Children’s Health Risks: பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு பிளாஸ்டிக் டிபன் பாக்ஸா..? ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு!
Plastic Lunchbox Dangers: பள்ளிச் செல்லும் குழந்தைகளுக்கு பிளாஸ்டிக் டிபன் பயன்பாட்டின் ஆபத்துகளை இந்தக் கட்டுரை விளக்குகிறது. பிளாஸ்டிக்கில் இருந்து வெளிவரும் ரசாயனங்கள், குறிப்பாக BPA, ஹார்மோன் சமநிலையை பாதித்து, செரிமான பிரச்சனைகள் மற்றும் புற்றுநோய் ஆபத்தை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

பிறந்த குழந்தைகள் முதல் பள்ளி செல்லும் சிறுவர்கள் வரை பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் அதிக கவனம் செலுத்துகின்றனர். இருப்பினும், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கான டிபன் பாக்ஸை (Lunchbox) தேர்ந்தெடுப்பதில் தவறான முடிவுகளை எடுக்கிறார்கள். இது குழந்தைகளின் உடல்நலத்தில் பிரச்சனையை தருகிறது. பெரும்பாலான பெற்றோர்கள் பிளாஸ்டில் டிபனை (Plastic Lunchbox) கொடுக்கிறார்கள். ஏனெனில், இதை பெற்றோர்கள் மற்றும் சிறியவர்கள் கையாள்வது என்பது எளிதான ஒன்று. மேலும், கவர்ச்சிகரமான வடிவமைப்புகளில் கிடைக்கும் என்பதாலும், விலையும் மலிவானவை என்பதாலும் பெற்றோர்கள் இதை தேர்ந்தெடுக்கிறார்கள். அதன்படி, ஒவ்வொரு நாளும் உங்களது பிள்ளைகளுக்கு கொடுக்கும் டிபன் எந்த அளவிற்கு ஆரோக்கியத்தை கெடுக்கும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
பிளாஸ்டிக் டிபன் பாக்ஸ்களில் இருந்து வெளியாகும் ரசாயனங்கள், குறிப்பாக சூடான உணவை அவற்றின் மீது வைக்கும்போது, நம் பிள்ளைகளின் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும். அதாவது, ஹார்மோன் சமநிலை, செரிமான அமைப்பு போன்றவை பாதிக்கப்படலாம்.
ALSO READ: காலையில் புத்துணர்ச்சியுடன் எழ வேண்டுமா? இதை சாப்பிட்டால் போதும்..!




BPA ரசாயனம்:
கடைகலில் வாங்கப்படும் பிளாஸ்டிக் டிபவ் பாக்ஸ்களில் பிபிஏ என்று அழைக்கப்படும் பிஸ்பெனால் ஏ ரசாயனங்கள் உள்ளது. இவை அதிக வெப்பத்தில் உணவை வைக்கும்போது உணவை விரைவாக கெட்டுப்போக செய்யும். இதுமட்டுமின்றி, இந்த இரசாயனம் கலந்த உணவை சாப்பிடும்போது நம் பிள்ளைகளின் ஹார்மோன் சமநிலையின்மை, குழந்தைகளின் வளர்ச்சியில் இடையூறு மற்றும் நடத்தையில் மாற்றங்கள் போன்றவை ஏற்படும்.
புற்றுநோய்:
பிளாஸ்டிக் டிபன் பாக்ஸ்களில் இருந்து நீண்ட காலமாக உணவை எடுத்து கொள்ளும்போது பிபிஏ மற்றும் பிற இரசாயனங்கள் புற்றுநோய் போன்ற நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
செரிமான அமைப்பு:
சூடான உணவை பிளாஸ்டிக் டிஃபனில் வைக்கும்போது , அதிலிருந்து வெளியாகும் நச்சு இரசாயனங்கள் குழந்தையின் செரிமான அமைப்பை படிப்படியாக பலவீனப்படுத்தி, வாயு, அஜீரணம் மற்றும் வயிற்று வலி போன்றவற்றை ஏற்படுத்தும்.
நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடையும்:
பிளாஸ்டிக்கிலிருந்து வெளியாகும் நச்சுகள் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பாதித்து, அடிக்கடி நோய்வாய்ப்படுவதற்கு காரணமாகின்றன.
பிளாஸ்டிக் டிபனுக்கு பதிலாக என்ன டிபன் பாக்ஸ்களை பயன்படுத்தலாம்..?
- பள்ளி செல்லும் நம் பிள்ளைகளுக்கு சில்வர் அல்லது கண்ணாடி டிபன் பாக்ஸை தேர்ந்தெடுக்கலாம். இவை பாதுகாப்பானவை மட்டுமல்ல, நீண்ட காலமும் உழைக்கும். உங்கள் பிள்ளைகள் கண்ணாடி டிபன் பாக்ஸை தெரியாதவர்கள் என்றால், சில்வர் டிபன் பாக்ஸ் பாதுகாப்பானது.
- பிளாஸ்டிக் பயன்படுத்துகிறீர்கள் என்றால், BPA இல்லாத மற்றும் உணவு தர பிளாஸ்டிக்கை மட்டுமே பயன்படுத்துங்கள். இது நம் பிள்ளைகளின் ஆரோக்கியத்தை கெடுக்காத வகையில் இருக்கும்.
- பிளாஸ்டிக் டிபன் பாக்ஸ் பயன்படுத்த வேண்டுமென்ற கட்டாயம் ஏற்பட்டால், சூடான உணவை வைப்பதை தவிர்க்கவும். சூடான உணவு ஆறிய பிறகு, அதில் வைத்து பயன்படுத்தலாம்.
ALSO READ: மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும் மன அழுத்தம் – எப்படி தவிர்ப்பது?
நம் குழந்தையின் உடல்நலம் குறித்து கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பதும், சரியான டிபன் பாக்ஸைத் தேர்ந்தெடுப்பதும் மிகவும் முக்கியம் . வண்ணமயமான டிபன்களின் மினுமினுப்பு கொஞ்ச நாளில் மறைந்து, அதில் இருந்து பிளாஸ்டிக் துகள்கள் வெளியேற தொடங்கும். இது வயிற்றுக்குள் சென்று பிரச்சனையை உண்டாக்கும். அதன்படி, இதுமாதிரியான சிறிய சிறிய முன்னெச்சரிக்கைகள் நம் பிள்ளைகளுக்கு பல பெரிய நோய்கள் வராமல் தடுத்து காப்பாற்றும்.