Constipation Relief: தினமும் மலச்சிக்கலால் அவதிப்படுகிறீர்களா? இவை பிரச்சனையை சரிசெய்யும்!
Home Remedies for Constipation Relief: மலச்சிக்கல் பிரச்சனைக்கு இயற்கை வழியில் தீர்வு காண வீட்டு வைத்தியங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வெதுவெதுப்பான நீர், பழங்கள், காய்கறிகள், நார்ச்சத்துள்ள உணவுகள், திரிபலா, ஆளி விதை, சியா விதை, அத்திப்பழம், வெந்தயம், கொடிமுந்திரி, வாழைப்பழம் போன்றவை மலச்சிக்கலைப் போக்க உதவும்.

மலச்சிக்கல் (Constipation) என்பது செரிமான அமைப்பின் ஒரு பொதுவான பிரச்சனையாகும், இதில் குடல் இயக்கம் கடினமாகிறது. நீடித்த மலச்சிக்கல் வயிற்றில் கனத்தன்மை, வாயு மற்றும் அமிலத்தன்மைக்கு வழிவகுக்கும். அத்தகைய சூழ்நிலையில், இந்த வீட்டு வைத்தியங்களை மேற்கொள்வது நன்மை பயக்கும். காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது குடல்களைச் செயல்படுத்தி மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கும். உங்கள் உணவில் பழங்கள், பச்சை காய்கறிகள் மற்றும் முழு தானியங்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள். இவற்றில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. நார்ச்சத்து செரிமானத்தை (Digestion) எளிதாக்குகிறது மற்றும் மலத்தை மென்மையாக வெளியேற்றுகிறது. இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன் ஒரு டீஸ்பூன் திரிபலா பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிப்பது மலச்சிக்கலில் இருந்து விரைவான நிவாரணம் அளிக்கும்.
ஒரு டீஸ்பூன் நெய்யுடன் ஒரு டம்ளர் சூடான பாலைக் கலந்து குடிப்பது குடல் உயவுத்தன்மையை அதிகரித்து குடல் இயக்கத்தை எளிதாக்குகிறது. யோகா, பிராணயாமம் மற்றும் மென்மையான நடைபயிற்சி செரிமானத்தை அதிகரித்து மலச்சிக்கலை வேரிலிருந்தே நீக்க உதவுகிறது.
ALSO READ: பச்சையாக வெங்காயம் சாப்பிட பிடிக்குமா? எச்சரிக்கை.. இந்த பிரச்சனைகள் வரலாம்!




ஆளி விதை:
உங்கள் உணவில் ஆளி விதைகள் அல்லது ஆளி விதை எண்ணெயை சேர்த்து கொள்ளுங்கள். இவை நார்ச்சத்து நிறைந்தவை மட்டுமல்ல, மலமிளக்கிய விளைவையும் கொண்டுள்ளன. இவை மலம் கழிக்க பெரிதும் உதவி செய்யும்.
சியா விதைகள்:
சியா விதைகள் பெரும்பாலும் எடை இழப்புக்கு பயன்படுத்தப்படுகின்றன. அதேநேரத்தில், ஊறவைத்த சியா விதைகளை சாப்பிடுவது ஒரு மலமிளக்கிய விளைவை உருவாக்கும். இதன் உதவியுடன் நீங்கள் எளிதாக மலம் கழிக்கலாம்.
அத்திப்பழங்கள்:
அத்திப்பழங்கள் மலச்சிக்கலுக்கு ஒரு சிறந்த தீர்வாகும். நார்ச்சத்து நிறைந்த அத்திப்பழங்களை ஊறவைத்து உண்ணப்படும்போது மலமிளக்கியாகவும் செயல்படுகிறது.
வெந்தயம்:
வெந்தயம் ஊறவைப்பதம் மூலம், அவை வீங்கி, அவற்றின் நீர் உறிஞ்சும் திறன் அதிகரிக்கிறது. ஊறவைத்த வெந்தயத்தை தினமும் சாப்பிடுவது மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கும்.
ALSO READ: அடிக்கடி உங்களுக்கு வயிற்றில் வாயு தொல்லையா..? ஆரோக்கிய செரிமானத்திற்கான குறிப்புகள்!
கொடி முந்திரி:
ஊறவைத்த உலர்ந்த பிளம்ஸ் அல்லது கொடிமுந்திரி சாப்பிடுவது மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் தரும். இதில், கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது வயிற்றை இயற்கையாகவே சுத்தம் செய்யும். இது ஆயுர்வேத மொழியில் இயற்கை மலமிளக்கி என்று அழைக்கப்படுகிறது.
வாழைப்பழம்:
வாழைப்பழம் ஊட்டச்சத்து நிறைந்த பழமாகும். இதில் உள்ள நார்ச்சத்து எளிதில் ஜீரணிக்க உதவுகிறது. மேலும், வயிற்றில் உள்ள அமிலத்தை நடுநிலையாக்குகிறது. வாழைப்பழத்தில் பல்வேறு வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இவை மலச்சிக்கலுக்கு தீர்வை தரும்.