Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் 10 இந்திய உணவுகள் – புற்றுநோய் மருத்துவர் பகிர்ந்த தகவல்

Gut Health : குடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால் ஒட்டுமொத்த உடல் செயல்பாடுகளும் பாதிக்கும். இதனால் அதனை மருத்துவர்கள் இரண்டாவது மூளை என அழைக்கிறார்கள். இந்த நிலையில் புற்றுநோய் மருத்துவர் ஒருவர் குடல் ஆரோக்கியம் மேம்பட எடுத்துக்கொள்ள வேண்டிய 10 இந்திய உணவுகளை பரிந்துரைத்துள்ளார்.

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் 10 இந்திய உணவுகள் – புற்றுநோய் மருத்துவர் பகிர்ந்த தகவல்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 12 Sep 2025 16:58 PM IST

குடல் ஆரோக்கியம் (Gut Health) என்பது நமது செரிமான மண்டலத்தில் வாழும் நல்ல நுண்ணுயிரிகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் பொறுத்து அமைகிறது.  இந்த நுண்ணுயிரிகள் சரியான அளவில் இருந்தால் செரிமானம் எளிதாக நடக்கும், நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். ஆனால் நுண்ணுயிரிகளின் சமநிலை பாதிக்கப்பட்டால் உடல் நலத்தில் பல பிரச்னைகள் ஏற்படும். நாள்தோறும் நாம் எடுத்துக்கொள்ளும் இயற்கை உணவுகள் தான் குடல் நுண்ணுயிரிகள் வளர்வதற்கு ஆதாரமாக இருக்கும்.  நம் உடல் ஆரோக்கியம் அனைத்தும் செரிமான மண்டலத்தை அடிப்படையாகக் கொண்டது தான். அதனால் தான் குடல் பகுதியை மனிதனின் இரண்டாவது மூளை என மருத்துவர்கள் அழைக்கின்றனர். குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க பிரபல புற்றுநோய் மருத்துவர் அர்பித் பன்சல்  10 இந்திய உணவுகளை பரிந்துரைத்துள்ளார்.

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் 10 இந்திய உணவுகள்

1. தயிர் மற்றும் மோர்

தயிரிலும் மோரிலும் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் குடலின் செயல்பாடுகளை மேம்படுத்த உதவும். இவை உணவுகள் எளிதில் ஜீரணமாவதற்கும், குடல் சுவரை வலுப்படுத்துவதற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதிலும் பெரிதும் உதவுகின்றன. எப்போதும் உப்பு மற்றும் சர்க்கரை சேர்க்காத சாதாரண தயிர் மற்றும் மோர் எடுத்துக்கொள்வது சிறந்தது.

2. இட்லி மற்றும் தோசை மாவு

அரிசி மற்றும் பருப்பின் ஃபெர்மெண்டேசன் முறையில் அதாவது புளித்தல் முறையில் உருவாக்கும் இட்லி மற்றும் தோசை மாவில் உள்ள கார்போஹைட்ரேட் புரதங்களை எளிதாக ஜீரணிக்கவும்,  சத்துக்களை உடல் உறிஞ்சவும் உதவும். இட்லி, தோசை மாவை வேக வைத்த பிறகும் அதில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் நீடிக்கும்.

3. பருப்பு வகைகள்

பாசிப்பருப்பு, துவரம் பருப்பு போன்ற பருப்பு வகைகளில் செரிமானத்துக்கு உதவும் நார்ச்சத்து மற்றும் உடலில் மெதுவாக செயல்படும் ஹார்போஹைட்ரேட்டுகள் நிறைய உள்ளன. இவை குடலில் உள்ள நுண்ணுயிரிகளுக்கு உணவாக அமைகின்றன. இந்த நல்ல நுண்ணுயிரிகள் உற்பத்தி செய்யும் சில இயற்கை அமிலங்கள் குடல் அழற்சியை குறைத்து, குடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன.

