AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Gold Price Today: ஒரேநாளில் தங்கம் விலை மளமளவென குறைந்தது.. இன்றைய விலை நிலவரம் என்ன?

Gold Price Today: தங்கம் விலையில் தற்போது ஏற்பட்டுள்ள இந்தச் சரிவு ஒரு தற்காலிகமான மாற்றமே. மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் நீடிப்பதாலும், உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கம் சேமிப்பை அதிகரிப்பதாலும், நீண்ட கால அடிப்படையில் தங்கம் விலை மீண்டும் உயரவே வாய்ப்புள்ளது.

Gold Price Today: ஒரேநாளில் தங்கம் விலை மளமளவென குறைந்தது.. இன்றைய விலை நிலவரம் என்ன?
மாதரிப் புகைப்படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 12 Mar 2026 10:48 AM IST

சென்னை, மார்ச் 12: கடந்த 4 நாட்களாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை (Gold Price) இன்று ஒரேநாளில் அதிரடியாக குறைந்துள்ளது. அதன்பிடி, சென்னையில் இன்று 22 கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 150 ரூபாய் குறைந்துள்ளது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்துள்ளது. தொடர்ந்து, தங்கத்தின் விலை உயர்ந்து வந்த நிலையில், இன்று வெகுவாக குறைந்துள்ளது முதலீட்டார்கள், நடுத்தர மக்களிடையே சற்று ஆறுதை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவடைந்து வருவதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் இன்று சரிவைக் கண்டுள்ளன. கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் பணவீக்கம் குறித்த கவலைகளுக்கு மத்தியிலும், முதலீட்டாளர்கள் டாலர் பக்கம் திரும்புவதால் தங்கம் விலை சரிவைச் சந்தித்துள்ளது.

இதையும் படிக்க: போர் நெருக்கடி.. அதிரடியாக உயர்ந்த கச்சா எண்ணெய்.. பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் வருமா?

விலை சரிவுக்கான காரணங்கள்:

சர்வதேச அந்நியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு 15 வாரங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. பொதுவாக டாலர் வலுவடையும் போது, தங்கத்தின் மீதான முதலீடு குறையும். ஈரான் உடனான போர்ச் சூழல் மற்றும் ஜியோ-பொலிட்டிகல் பதற்றங்கள் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது. இது சந்தையில் நிலையற்ற தன்மையை உருவாக்கி, தங்கம் மற்றும் வெள்ளி விலையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் வட்டி விகிதக் கொள்கைகளில் ஏற்படப்போகும் மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக, வரும் நாட்களில் தங்கம் விலையில் இன்னும் ஏற்ற இறக்கங்கள் நீடிக்க வாய்ப்புள்ளதாக சந்தை வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

விலை குறைவு தற்காலிக மாற்றமே:

அதோடு, தங்கம் விலையில் தற்போது ஏற்பட்டுள்ள இந்தச் சரிவு ஒரு தற்காலிகமான மாற்றமே. மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் நீடிப்பதாலும், உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கம் சேமிப்பை அதிகரிப்பதாலும், நீண்ட கால அடிப்படையில் தங்கம் விலை மீண்டும் உயரவே வாய்ப்புள்ளது. எனவே, விலைக் குறைவை ஒரு முதலீட்டு வாய்ப்பாகக் கருதலாம் எனப் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தங்கம் விலை நிலவரம்:

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் தங்கம் விலை இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. எனி்னும், தென்னிந்தியாவில் ஆபரணத் தங்கத்தின் தேவை அதிகமாக இருப்பதால், மற்ற நகரங்களை ஒப்பிடுகையில் சென்னையில் விலை சற்று அதிகமாகவே உள்ளது. அதன்படி, சென்னையில் இன்று 22 கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 150 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 14,970 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு 1,200 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 1,19,960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: ஒருவேளை உணவை மிச்சப்படுத்தியாவது வெள்ளி வாங்குங்கள்.. ராபர்ட் கியோசாகி வழங்கும் முக்கிய அறிவுரை!

வெள்ளி விலை நிலவரம்:

தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் இன்று பலத்த சரிவைச் சந்தித்துள்ளது. அதன்படி, கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் குறைந்து 290 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளிக்கு 10ஆயிரம் ரூபாய் குறைந்து 2.90 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. தொழில்துறை பயன்பாட்டிற்கான வெள்ளியின் தேவை சர்வதேச அளவில் குறைந்ததே இந்தச் சரிவுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

Follow Us