Health Tips: பச்சையாக வெங்காயம் சாப்பிட பிடிக்குமா? எச்சரிக்கை.. இந்த பிரச்சனைகள் வரலாம்!
Raw Onions Side Effects: பச்சை வெங்காயம் சாப்பிடுவதால் வயிற்று பிரச்சினைகள், வாய் துர்நாற்றம், ஒவ்வாமை, இரத்த சர்க்கரை அளவு மாற்றம் மற்றும் இதயப் பிரச்சினைகள் ஏற்படலாம். நார்ச்சத்து அதிகம் இருப்பதால், சிலருக்கு அஜீரணம் ஏற்படலாம். சல்பர் கலவைகள் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.

சமையலுக்கு (Cooking) வெங்காயம் என்பது மிகவும் முக்கியமான பொருளாகும். வெங்காயம் இல்லாமல் பொறியல் முதல் குழம்பு வரை எதையும் செய்ய இயலாது. இதுபோன்ற சூழ்நிலையில், பலரும் அதை பச்சையாக சாப்பிட விரும்புகிறார்கள். ஆனால் வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவது ஆரோக்கியத்தில் பல எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? நம் உணவின் சுவையை அதிகரிக்கும் வெங்காயம், நம்மை நோய்வாய்ப்படுத்தும் ஆற்றலையும் கொண்டுள்ளது. எனவே இன்று வெங்காயத்தை பச்சையாக (Raw Onion) சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகளை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.
வயிறு மற்றும் செரிமானத்தில் பிரச்சனையை தரும்:
வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவது வாயு மற்றும் அஜீரணத்தை ஏற்படுத்தும். வெங்காயத்தில் அதிகளவில் நார்ச்சத்து உள்ளது. இதை பச்சையாக சாப்பிடும்போது சிலருக்கு அவை வயிற்றில் கனமாக உணரவைத்து அசௌகரியத்தை ஏற்படுத்தும். உங்களுக்கு ஏற்கனவே இரைப்பை அழற்சி அல்லது அமிலத்தன்மை போன்ற வயிற்று பிரச்சினைகள் இருந்தால், பச்சை வெங்காயம் பிரச்சனையை அதிகரிக்கச் செய்யும்.
ALSO READ: செய்தித்தாளில் வைக்கப்பட்ட உணவை சாப்பிடலாமா..? செய்தித்தாள் மையின் ஆபத்துகள்!
வாய் துர்நாற்றம்:
பச்சை வெங்காயத்தை சாப்பிட்ட பிறகு வாய் துர்நாற்றம் ஏற்படுவது சகஜம். அதில் உள்ள சல்பர் கலவைகள் வாயின் வாசனையைப் பாதிக்க செய்யும். நீங்கள் பச்சை வெங்காயத்தை சாப்பிட்டுவிட்டு அலுவலகத்தில் அல்லது நண்பர்களுடன் இருந்தால் அது சற்று சங்கடமான சூழ்நிலையை உருவாக்கும். எனவே அலுவலகத்திற்குச் செல்லும்போதோ அல்லது நண்பர்களுடன் இருக்கும்போதோ பச்சை வெங்காயத்தை சாப்பிடுவதைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.
ஒவ்வாமை மற்றும் தோல் பிரச்சினைகள்:
சிலருக்கு வெங்காயம் ஒவ்வாமை ஏற்படலாம். இது தோல் வெடிப்பு, அரிப்பு அல்லது வீக்கம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். வெங்காயம் சாப்பிட்ட பிறகு உங்கள் உடலில் ஏதேனும் பிரச்சனையை எதிர்கொண்டால், உடனடியாக மருத்துவரை அணுகவும். இதுபோன்ற பிரச்சனைகளுக்கு நீங்கள் கவனம் செலுத்தவில்லை என்றால், அது நிறைய பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
இரத்த சர்க்கரையின் மீதான விளைவு
வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவது இரத்த சர்க்கரையில் திடீர் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தும். சர்க்கரை நோயாளிகள் இதை மனதில் கொள்ள வேண்டும். மேலும் மருத்துவரை அணுகாமல் அதிக அளவில் பச்சை வெங்காயத்தை சாப்பிடக்கூடாது.
இதயம் மற்றும் இரத்த அழுத்தம்
வெங்காயத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அவை ஆரோக்கியமானவைதான். ஆனால், அதிகமாக பச்சை வெங்காயத்தை சாப்பிடுவது சிலருக்கு இரத்த அழுத்தம் அல்லது இதயத் துடிப்பை பாதிக்கலாம்.
ALSO READ: முட்டை சாப்பிடுவதால் வாயுத்தொல்லை உருவாகுமா? உண்மை என்ன?
வெங்காயம் சாப்பிட விரும்பினால், வறுத்த அல்லது லேசாக சமைத்த பிறகு சாப்பிடுவது பாதுகாப்பானது. இது ஆரோக்கியத்திற்கும் நல்லது. இது தவிர, நீங்கள் பச்சையாக வெங்காயத்தை சாப்பிட்டால், சாலட்களில் பயன்படுத்துவது போல, மிகக் குறைந்த அளவில் சாப்பிடுங்கள், இது பல வகையான பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும்.