Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Cancer Prevention: புற்றுநோய் வராமல் தடுக்க முடியுமா? வாழ்க்கைமுறையை இப்படி மாற்றினால் போதும்!

Cancer Prevention Routine: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஒரு ஆய்வின்படி, தினமும் நடப்பது புற்றுநோயின் அபாயத்தை ஓரளவு குறைக்கும். இது சம்பந்தமாக, சிலரின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டன. அவர்கள் எவ்வளவு அதிகமாக நடக்கிறார்களோ, அவ்வளவுக்கு புற்றுநோய் வராமல் தடுக்கவும் ஆபத்தை குறைக்கவும் முடியும் என்று கண்டறியப்பட்டது.

Cancer Prevention: புற்றுநோய் வராமல் தடுக்க முடியுமா? வாழ்க்கைமுறையை இப்படி மாற்றினால் போதும்!
புற்றுநோய்Image Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 09 Oct 2025 15:31 PM IST

புற்றுநோய் (Cancer) என்பது ஒரு தீவிரமான மற்றும் உயிரை பறிக்கும் ஆபத்தான நோயாகும். இதன் ஆபத்து ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கும். உணவு முறை, வாழ்க்கை முறை (Lifestyle) மற்றும் மரபியல் போன்றவை புற்றுநோய் அதிகரித்து வருவதற்கான முக்கிய காரணங்களாக கருதப்படுகிறது. புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்ற பழக்கங்களும் இந்த நோயின் அபாயத்தை கணிசமாக அதிகரித்து வருவதாக ஆராய்ச்சி கூறுகிறது. எனவே, புற்றுநோயை தடுப்பதற்கான வழிகளை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

புற்றுநோயைத் தடுக்கும் ஆரோக்கியமான பழக்கவழக்கம்:

புற்றுநோய் தடுப்பு உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் குறைக்க உதவும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும். புகைபிடிப்பதை நிறுத்துதல், ஆரோக்கியமான எடையைப் பராமரித்தல் மற்றும் சீரான உணவை உட்கொள்வது முக்கியம். ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை மூலம், இந்த ஆபத்தான நோயின் அபாயத்தை கணிசமாக குறைக்க முடியும். சரியான உணவுமுறை மூலம் சுமார் 30-40 சதவீதம் வரை புற்றுநோய்களை தக்க முடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ALSO READ: உங்களுக்கு தீராத காது வலியா..? சரிசெய்ய உதவும் சில குறிப்புகள்..!

பல ஆரோக்கியமான உணவுகளில் புற்றுநோய் எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன. மேலும், இவற்றை உங்கள் உணவில் சேர்த்து கொள்வதன் மூலம், உங்களில் உடலில் புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுக்கலாம்.

புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் என்னென்ன பொருட்களில் உள்ளன?

தினமும் ஏராளமான பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது நுரையீரல், பெருங்குடல், வயிறு மற்றும் வாய் புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது. பச்சை காய்கறிகளில் செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கும் பைட்டோ கெமிக்கல்கள் (ஃபிளாவனாய்டுகள் மற்றும் கரோட்டினாய்டுகள் போன்றவை) உள்ளன. அவற்றில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது, இது செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.

ப்ரோக்கோலி, காலிஃபிளவர் மற்றும் முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகள் மிகவும் நன்மை பயக்கும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. அவற்றில் சல்ஃபோராபேன் என்ற கலவை உள்ளது, இது புற்றுநோய் செல்களை அழிப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.

நடப்பது மூலம் தடுக்கலாமா..?

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஒரு ஆய்வின்படி, தினமும் நடப்பது புற்றுநோயின் அபாயத்தை ஓரளவு குறைக்கும். இது சம்பந்தமாக, சிலரின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டன. அவர்கள் எவ்வளவு அதிகமாக நடக்கிறார்களோ, அவ்வளவுக்கு புற்றுநோய் ஆபத்து குறைகிறது என்று கண்டறியப்பட்டது. இப்படி உணவு மற்றும் வாழ்க்கை முறையை மாற்றுவதன்மூலம் சிறுநீர்ப்பை, மார்பகம், பெருங்குடல், எண்டோமெட்ரியல், உணவுக்குழாய், சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல், வயிறு மற்றும் மலக்குடல், லுகேமியா, மைலோமா மற்றும் தலை மற்றும் கழுத்து புற்றுநோய்களும் அடங்கும்.

ALSO READ: மழைக்காலத்தில் புரத உணவுகள் ஏன் முக்கியம்..? என்னென்ன உணவுகளை எடுக்க வேண்டும்?

புற்றுநோய் என்பது ஒரே இரவில் ஏற்படும் நோய் அல்ல என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இது மெதுவாக உருவாகிறது மற்றும் நமது உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையைப் பொறுத்தது. சீரான உணவு, இயற்கை உணவுகள் மற்றும் தினசரி முன்னெச்சரிக்கைகள் மூலம், புற்றுநோயை எதிர்த்துப் போராடுவது மட்டுமல்லாமல் அதைத் தடுப்பதும் சாத்தியமாகும்.