உணவில் கலக்கும் பிளாஸ்டிக் துகள்கள் – உடலுக்கு என்ன பாதிப்பு ஏற்படும்? தவிர்ப்பது எப்படி?
Microplastics in Everyday Food : சமீபத்திய ஆய்வில், தினசரி பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டில்கள், டீ பேக்குகள், பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருட்கள் போன்றவற்றில் இருந்து மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் நம் உணவிலும் குளிர்பானங்களிலும் கலக்கின்றன என்பது கண்டறியப்பட்டது. இவற்றை எப்படி தவிர்ப்பது என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

மிகவும் சாதாரணமாக கடைகளில் பிளாஸ்டிக் (Plastic) பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொட்களின் வழியாக, உடலுக்குள் மைக்ரோ பிளாஸ்டிக் (Micro Plastic) துகள்கள் உடலுக்குள் செல்கின்றன என்பதை புதிய ஆய்வு வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் கத்தரிக்கோல்கள், பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள் (Water Bottle), பிளாஸ்டிக் மூடியுடன் கூடிய கண்ணாடி பாட்டில்கள், பிளாஸ்டிக் டீ பேக்குகள், பிளாஸ்டிக் வடிகட்டிகள் போன்ற பிளாஸ்டிக் பொருட்களில் இருந்து நம் உணவு மற்றும் குளிர்பானங்களில் மைக்ரோ மற்றும் நானோ பிளாஸ்டிக் துகள்கள் கலப்பதாக என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
மைக்ரோவேவ் பிளாஸ்டிக் பாக்ஸ்களில் உணவை சூடாக்குவதும் ஆபத்தானது
அண்மையில் என்பிஜே சயின்ஸ் ஆஃப் ஃபுட் (NPJ Science of Food) என்ற மருத்துவ இதழில் வெளியான ஆய்வில், மைக்ரோவேவ் பிளாஸ்டிக் டிபன்களில் உணவை தொடர்ந்து சூடாக்குவதால் மைக்ரோ பிளாஸ்டிக் வெளியேறும் அளவு அதிகரிக்கிறது எனவும், இதனால் நம் உடல் பாதிக்கக்கூடும் எனவும் எச்சரித்திருக்கிறது.
மேலும் “பிளாஸ்டிக் பேக்கிங்களை அதன் இயல்பான பயன்பாட்டில் பயன்படுத்தும் போதே மைக்ரோ மற்றும் நானோ பிளாஸ்டிக் துகள்கள் நம் உணவுக்குள் கலக்கின்றன என்பது முதன்முறையாக நிரூபிக்கப்பட்டுள்ளது” என, ஸ்விட்சர்லாந்தில் உள்ள ஃபுட் பேக்கேஜிங் ஃபாரம் அமைப்பை சேர்ந்த லிசா லிம்மர்மேன் தெரிவத்திருக்கிறார். அத்துடன், “ஒவ்வொரு முறையும் பாட்டிலைத் திறக்கும் போதும் அந்த துகள்கள் கூடுதலாக வெளிவருகின்றன. எனவே ஒவ்வொருமுறை பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும்போதும் அதில் இருந்து மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் வெளிப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.




பிளாஸ்டிக் துகள் அதிகம் காணப்படும் உணவுப்பொருட்கள்
இந்த ஆய்வில் மைக்ரோ பிளாஸ்டிக்குகள் அதிகம் காணப்பட்ட உணவுப்பொருட்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில்,
-
பீர்
-
பிளாஸ்டிக்கில் சேமிக்கப்பட்ட மீன்
-
அரிசி
-
மினரல் வாட்டர்
-
டீ பேக்குகள்
-
உப்புகள்
-
பார்சல் உணவுகள்
-
கார்பனேட்டட் குளிர்பானங்கள்.
இந்த பிளாஸ்டிக் துகள்கள் உடலுக்கு என்ன பாதிப்பு?
மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் குடலின் உள் சுவரில் அழற்சி ஏற்படுத்தலாம், ஹார்மோன்களின் மாற்றத்தை தூண்டும், நீரிழிவு போன்ற பிரச்சனைகள் உருவாகக்கூடும்.
எப்படி தடுப்பது?
-
பிளாஸ்டிக்குக்குப் பதிலாக கண்ணாடி அல்லது செராமிக் பொருட்களைப் பயன்படுத்துங்கள்.
-
பாக்கெட்டுகளில் அடைக்கப்படு விற்கப்படும் உணவுகளை குறைவாக உண்ணுங்கள்.
-
பழங்கள், காய்கறிகளை நன்றாக கழுவி உண்ணுங்கள்.
-
டீ பேக்குகள் பயன்படுத்துவதை தவிர்த்து டீத்தூளை பயன்படுத்தலாம்.
பிளாஸ்டிக்கால் பேக் செய்யப்பட்ட உணவுகளை நம் வாழ்க்கையில் முற்றிலும் தவிர்க்க முடியாதபோதும், அதிக எச்சரிக்கையுடன் பயன்படுத்துவது அவசியம். மேலும் மாற்று வழிகளைத் தேர்ந்தெடுத்து நாம் நமது உடலையும், எதிர்கால சமுதாயத்தையும் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை.