AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Texla Movie: ஜெய் – சுராஜ் வெஞ்சாரமூடு நடிக்கும் டெக்ஸ்லா.. வெளியானது ஃபர்ஸ்ட் லுக்!

Aishwarya Rajinikanth Texla Movie: தமிழில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ஜெய். இவர் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இயக்கத்தில் உருவாகிவரும் டெக்ஸ்லா படத்தில் கதாநாயகனாக இணைந்துள்ளார். இதன் ஷூட்டிங் பூஜைகள் சமீபத்தில் நடந்திருந்த நிலையில், இன்று 2026 மார்ச் 7ம் தேதியில் முதல் பார்வையை படக்குழு வெளியிட்டுள்ளது.

Texla Movie: ஜெய் – சுராஜ் வெஞ்சாரமூடு நடிக்கும் டெக்ஸ்லா.. வெளியானது ஃபர்ஸ்ட் லுக்!
டெக்ஸ்லா படத்தின் ஃபர்ஸ்ட் லுக்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 07 Mar 2026 20:05 PM IST

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருந்தவருபவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் (Aishwarya Rajinikanth). இவர் தமிழில் தனுஷ் (Dhanush) முதல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) உட்பட பல்வேறு நடிகர்களை கொண்டு திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். அந்த வகையில் இறுதியாக இவரின் இயக்கத்தில் லால் சலாம் (Lal Salaam) என்ற படம் வெளியானது. கடந்த 2024ம் ஆண்டில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. மேலும் இதில் முக்கிய வேடங்களில் நடிகர்கள் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இவர் கிட்டத்தட்ட 1 ஆண்டுக்கும் மேலாக எந்த படத்தையும் இயக்கவில்லை. மேலும் அடுத்ததாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கவுள்ள புது படம்தான் “டெக்ஸ்லா” (Texla).

இதன் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதை கண்ணன் ரவி குரூப்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஜெய் (Jai) மற்றும் சுராஜ் வெஞ்சாரமூடு (Suraj Venjaramoodu) இணைந்து நடிக்கிறார்கள். இடத்ன் ஷூட்டிங் பூஜை சமீபத்தில் நடைபெற்றிருந்த நிலையில், இன்று 2026 மார்ச் 7ம் தேதியில் இப்படத்தின் முதல் பார்வையை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: இந்திய சினிமாவின் எவர்கிரீன் ஐகான் விருதை வென்ற சிம்ரன் – வைரலாகும் நெகிழ்ச்சிப் பதிவு!

ஜெய் மற்றும் சுராஜ் வெஞ்சாரமூடுவின் டெக்ஸ்லா பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த எக்ஸ் பதிவு:

இந்த் முதல் பார்வையில் ஜெய் மற்றும் நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு இடம்பெற்றுள்ளனர். இதை பார்க்கும்போது சுராஜ் வெஞ்சாரமூடு தந்தை வேடத்திலும், ஜெய் மகன் வேடத்திலும் இப்படத்தில் நடிப்பதாக தெரிகிறது. மேலும் இந்த படமானது 90ஸ் கதைக்களத்தில் ஒரு ரேடியோவை மையமாக கொண்டு உருவாக்கப்படவுள்ளதாக தெரிகிறது. தற்போது வெளியாகியுள்ள இந்த முதல் பார்வை ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது.

இதையும் படிங்க:  தனது பிஸ்னஸில் அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய யாரடி நீ மோகினி சீரியல் நடிகை – குவியும் வாழ்த்து!

டெக்ஸ்லா படத்தின் இசையமைப்பாளர்:

இந்த டெக்ஸ்லா படத்தி ஜெய் மற்றும் சுராஜ் வெஞ்சாரமூடுவுடன் நடிகர்கள் ஜார்ஜ் மரியான் மற்றும் ஆனந்த ராஜ் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் இணைந்து நடிக்கிறார்கள். ஆனால் இதன் கதாநாயகி யார் என இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த் படத்தை கண்ணன் ரவி குரூப்ஸ் நிறுவனம் தயாரிக்கும் நிலையில், இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறாராம். இது தொடர்பான தகவலும் ரசிகர்களிடையே வைரலாகிவருகிறது. இந்த படமானது வித்தியாசமான கதைக்களத்தில் தயாராகவுள்ள நிலையில், வரும் 2027ம் ஆனது தொடக்கத்தில் அல்லது கோடைக்காலத்தில் வெளியிட படக்குழு வட்டாரங்கள் கூறுகிறது.

Follow Us