காய்கறிகளை சமைப்பதால் அவற்றின் ஊட்டச்சத்துக்கள் குறையுமா? உண்மை என்ன?
Nutrition Facts Alert : காய்கறிகளில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக அவற்றில் நார்சத்து அதிக அளவில் உள்ளது. இந்த நிலையில் காய்கறிகளை சமைத்து சாப்பிடுவது நல்லதா அல்லது நேரடியாக சாப்பிட்டால் பலன் கிடைக்குமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது.

நாம் அனைவரும் நம் ஆரோக்கியத்திற்காக ஒவ்வொரு நாளும் காய்கறிகளை சாப்பிடுகிறோம். நிறைய பேர் குறிப்பாக பிரபலங்கள் பலரும் காய்கறிகளை சமைக்காமல் சாலட்களாக சாப்பிடுவதை பார்த்திருப்போம். காரணம் காய்கறிகளை சமைப்பதால் அதில் உள்ள ஊட்டச்சத்துகள் குறைவாக ஒரு நம்பிக்கை இருக்கிறது. காய்கறிகள் மற்றும் பழங்களில் அதிக நார்சத்து (Fiber) உள்ளது. மேலும் உடலுக்கு அன்றாடம் தேவையான வைட்டமின்கள் தாதுக்கள் உள்ளன. எனவே உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க தினசரி உணவில் காய்கறிகளை சேர்க்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ஆனால் காய்கறிகளை அதிகமாக சமைப்பது அவற்றில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்களைக் குறைக்குமா? இந்த கட்டுரையில் அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
காய்கறிகளில் வைட்டமின்கள் A, C, K, B-காம்ப்ளக்ஸ், தாதுக்களான கால்சியம், இரும்பு, பொட்டாசியம் , நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. உடலுக்கு ஆற்றலை வழங்குவதோடு மட்டுமல்லாமல், அவை நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றன. ஆனால் ஊட்டச்சத்துக்களின் செயல்திறன் நீங்கள் அவற்றை எப்படி சமைக்கிறீர்கள் என்பதையும் பொறுத்து அமைகிறது.
இதையும் படிக்க : மூளை, நோய் எதிர்ப்பு சக்தி, தசை வளர்ச்சிக்கு உதவும் 5 சூப்பர் உணவுகள்




காய்கறிகளை அதிகமாக சமைத்தால் என்ன நடக்கும்?
- காய்கறிகளை நீண்ட நேரம் வேகவைக்கும்போது அல்லது வறுக்கும்போது, அவற்றில் உள்ள வைட்டமின் சி மற்றும் பி-காம்ப்ளக்ஸ் போன்ற சிலசென்சிட்டிவ் வாய்ந்த வைட்டமின்கள் உடைந்து போகத் தொடங்குகின்றன. அவை தண்ணீர் மற்றும் வெப்பத்திற்கு மிகவும் சென்சிட்டிவானவை.
- வைட்டமின் சி எலுமிச்சை, தக்காளி, கேப்சிகம் மற்றும் கீரைகளில் காணப்படுகிறது. நீண்ட நேரம் சமைத்தால் அதில் பெரும்பாலானவை அழியக்கூடும். அதனால் முழு பலன் கிடைக்காது.
- பி வைட்டமின்கள் குறிப்பாக பி-காம்ப்ளக்ஸ் நீரில் கரையக்கூடியவை. எனவே, அவற்றை நீண்ட நேரம் வேகவைக்கும்போது, அவை தண்ணீரில் கரைகின்றன. இதனால் குறைவான அளவே நம் உடலுக்கு கிடைக்கும்.
- இருப்பினும், அனைத்து ஊட்டச்சத்துக்களும் இழக்கப்படுவதில்லை. இரும்பு, மெக்னீசியம் மற்றும் கால்சியம் போன்ற சில தாதுக்கள் வெப்பத்தால் பாதிக்கப்படுவதில்லை. சமைத்த பிறகும் அவை உடலுக்குக் கிடைக்கும்.
இதையும் படிக்க : இரத்த எண்ணிக்கையை அதிகரிக்க ஆம்லா – பீட்ரூட் ஜூஸ்: உண்மையில் பலனளிக்குமா?
சமைப்பது சில ஊட்டச்சத்துக்களை அதிகரிக்கும்
சமைப்பது தீங்கு விளைவிப்பதில்லை என்பதை அறிந்து கொள்வது அவசியம். சமைத்த பிறகு அவற்றில் உள்ள சில ஊட்டச்சத்துக்கள் அதிகரிக்கின்றன. உதாரணமாக தக்காளியில் உள்ள ஆக்ஸிஜனேர்ற லைகோபீன் சமைத்த பிறகு மிகவும் சுறுசுறுப்பாகிறது. கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின், அவற்றை சமைக்கும்போது அவற்றை தக்கவைக்கிறது. எனவே காய்கறிகளை பெரும்பாலும் சமைத்து சாப்பிடுவதே சிறந்தது.
ஊட்டச்சத்துக்களை முழுமையாக பெறுவதற்கான வழிகள்
- காய்கறிகளை நீண்ட நேரம் சமைக்க வேண்டாம்.
- ஆவியில் வேகவைத்து சாப்பிடுவது நல்லது.
- கொதிக்க வைப்பதற்கு குறைந்த தண்ணீரைப் பயன்படுத்துங்கள்.
- காய்கறிகளை அவற்றின் தோலுடன் சாப்பிட முயற்சிக்கவும். ஏனெனில் தோல்களில் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்தும் உள்ளது.