Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Health Tips: காருக்குள் தண்ணீர் பாட்டிலை வைத்து செல்லும் பழக்கமா..? எச்சரிக்கை! புற்றுநோயை உண்டாக்கும்!

Car Water Bottle Danger: காரில் வைக்கப்படும் தண்ணீர் பாட்டில்களில் இருந்து வெளியேறும் ஆன்டிமனி மற்றும் பிஸ்ஃபினைல் ஏ போன்ற நச்சுப் பொருட்கள் உடல் நலத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். வெப்பத்தால் பாட்டில்களில் இருந்து வெளியேறும் மைக்ரோபிளாஸ்டிக்குகள் புற்றுநோய், மலட்டுத்தன்மை போன்ற ஆபத்துகளை ஏற்படுத்தும்.

Health Tips: காருக்குள் தண்ணீர் பாட்டிலை வைத்து செல்லும் பழக்கமா..? எச்சரிக்கை! புற்றுநோயை உண்டாக்கும்!
தண்ணீர் பாட்டில் பயன்பாடுImage Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 06 Sep 2025 12:17 PM IST

உங்கள் காருக்குள் (Car)  தண்ணீர் பாட்டிலை வைத்துவிட்டு, பின் அதை எடுத்து அருந்துவது என்பது உடல் நலத்திற்கு பிரச்சனையை உண்டாக்கும். பெரும்பாலான மக்கள் வெயிலில் எங்கையாவது தங்களது காரை நிறுத்தி அதற்குள் வாட்டர் பாட்டில்களை வைத்துவிட்டு செல்கிறார்கள். இதுமாதிரி விட்டுவிட்டு அதை பின்னர் குடிப்பது நல்ல யோசனையல்ல. கடைகளில் நாம் விலை கொடுத்து வாங்கும் பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீரில் (Water Bottle) 80 சதவீதம் மைக்ரோபிளாஸ்டிக் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இவை நம் உடலில் புற்றுநோய் (Cancer) முதல் மலட்டுத்தன்மை வரை பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடிய பிற தீங்கு விளைவிக்கும் பொருட்கள் ஆகும். இவை நம் வீட்டு பிள்ளைகள் அருந்தும்போது குழந்தைகளின் வளர்ச்சி குன்றுதல், சிறு வயதிலேயே நீரிழிவு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.

ஏன் ஆபத்து இது..?

உங்கள் காரில் உள்ள பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து தண்ணீர் குடிப்பது தீங்கு விளைவிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். உங்கள் காரைப் பூட்டும்போது, ​​ஏர் கண்டிஷனிங் இயக்கப்படுவதில்லை. இதனால் காரை எங்கையாவது நிறுத்தி வைக்கும்போது காருக்குள் இருக்கும் காற்று வெப்பமடைகிறது. இது பாட்டில் தண்ணீரை இன்னும் நச்சுத்தன்மையடையச் செய்கிறது.

ALSO READ: மூளையை உண்ணும் அமீபா என்றால் என்ன..? இது உண்மையில் மூளையை சாப்பிடுமா..?

சீனாவின் நான்ஜிங் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், பிளாஸ்டிக் பாட்டில்களில் 4 வாரங்கள் வரை தண்ணீரை வைத்தால், வெப்பநிலை 158 டிகிரி பாரன்ஹீட் அல்லது 70 டிகிரி செல்சியஸை எட்டும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த அதிக வெப்பநிலையில், பாலிஎதிலீன் டெரெப்தாலேட்டால் செய்யப்பட்ட பாட்டில்களிலிருந்து ஆண்டிமனி மற்றும் பிஸ்பீனால் ஏ ஆகியவை தண்ணீருக்குள் கசிக்கின்றன.

ஆன்டிமனி நம் உடலுக்குள் நுழையும்போது தலைவலி, வாந்தி மற்றும் அடிவயிற்றின் கீழ் வலியை ஏற்படுத்த தொடங்கும். இது இரவில் தூக்கமின்மையை ஏற்படுத்துவது மட்டுமின்றி, நீண்டகால உடல் உபாதை பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். மேலும், இது நுரையீரல் பாதிப்பு மற்றும் வயிற்றுப் புண்களை ஏற்படுத்தும். அதேநேரத்தில், பிஸ்பெனால் ஏவானது உடலுக்குள் நுழையும்போது புற்றுநோய், மலட்டுத்தன்மை, மன இறுக்கம், இருதய நோய் மற்றும் ஒரு சில நேரங்களில் அகால மரணம் ஆகியவற்றையும் உண்டாக்குகிறது. எனவே, இதுபோன்ற சூழ்நிலையில் எச்சரிக்கையுடன் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

ஒரு நாளில் வெளிப்புற வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாக இருந்தாலும், ஒரு காருக்குள் வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸை எட்டும். அதிக வெப்பநிலை நாளில் 40 நிமிடங்களுக்குள், அந்த வெப்பநிலை 47 டிகிரியை எட்டும். ஒரு மணி நேரத்திற்குள், அது 50 டிகிரி செல்சியஸுக்கு மேல் உயரும். உட்புற வெப்பநிலை 70 டிகிரி செல்சியஸை எட்டும்போது ஆன்டிமனி மற்றும் பிஸ்பெனால் ஏ உமிழ்வு தண்ணீருக்குள் நடக்கும் என 2023ம் ஆண்டில், கனடாவில் உள்ள மெக்கில் பல்கலைக்கழகமும் இதே போன்ற தரவுகளை முன்வைத்தது.

ALSO READ: கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கான 3 காரணங்கள்.. தடுப்பது எப்படி..?

அதிக வெப்பநிலையால் பிளாஸ்டிக் பாட்டில்கள் மீது ஏற்படும் விளைவுகள் மிகவும் ஆபத்தானது. 37 டிகிரி செல்சியஸில், பாலிஎதிலீன் போன்ற பொதுவான பிளாஸ்டிக்குகளுக்கு கூடுதலாக, மைக்ரோ மற்றும் நானோ பிளாஸ்டிக்குகள் தண்ணீரில் வெளியிடப்படுவது கண்டறியப்பட்டது. மற்றொரு சமீபத்திய ஆய்வில், நீங்கள் எவ்வளவு விலை உயர்ந்த பிராண்ட் பிளாஸ்டிக் பாட்டில்களை வாங்கினாலும், பிளாஸ்டிக் பாட்டிலுக்குள் இருக்கும் ஆயிரக்கணக்கான நச்சு நுண் பிளாஸ்டிக்குகள் வெப்பநிலையின்போது ஆபத்தை தரும். அதன்படி, தண்ணீருக்குள் கலக்கும் பிளாஸ்டிக்குகள் டிஎன்ஏவை சேதப்படுத்துகின்றன. மரபணு செயல்பாட்டை பாதிக்கின்றன. இதனால் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்க செய்யும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.