வெறும் வயிற்றில் டீ குடிப்பதால் என்ன நடக்கும் தெரியுமா? எச்சரிக்கும் மருத்துவர்கள்
Morning Tea Side Effects : காலையில் எழுந்ததும் டீ குடிப்பது பலருக்கும் ஒரு பழக்கமாக இருந்து வருகிறது. இது செரிமான பிரச்னை முதல் எலும்பு பாதிப்பு வரை தீவிர உடல் நல பிரச்னைகளை ஏற்படுத்தும். இந்த கட்டுரையில் அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பலருக்கும் டீ (Tea) குடிக்கும் பழக்கம் இருக்கிறது. குறிப்பாக டீ குடிக்காமல் ஒரு சிலரால் அந்த நாளை தொடங்க முடியாது. டீ, காபி போன்ற பானங்கள் உடனடியாக புத்துணர்ச்சி அளிக்கின்றன. இருப்பினும் வெறும் வயிற்றில் டீ குடிப்பது அவர்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இது குறித்து பல ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. காலையில் எழுந்ததும் டீ குடிக்கும் பழக்கம், நம் உணவுகளில் இருந்து ஊட்டச்சத்துக்களை உடல் எடுத்துக்கொள்ளும் முறையை தடுக்கிறது. இதன் காரணமாக நம் நாள் முழுவதும் சோர்வாக உணர்கிறோம். மேலும் டீயில் உள்ள காஃபின் விளைவாக நேரடியாக இரத்தத்தில் கலந்து நமக்கு சோர்வு, மன அழுத்தம், எரிச்சலை அதிகரிக்கிறது.
வெறும் வயிற்றில் டீ குடிப்பது ஏன் நல்லதல்ல?
காலையில் நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகள் நம் உடல் நலனில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தேநீரில் உள்ள காஃபின் மற்றும் டானின் போன்றவை வயிற்றில் அமிலத்தன்மையை அதிகரிக்கின்றன. இதன் காரணமாக நாள் முழுவதும் வயிற்றில் வாயு பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும்.
இதையும் படிக்க : காருக்குள் தண்ணீர் பாட்டிலை வைத்து செல்லும் பழக்கமா..? எச்சரிக்கை! புற்றுநோயை உண்டாக்கும்!




வயிற்றுப் புண்கள் ஏற்படும் அபாயம்
வெறும் வயிற்றில் டீ குடித்தால், தேநீரில் உள்ள டானின் மற்றும் காஃபின் வயிற்றில் அமிலத்தை அதிகரிக்கும். பொதுவாக, வயிற்றில் ஒரு சிறிய அளவு அமிலம் உணவை ஜீரணிக்க உதவுகிறது. இருப்பினும், வெறும் வயிற்றில், அமிலம் அதிக அளவில் அடையத் தொடங்குகிறது. இது வயிற்றின் உள் பகுதியை எரிச்சலூட்டுகிறது. இது நீண்ட நேரம் நடந்தால், வயிற்று சுவர் பலவீனமடைந்து புண்கள் போன்ற நோய்களை ஏற்படுத்துகிறது. காலையில் வெறும் வயிற்றில் டீ குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு அமிலத்தன்மை மற்றும் இரைப்பை அழற்சி போன்ற பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. அதனால்தான் வயிற்றில் அமிலத்தின் விளைவைக் குறைக்க டீ குடிப்பதற்கு முன் லேசான காலை உணவை உட்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
செரிமான பிரச்னைகள்
வெறும் வயிற்றில் டீ குடிப்பது செரிமான அமைப்பிலும் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. வயிறு காலியாக இருக்கும்போது, தேநீரில் உள்ள காஃபின் நேரடியாக வயிற்று சுவர் வழியாக உறிஞ்சப்படுகிறது. இது உடனடி விளைவை ஏற்படுத்தும். குறிப்பாக இது வயிற்றுப் பகுதியில் வீக்கம் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. இது சுரப்பிகளின் உணவை ஜீரணிக்கும் திறனைக் குறைக்கிறது. இதன் விளைவாக, உணவு ஜீரணிக்க நேரம் எடுக்கும். ஊட்டச்சத்துக்கள் சரியாக உறிஞ்சப்படுவதில்லை.
இதையும் படிக்க : உங்களுக்கு இந்த 5 உடல்நல பிரச்சனைகள் இருக்கா..? ஏன் மாதுளை சாப்பிடக்கூடாது தெரியுமா?
எலும்பு ஆரோக்கியத்தில் பாதிப்பு
சில ஆராய்ச்சிகள் ஒருவர் அதிகமாக டீ குடித்தால் டீயில் உள்ள காஃபின் உடலில் கால்சியம் குறைபாட்டை ஏற்படுத்துகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. வெறும் வயிற்றில் டீ குடிப்பது இந்த விளைவை அதிகரிக்கிறது. ஏனெனில் டீ உடலில் நேரடியாக உறிஞ்சப்படுகிறது. இது எலும்புகளில் கால்சியம் உறிஞ்சுதலை பாதிக்கிறது. வெறும் வயிற்றில் தேநீர் குடிப்பதால் உடலில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் பற்றாக்குறை ஏற்படுகிறது. இது எலும்புகளை பலவீனப்படுத்துகிறது. பெண்களுக்கு இந்த பிரச்னை மிகவும் பொதுவானது. ஏனெனில் பெண்களுக்கு அதிக கால்சியம் தேவைப்படுகிறது. கால்சியம் குறைபாடு எலும்பு வலி, மூட்டு பாதிப்பு மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.