இதையும் படிக்க : துரித உணவுகளை தூரம் வையுங்கள்.. ஆண்களின் கருவுறுதலை பாதிக்கும் அபாயம்..!

4. சமைத்து ஆறவைத்த அரிசி

அரிசியை சாதமாக சமைத்து அவற்றைக் குளிர வைத்தால் அதில் ஒரு சிறப்பு நார்சத்து உருவாகும். அதை குடலில் உள்ள பாக்டீரியா உணவாக எடுத்துக்கொண்டு உடலுக்கு தேவையான அமிலங்களாக மாற்றுகிறது. இது குடலை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள உதவும். அதோடு இரத்தத்தில் சர்க்கரையை கட்டுப்படுத்தி அழற்சியைக் குறைக்கிறது.

5.வாழைப்பழம்

வாழைப்பழத்தில் செரிமானத்துக்கு தேவைப்படும் நார்சத்து மற்றும் பெக்டின் அதிகமாக இருக்கும். இவை குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு உணவாக அமைகின்றன. குறிப்பாக ஆண்டிபயாட்டிக் மாத்திரைகள் எடுத்துக்கொள்பவர்களுக்கு குடல் சீராகும் காலக்கட்டத்தில் வாழைப்பழம் சாப்பிட்டால் குடல் ஆரோக்கியம் விரைவாக மேம்படும்.

6. கேழ்வரகு, சோளம், கம்பு

கேழ்வரகு, சோளம், கம்பு போன்ற சிறுதானியங்களில் நார்ச்சத்து மிகவும் அதிகமாக இருக்கும். அதோடு அதில் உள்ள போலிபெனால்ஸ் (Polyphenols) குடலில் உள்ள நல்ல பாக்டீரியாவை வளர உதவுகின்றன. மேலும் இவை இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்தவும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.

7. மஞ்சள்

மஞ்சளில் இயற்கையாக இருக்கும் குர்மின் என்ற சத்து குடல் அழற்சியைக் குறைத்து உடலை சோர்வடைய் செய்யும் ஆக்ஸிடேட்டிவ் ஸ்டிரெஸ்ஸை தடுக்கும். அதோடு குடலில் நல்ல பாக்டீரிய பலவகையாக வளர உதவுகிறது. மஞ்சளை கருப்பு மிளகுடன் எடுத்துக்கொண்டால் அவை உடலில் நல்ல பாக்டீரியா வளர பெரிதும் உதவும்.

இதையும் படிக்க : வெறும் வயிற்றில் டீ குடிப்பதால் என்ன நடக்கும் தெரியுமா? எச்சரிக்கும் மருத்துவர்கள்

8.வெங்காயம் மற்றும் பூண்டு

வெங்காயம் மற்றும் பூண்டு இரண்டும் குடலுக்கு தேவையான நார்ச்சத்துக்களை இயற்கையைாக கொண்டுள்ளன. இவை குடலில் இருக்கும் நல்ல பாக்டீரியா அதிகம் வளர உதவுகின்றன. இதனால் குடல் சமநிலையாக வைத்திருப்பதுடன் செரிமானமும், உடல் ஆரோக்கியமும் மேம்படும்.

9. வெந்தயம்

வெந்தயத்தில் கரையக்கூடிய நார்ச்சத்து உடலில் சர்க்கரை வேகமாக உறிஞ்சப்படுவதைத் தடுக்கிறது. அதே சமயம், குடலில் உள்ள பாக்டீரியார்களுக்கு உணவாக அமைந்து அதனை வளர உதவுகிறது. வெந்தய விதைகளை நீரில் ஊற வைத்து சாப்பிடலாம்.

10. கருப்பு கேரட்

கருப்பு கேரட் வைத்து உருவாக்கப்படும் உணவுகளில் நல்ல பாக்டீரியா நிறைய இருக்கும். இது செரிமானத்திற்கு உதவுவதோடு உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.