Health Tips: சிறுநீரக கற்கள் வராமல் தடுக்க வேண்டுமா? தவிர்க்க வேண்டிய உணவுகள் இதுதான்.. மருத்துவர் சரண் விளக்கம்!
Kidney Stones Foods To Avoid: சிறுநீரக கற்கள் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. முதலில் சிறுநீரகக் கற்களைத் தடுக்க, மக்கள் அதிகப்படியான உப்பு மற்றும் சர்க்கரையைத் தவிர்ப்பது நல்லது என்றும், மேலும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
சிறுநீரகங்களில் தாதுக்கள் மற்றும் பிற கழிவுப்பொருட்கள் சேரும்போது, அவை சிறுநீரகக் கற்கள் எனப்படும் சிறிய கற்களை உருவாக்குகின்றன. சிறுநீரகக் கற்கள் தாங்க முடியாத அளவிற்கு வலியை கொடுக்கும். சிறுநீரக கற்கள் (Kidney Stones) இருக்கும்போது சில சமயங்களில் சிறுநீரில் (Urine) இரத்தம் கூட வெளியேறலாம். எனவே, சிறுநீரகக் கல் நோயாளிகள் இனிமேல் வராமல் இருக்க தங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்துவது முக்கியம். நாம் அன்றாட சாப்பிடும் பல உணவுகளில் ஆக்சலேட்டுகள் போன்ற கூறுகள் உள்ளன. இவை சிறுநீரக கற்களை ஏற்படுத்தும். அதன்படி, சிறுநீரக கற்கள் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. முதலில் சிறுநீரகக் கற்களைத் தடுக்க, மக்கள் அதிகப்படியான உப்பு மற்றும் சர்க்கரையைத் தவிர்ப்பது நல்லது என்றும், மேலும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
ALSO READ: தூங்குவதற்கு முன்னும் பின்னும் இந்தப் பிரச்சனையா? இது சிறுநீரக புற்றுநோயாக இருக்கலாம்!




சிறுநீரக கற்கள் வராமல் தடுக்க வேண்டிய உணவுகள்:
View this post on Instagram
இந்தநிலையில், மருத்துவர் சரண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறுநீரக கற்கள் வராமல் தடுக்க தவிர்க்கவேண்டிய சில உணவுகள் குறித்து தெரிவித்துள்ளார். அதில், பசலைக் கீரை இவற்றில் ஒன்றாகும். பசலைக் கீரையில் அதிக அளவு ஆக்சலேட் உள்ளது, இது சிறுநீரகக் கல் உருவாவதற்கு முக்கிய காரணியாக இருக்கலாம். ஒருவருக்கு சிறுநீரகக் கல் பிரச்சினைகள் இருந்தால், பசலைக் கீரையைத் தவிர்க்கவும்.
சாக்லேட் மற்றும் டீ:
சாக்லேட்டில் அதிக அளவு ஆக்சலேட் உள்ளது. இது சிறுநீரக கல் உள்ளவர்களுக்கு ஆபத்தானது. அதிகப்படியான சாக்லேட் மற்றும் டீ உட்கொள்வது சிறுநீரக கற்கள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.
தக்காளி விதைகள்:
தக்காளி மற்றும் தக்காளியில் உள்ள விதைகளில் ஆக்சலேட்கள் உள்ளன. இவை சிறுநீரக கல் நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும். அதிகப்படியான தக்காளி நுகர்வு சிறுநீரக கல் நோயாளிகளுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
அசைவ உணவுகள்:
அசைவ உணவுகளை உட்கொள்வது சிறுநீரக கற்கள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். குறிப்பாக, கருவாடு, மட்டன், ஃபீப் போன்ற அசைவ உணவுகள் சிறுநீரக கல் நோயாளிகளுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். இதில் பியூரின்கள் அதிகமாக உள்ளன. இது உங்கள் சிறுநீரகங்களில் யூரிக் அமில அளவை அதிகரிப்பதுடன், கல் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கும்.
ALSO READ: ஆரோக்கியமான கல்லீரல் செயல்பட வேண்டுமா..? இவை உணவில் இடம்பெறுவது கட்டாயம்!
சில காய்கறிகள்:
- கத்திரிக்காய் காய்கறியில் விதைகளில் ஆக்சலேட்டுகள் அதிகமாக உள்ளன. இது சிறுநீரக கல் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீங்கு விளைவிக்கும்.
- வெண்டைக்காயும் சிறுநீரக கல் நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும், ஏனெனில் இதில் ஆக்சலேட்டும் உள்ளது. இது பிரச்சனையை அதிகரிக்கிறது.
- சுரைக்காய் விதைகள் சிறுநீரக கல் நோயாளிகளுக்கும் தீங்கு விளைவிக்கும். எனவே, சிறுநீரக கல் நோயாளிகள் சுரைக்காய் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
- பூசணிக்காய் – பூசணிக்காய் அல்லது சீதாப்பழம் சாப்பிடலாம் என்றாலும், அதை உட்கொள்வது சில நேரங்களில் சிறுநீரக கல் நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும்.
மேலும் சில குறிப்புகள்:
குறைந்த அளவு தண்ணீர் குடித்தல், நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைப்பது உள்ளிட்ட காரணங்களாலும் சிறுநீரக கற்கள் உண்டாகும் அபாயம் உள்ளது. எனவே, கிடைக்கும் நேரமெல்லாம் அதிகளவில் தண்ணீர் குடிப்பது சிறுநீரக கற்கள் வராமல் தடுக்க உதவும்.