உடலில் புரோட்டீன் குறைபாட்டினால் ஏற்படும் பிரச்னைகள் என்ன ? எப்படி சரி செய்வது?
Protein Deficiency : உடலில் புரோட்டீன் குறைபாடு ஏற்பட்டால், முதலில் சோர்வு, தசை பலவீனம், முடி உதிர்தல், நகங்கள் உடைதல், சரும வறட்சி போன்ற அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும். ஒருவர் நாள் முழுக்க சுறுசுறுப்பாக செயல்பட அவர்கள் போதுமான அளவு உணவில் புரோட்டீன் எடுத்துக்கொள்வது அவசியம். இந்த கட்டுரையில் அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

புரோட்டீன் (Protein) குறைபாடு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் பாதிக்கிறது, இதனால் அடிக்கடி தொற்றுகள் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கும் சூழ்நிலை உருவாகும். பொதுவாக உடலில் புரோட்டின் குறையும்போது தசை பலவீனம், எடை இழப்பு மற்றும் காயங்கள் மெதுவாக குணமடைதல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் புரோட்டீன் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம். குறிப்பாக குழந்தைகளுக்கு (Children) இந்தக் குறைபாடு அவர்களின் வளர்ச்சியைப் பாதிக்கும். மேலும் மனதளவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். உடலில் புரதத்தின் அளவு குறையும் போது, உடலில் சில அறிகுறிகள் ஏற்படும். அது குறித்தும் இந்த பிரச்னையை எப்படி சரி செய்வது என்பது குறித்தும் இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
புரோட்டின் குறைபாட்டின் அறிகுறிகள் என்ன?
- டெல்லி எம்சிடியின் மூத்த மருத்துவரான டாக்டர் அஜய் குமார், ஒருவருக்கு புரோட்டீன் குறைபாடு ஏர்பட்டால் அவர் மதொடர்ந்து சோர்வாக உணர்வார். இது தான் ஆரம்ப அறிகுறி என்று தெரிவிக்கிறார். உடலில் எனர்ஜி இல்லாமல் மிகவும் அசதியாக உணர்வார். குறிப்பாக லேசான வேலை செய்த பிறகும் ஒருவர் சோர்வாக உணரத் தொடங்கினால் அவருக்கு புரோட்டீன் குறைபாடு இருப்பது உறுதியாகிறது.
- தசைகளை சரிசெய்து வலுப்படுத்த புரதம் தேவைப்படுகிறது, மேலும் அதன் குறைபாடு உடலை சோம்பலாகவும் பலவீனமாகவும் உணர வைக்கிறது.
இதையும் படிக்க: காலையில் எழுந்ததும் முதலில் சாப்பிட வேண்டிய உணவுகள் என்ன? ஆயுர்வேத மருத்துவர்கள் அறிவுரை
- உடலில் புரதம் குறைவாக இருக்கும்போது, அதன் விளைவு முதலில் முடி மற்றும் நகங்களில் தெரியும். முடி மெல்லியதாகவும், உலர்ந்ததாகவும், பலவீனமாகவும் மாறி, விரைவாக உதிரத் தொடங்கும். நகங்களில் விரிசல் ஏற்படுதல், எளிதில் உடைதல் மற்றும் அவை உயிரற்றதாக மாறுதல் ஆகியவையும் இதன் அறிகுறிகளாகும்.
- புரதக் குறைபாடு சருமத்தில் வறட்டியை ஏற்படுத்தும். சில நேரங்களில் அது மிகவும் கடுமையானதாகி, தடிப்புகள் அல்லது ஒவ்வாமைகளும் கூட காணப்படும். சருமத்தை சரிசெய்து ஈரப்பதத்தை பராமரிக்க புரதமும் அவசியம்.
- உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு, புரதம் மிகவும் அவசியம். அது குறையும் போது, அந்த நபருக்கு சளி, இருமல், தொண்டை வலி, தொற்று அல்லது காய்ச்சல் மீண்டும் மீண்டும் ஏற்படும். சிறிய காயங்கள் கூட விரைவாக குணமடைவதில்லை.
- குழந்தைகளில் புரதக் குறைபாட்டின் அறிகுறிகள் இன்னும் தீவிரமாக இருக்கலாம். இது அவர்களின் உடல் மற்றும் மன வளர்ச்சியை நேரடியாக பாதிக்கிறது. அவர்களுக்கு சரியான வளர்ச்சி இருக்காது. அவர்களின் உடல் மெலிந்து காணப்படும். இதனால் அவர்களால் படிப்பில் கவனம் செலுத்த முடியாது.
இதையும் படிக்க: கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும்? எச்சரிக்கை அறிகுறிகள்!
புரதத் தேவையை எவ்வாறு பூர்த்தி செய்வது?
தினசரி உணவில் போதுமான அளவு புரதத்தைச் சேர்ப்பது மிகவும் முக்கியம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். சைவ உணவு உண்பவர்களுக்கு, பருப்பு வகைகள், வேர்க்கடலை, சோயா, டோஃபு, பால் மற்றும் சீஸ் ஆகியவை நல்ல ஆதாரங்கள். அதேசமயம் அசைவ உணவு உண்பவர்கள் முட்டை, கோழி, மீன் போன்றவற்றால் அதை பூர்த்தி செய்யலாம்.
புரதக் குறைபாடு மிகவும் கடுமையானதாக இருந்தால், மருத்துவரை அணுகிய பிறகு புரதச் சத்துக்களை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் மருத்துவ ஆலோசனை இல்லாமல் இதைச் செய்வது தீங்கு விளைவிக்கும்.