Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Diabetes: அடிக்கடி சிறுநீர் வெளியேற்றம்..? அதிக தாகமா..? இவை சர்க்கரை நோயின் அறிகுறிகள்!

Diabetes Warning Signs: சர்க்கரை நோய் இதயம், சிறுநீரகங்கள், கண்கள் மற்றும் நரம்புகளை மெதுவாக சேதப்படுத்துவதால் சைலண்ட் கில்லர் என்று அழைக்கப்படுகிறது. நீங்கள் அடிக்கடி சிறுநீர் கழித்தால் அல்லது உங்களுக்கு அடிக்கடி தாகம் எடுத்தால் கவனிக்க வேண்டும். இதனுடன் சோர்வு, எடை குறைவு அல்லது பார்வை மாற்றங்கள் போன்ற அறிகுறிகள் தோன்றும்.

Diabetes: அடிக்கடி சிறுநீர் வெளியேற்றம்..? அதிக தாகமா..? இவை சர்க்கரை நோயின் அறிகுறிகள்!
சர்க்கரை நோய்Image Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 15 Nov 2025 15:02 PM IST

இன்றைய பரபரப்பான நவீன வாழ்க்கையில் பலரும் சர்க்கரை நோய் பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள். உலக சுகாதார அமைப்பின் (WHO) அறிக்கையின்படி, உலகளவில் சுமார் 830 மில்லியன் மக்கள் சர்க்கரை நோயால் (Diabetes) பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை இந்த நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு (IDF) 2025 டையபட்டிஸ் அட்லஸ் அறிக்கையின்படி, இந்தியாவில் 100 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். 250 மில்லியன் மக்கள் தங்களுக்கு இன்னும் சர்க்கரை பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதை அறியாமல் உள்ளனர். அந்தவகையில், சர்க்கரை நோயைக் குறிக்கும் 5 அறிகுறிகளைப் பற்றி இப்போது அறிந்து கொள்வோம். இந்த ஆரம்ப அறிகுறிகள் சர்க்கரை நோயைக் குறிப்பதால், என்ன முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்? என்பதையும் தெரிந்து கொள்வோம்.

சர்க்கரை நோய் எவ்வாறு பாதிக்கிறது…?

சர்க்கரை நோய் இதயம், சிறுநீரகங்கள், கண்கள் மற்றும் நரம்புகளை மெதுவாக சேதப்படுத்துவதால் சைலண்ட் கில்லர் என்று அழைக்கப்படுகிறது. நீங்கள் அடிக்கடி சிறுநீர் கழித்தால் அல்லது உங்களுக்கு அடிக்கடி தாகம் எடுத்தால் கவனிக்க வேண்டும். இதனுடன் சோர்வு, எடை குறைவு அல்லது பார்வை மாற்றங்கள் போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக இரத்த பரிசோதனை செய்ய வேண்டும். இவை டைப் 2 சர்க்கரை நோயின் அறிகுறிகளாகும்.

ALSO READ: சிறுநீரக கற்கள் வராமல் தடுக்க வேண்டுமா? தவிர்க்க வேண்டிய உணவுகள் இதுதான்.. மருத்துவர் சரண் விளக்கம்!

அடிக்கடி சிறுநீர் கழித்தல்:

சர்க்கரை நோயின் முதல் அறிகுறி அடிக்கடி சிறுநீர் கழிப்பதுதான். உடலில் இரத்த சர்க்கரை அதிகரிக்கும் போது, ​​சிறுநீரகங்கள் அதை வெளியேற்ற முயற்சிக்கின்றன. இதன் காரணமாக, இரவில் கூட 4-5 முறை பாத்ரூம் செல்ல வேண்டிய சூழல் உருவாகும். இது ஒரு ஆரம்ப அறிகுறி. இதை தொடர்ந்து புறக்கணித்தால், சிறுநீரகங்கள் நாளடைவில் சேதமடையும்.

