Health Tips: தூங்குவதற்கு முன்னும் பின்னும் இந்தப் பிரச்சனையா? இது சிறுநீரக புற்றுநோயாக இருக்கலாம்!
Kidney Cancer: சிறுநீரக புற்றுநோயின் சில அறிகுறிகள் இரவில் அதிகமாகத் தெரியும். குறிப்பாக தூங்குவதற்கு முன் அல்லது தூங்கும் போது இந்த மாற்றங்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் கவனித்தால், தாமதிக்காமல் மருத்துவரிடம் உரிய சிகிச்சை பெற்று நீண்ட நாட்களாக நலமுடன் வாழலாம்.

சிறுநீரகம் (Kidney) நமது உடலின் ஒரு முக்கியமான உறுப்பு. இது இரத்தத்தை சுத்திகரித்து நச்சுக்களை அகற்ற வேலை செய்கிறது. இந்த உறுப்பில் புற்றுநோய் தொடங்கி சரியான நேரத்தில் கண்டறியப்படாவிட்டால், அது ஆபத்தானதாக மாறும். ஆரம்ப கட்டத்தில், சிறுநீரக புற்றுநோயின் (Cancer) அறிகுறிகள் மிகவும் லேசானவை, எனவே பலரும் இதை கண்டுகொள்ளாமல் சிக்கலில் சிக்கி கொள்கிறார்கள். மருத்துவர்களின் கூற்றுப்படி, சிறுநீரக புற்றுநோயின் சில அறிகுறிகள் இரவில் அதிகமாகத் தெரியும். குறிப்பாக தூங்குவதற்கு முன் அல்லது தூங்கும் போது இந்த மாற்றங்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் கவனித்தால், தாமதிக்காமல் மருத்துவரிடம் உரிய சிகிச்சை பெற்று கொள்வது முக்கியம். அந்தவகையில், சிறுநீரக புற்றுநோயின் அறிகுறிகள் என்னென்ன என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
ALSO READ: பித்தப்பை வலியை அதிகரிக்கும் 7 உணவுகள்.. உடனடியாக நிறுத்துவது ஏன் முக்கியம்?
சிறுநீரக புற்றுநோயின் அறிகுறிகள்:
- இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல் அல்லது சிறுநீரில் இரத்தம் கலந்து வெளியேறுதல்
- கீழ் முதுகு அல்லது இடுப்பில் கடுமையான வலி
- காரணமே இல்லாமல் எடை குறைதல்
- நிலையான சோர்வு மற்றும் பலவீனம்
- இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல்
சிறுநீரகப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரித்து வருகிறதா?
சிறுநீரக புற்றுநோய்க்கு பல காரணங்கள் இருக்கலாம். மிகப்பெரிய காரணம் புகைபிடித்தல். அதிகமாக புகைபிடிப்பவர்களுக்கு இந்த நோய் வருவதற்கான ஆபத்து பல மடங்கு அதிகரிக்கிறது. உயர் இரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமனும் முக்கிய காரணங்களாகும். நீண்ட காலமாக வலி நிவாரணிகளை அதிகமாகப் பயன்படுத்துவது சிறுநீரகங்களை சேதப்படுத்துகிறது. இதுவும் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது.




உடல் முழுவதும் பரவும் அபாயம்:
சிறுநீரகப் புற்றுநோய் சரியான நேரத்தில் கண்டறியப்படாவிட்டால், அது சிறுநீரகங்களுக்கு மட்டுமல்ல. இவை படிப்படியாக நுரையீரல், எலும்புகள் மற்றும் பிற உறுப்புகளுக்கும் பரவக்கூடும். புற்றுநோய் பரவியவுடன், அதன் சிகிச்சை கடினமாகவும் அதிக செலவையும் விளைவிக்கும். இதனால்தான் ஆரம்பகாலத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுவது நல்லது.
ALSO READ: அடிக்கடி சிறுநீர் கழிப்பதும் ஆபத்தா..? எத்தனை முறை வெளியேறுவது சாதாரணமானது?
ஆரோக்கியமாக இருப்பது எப்படி?
உங்கள் சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க வழக்கமான பரிசோதனைகள் முக்கியம். குறிப்பாக உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன் அல்லது குடும்பத்தில் புற்றுநோய் வரலாறு இருந்தால் இவற்றை மேற்கொள்வது நல்லது.
- வருடத்திற்கு ஒரு முறை உடல்நலப் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
- உப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை குறைவாக சாப்பிடுங்கள்.
- புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் ஆகியவற்றை தவிர்த்தல்
- நிறைய தண்ணீர் குடியுங்கள்.
- ஆரோக்கியமான உணவுகளை உண்ணுங்கள்.
- உங்கள் சிறுநீரில் இரத்தம், தொடர்ச்சியான முதுகுவலி அல்லது எடை குறைப்பி போன்ற அறிகுறிகள் தோன்றினால், உடனடியாக ஒரு சிறுநீரக மருத்துவரை அணுகவும்.
- இதனை பின்பற்றி சரியான நேரத்தில் நோயறிந்து உங்கள் உயிரைக் காப்பாற்றி கொள்ள முடியும்.