Health Tips: மழைக்காலத்தில் புரத உணவுகள் ஏன் முக்கியம்..? என்னென்ன உணவுகளை எடுக்க வேண்டும்?
Protein Rich Foods in Monsoon: புரத உணவு குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், செரிமானத்தை மேம்படுத்தவும், உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. மேலும் புரதமானது காயத்தை குணமாக்கவும், தசை வளர்ச்சி மற்றும் எலும்பு அடர்த்திக்கும் உதவுகிறது. அந்தவகையில், மழை காலத்தில் சாப்பிட வேண்டிய புரத உணவு பட்டியலை பற்றி தெரிந்து கொள்வோம்.

மழைக்காலங்களில் (Rainy Season) உங்களில் உணவில் புரதங்கள் உள்ளிட்ட சில சூப்பர் ஃபுட்களை சேர்ப்பது உடலை ஆரோக்கியமாக வைக்கவும், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் உதவி செய்யும். புரதம் என்பது அமினோ அமிலங்கள் எனப்படும் சிறிய பொருட்களால் ஆன ஒரு பெரிய ஊட்டச்சத்து ஆக்கும். புரத உணவு (Protein) குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், செரிமானத்தை மேம்படுத்தவும், உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. மேலும் புரதமானது காயத்தை குணமாக்கவும், தசை வளர்ச்சி மற்றும் எலும்பு அடர்த்திக்கும் உதவுகிறது. இது மட்டுமின்றி ஃபோலிக் அமிலம், செலினியம், துத்தநாகம், பைட்டோநியூட்ரியன்ஸ் மற்றும் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் வழங்குகின்றன. அந்தவகையில், மழை காலத்தில் சாப்பிட வேண்டிய புரத உணவு பட்டியலை பற்றி தெரிந்து கொள்வோம்.
முட்டைகள்:
முட்டைகள் புரதத்தின் எளிமையான வடிவமாகும். அவற்றில் அனைத்து அத்தியாவசிய அமினோ அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன. மழைக்காலங்களில் மக்கள் சிக்கன் உள்ளிட்ட அசைவங்களை சாப்பிடுவதைத் தவிர்க்கிறார்கள். இது செரிமான பிரச்சனையை உண்டாக்கும் என நினைக்கிறார்கள். இதற்கு பதிலாக, மழைக்காலத்தில் குறைந்தது 2 வேகவைத்த முட்டைகளை எடுத்து கொள்ளலாம்.
ALSO READ: சீவிய கேரட் தோலை தூக்கி எறியாதீங்க.. சரும அழகு முதல் செடி வளர்ப்பு வரை பெரிதும் உதவும்!




ரெட் மீட்:
ரெட் மீட் ஒரு முழுமையான புரதம் மற்றும் இரும்பு, பி12 மற்றும் துத்தநாகம் போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்களின் நல்ல மூலமாகும். குறிப்பாக மழைக்காலங்களில் உங்களுக்கு கூடுதல் நோய் எதிர்ப்பு சக்தி தேவைப்படும்போது, மட்டன் சார்ந்த அல்லது மட்டன் எலும்பு சூப் போன்றவற்றை செய்து ஆரோக்கியத்தை பேணலாம்.
பருப்பு வகைகள் மற்றும் தானியங்கள்:
பாசிப்பருப்பு, துவரம் பருப்பு, கொண்டைக்கடலை பருப்பு, காய்கறி போன்றவற்றில் புரதம் நிறைந்தவையாக உள்ளது. இவை மழைக்காலங்களில் ஜீரணிக்க மிகவும் எளிதானவை. இவற்றை தினந்தோறும் எடுத்து கொள்வது செரிமானத்திற்கு உதவுவது மட்டுமின்றி, ஊட்டச்சத்துக்களை அதிகரிக்கிறது. உங்கள் பருப்பு வகைகளில் சிறிது இஞ்சி மற்றும் சீரகத்தைச் சேர்ப்பது வீக்கம், சளி அறிகுறிகளை எதிர்த்துப் போராட ஒரு சிறந்த வழியாகும்.
ALSO READ: சமையலுக்கு மட்டுமல்ல! உப்பை இப்படியும் பயன்படுத்தி பயன் பெறலாம்..!
பனீர்:
பாலில் இருந்து தயாரிக்கப்படும் பனீர், மழைக்காலங்களில் புரதச்சத்து நிறைந்த ஒரு சிறந்த தேர்வாகும். உங்களுக்கு லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லையென்றால், அதில் நிறைய கேசீன் புரதம் உள்ளது. இது சரியாக சமைத்தால் நிறைவாகவும் ஜீரணிக்க எளிதாகவும் இருக்கும். இது உடலுக்கு தேவையான சத்துக்களையும் தரும்.