அடிக்கடி தாகம்:

சர்க்கரை நோயின் 2வது அறிகுறி அடிக்கடி தாகம் எடுபக்கும்.உடலில் சர்க்கரை அதிகரிப்பதால் உடல் நீரிழப்புக்கு ஆளாகிறது. எவ்வளவு தண்ணீர் குடித்தாலும், தாகம் தொடர்ந்து எடுத்து கொண்டே இருக்கும். கோடை காலத்தில் தாகம் பொதுவானது என்றாலும், மழை மற்றும் குளிர் காலநிலைகளிலும் கூட மீண்டும் மீண்டும் தண்ணீர் குடிக்கத்தால், சர்க்கரை பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

தொடச்சியான சோர்வு:

சர்க்கரை நோய் ஏற்பட்ட ஒருவருக்கு செல்களால் சர்க்கரையை ஆற்றலாக மாற்ற முடியாது. இதன் காரணமாக, ஒருவர் எப்போதும் சோர்வாக உணர தொடங்குவார்கள். பலரும் சோர்வுக்கு பல்வேறு நோயாளிகள் வேலைதான் சோர்வுக்கு காரணம். இது சர்க்கரை நோயால் ஏற்படுகிறது. WHO ஆய்வின்படி, சர்க்கரை நோய்க்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால், சோர்வு அதிகரிக்கிறது. நாளடைவில் மாரடைப்பு ஆபத்து இரட்டிப்பாகிறது.

எடை குறைவு:

டைப்-1 சர்க்கரை நோயின் போது எடை இழப்பு மிக விரைவாக ஏற்படும். ஏனெனில் உடல் கொழுப்பையும் தசையையும் உடைத்து ஆற்றலை உற்பத்தி செய்யத் தொடங்குகிறது. ஒரு மாதத்தில் காரணமின்றி 4-5 கிலோ எடை குறைவது சாதாரணமான விஷயம் அல்ல. இது இன்சுலின் குறைபாட்டின் அறிகுறியாகும்.

பார்வையில் மாற்றங்கள்:

உங்கள் பார்வை மங்கலாக இருந்தால், இதுவும் சர்க்கரை நோயின் அறிகுறிகளில் ஒன்றாகும். அதிக சர்க்கரை காரணமாக, கண்ணின் லென்ஸ் வீங்குகிறது. இதனால் பார்வை மங்கலாகிறது. சர்க்கரை ரெட்டினோபதி காரணமாக 20 சதவீத நோயாளிகள் பார்வையற்றவர்களாக மாறுகிறார்கள் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ALSO READ: 40% மாரடைப்பை குறைக்கும் நடைமுறை.. தினமும் சாப்பிட்டு இதை செய்தால் போதும்!

எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள்:

  • சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த விரும்பினால், சர்க்கரை, மாவு, பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் ரெட் மீட் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. இதற்கு பதிலாக, நார்ச்சத்து நிறைந்த உணவை எடுத்து கொள்ளலாம்.
  • உணவில் ஏற்படும் மாற்றங்களுடன், லேசான உடற்பயிற்சி மேற்கொள்வது சிறந்தது.
  • காலை 7 முதல் 8 மணி வரை காலை உணவை உட்கொள்ளுங்கள். அதில் 300 கலோரிகள் இருக்க வேண்டும்.
  • ஆப்பிள், கொய்யா அல்லது பப்பாளி போன்ற பழங்களை உங்கள் உணவுகளில் ஒரு பகுதியாக எடுத்து கொள்ளலாம். வாழைப்பழங்களைக் குறைப்பது நல்லது. மதிய உணவாக பழுப்பு அரிசி, பருப்பு, கீரைகள் மற்றும் சாலட் சாப்பிடலாம். மாலையில் ஒரு கைப்பிடி பாதாம் உள்ளிட்ட ஆரோக்கிய உணவுகளை எடுக்கலாம்.
  • மது அருந்துதல் மற்றும் புகைபிடிப்பதைத் தவிர்த்து, சுறுசுறுப்பாக இருங்கள். மன அழுத்தத்தைக் குறைக்க தியானம் செய்வதன் மூலம் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தலாம்.