக்காளி போன்ற மாவுச்சத்து இல்லாத காய்கறிகளை அதிகம் சாப்பிடுங்கள். இவை நார்ச்சத்து நிறைந்தவை மற்றும் கலோரிகள் குறைவாக உள்ளன.
இன்றைய நவீன காலத்தில் இளைய தலைமுறையினர் கூட சர்க்கரை நோய் (Diabetics) பிரச்சனையை சந்திக்கிறார்கள். இதுபோன்ற பிரச்சனையை சந்திப்பதற்கு கட்டுப்பாடற்ற வாழ்க்கை முறை, அதிகப்படியான துரித உணவுகளை சாப்பிடுவதால் பாதிக்கப்படுவதாக சுகாதார நிபுணர்கள் கூறுகிறன்றனர். இருப்பினும், ஆரம்பத்திலிருந்தே நீங்கள் கொஞ்சம் விழிப்புணர்வுடன் இருந்தால், மருந்து எடுத்துக்கொள்ளாமலே உங்கள் இரத்த சர்க்கரை (Blood Sugar) அளவை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். அதன்படி, மாத்திரை மற்றும் மருந்துகள் இல்லாமல் எப்படி சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைக்கலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
என்ன செய்யலாம்..?
இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த சரியான உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறையை பின்பற்றுவது முக்கியம். வழக்கமான உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு மற்றும் போதுமான தூக்கம் போன்ற இந்த மூன்று பழக்கவழக்கங்களும் சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு சிக்கலான நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவி செய்யும்.
ALSO READ: மாதுளை இலையில் இவ்வளவு மகத்துவமா..? இந்த பிரச்சனைகளை சரிசெய்யும்..!




உணவு முறை:
இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த, முதலில் கவனம் செலுத்த வேண்டியது உங்கள் உணவு முறைதான். கீரை, காய்கறிகள், குடை மிளகாய் மற்றும் தக்காளி போன்ற மாவுச்சத்து இல்லாத காய்கறிகளை அதிகம் சாப்பிடுங்கள். இவை நார்ச்சத்து நிறைந்தவை மற்றும் கலோரிகள் குறைவாக உள்ளன. இவை சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும். ஆப்பிள், வேர்க்கடலை போன்ற குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் (GI) கொண்ட உணவுகள் இரத்தத்தில் சர்க்கரையை மெதுவாக வெளியிடுகின்றன. இது அதை நிலையாக வைத்திருக்க உதவுகிறது. மீன், நட்ஸ் மற்றும் ஆலிவ் எண்ணெய் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் புரதங்கள் நிறைந்த உணவுகளும் இரத்த சர்க்கரையை சமநிலைப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும்.
மறுபுறம், சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளான குளிர்பானங்கள், வெள்ளை ரொட்டி, பாஸ்தா முடிந்தவரை தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறது. இந்த உணவுகள் இரத்த சர்க்கரை அளவை விரைவாக அதிகரிக்கும். கூடுதலாக, போதுமான அளவு தண்ணீர் குடிப்பதும் மிகவும் முக்கியம். நீரிழப்பு இரத்த குளுக்கோஸ் அளவை அதிகரிக்கிறது, எனவே நிபுணர்கள் நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க பரிந்துரைக்கின்றனர்.
உடற்பயிற்சி:
தினமும் உடற்பயிற்சி செய்வதன்மூலம் உடலின் தசைகள் குளுக்கோஸைப் பயன்படுத்த உதவுகிறது. இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது. அதன்படி, சுகாதார நிபுணர்கள் வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சியை பரிந்துரைக்கின்றனர். உங்களுக்கு விருப்பம் இருந்தால் விறுவிறுப்பான நடைபயிற்சி, நீச்சல் அல்லது சைக்கிள் ஓட்டுதல் போன்றவற்றுடன் போதுமான தூக்கம் பெறுவதும் முக்கியம். தூக்கமின்மை இன்சுலின் செயல்திறனைக் குறைக்கும். இது இரத்த சர்க்கரை சமநிலையை சீர்குலைக்கும்.
ALSO READ: சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா? இரத்த சர்க்கரையை அதிகரிக்குமா?
எடை பராமரிப்பு:
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் ஆரோக்கியமான எடையைப் பராமரிப்பது பெரும் பங்கு வகிக்கிறது. கூடுதலாக, சில உணவுகள் அல்லது பழக்கவழக்கங்களையும் தவிர்ப்பது நல்லது. அதன்படி, அதிகப்படியான மது அருந்துவது இரத்த சர்க்கரை அளவை சீர்குலைக்கும். மேலும், 2 மாதத்திற்கு ஒருமுறை உங்கள் இரத்த சர்க்கரையை தவறாமல் பரிசோதிப்பது முக்கியம்.