Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Health Tips: உங்களுக்கு தீராத காது வலியா..? சரிசெய்ய உதவும் சில குறிப்புகள்..!

Ear Pain: நீங்கள் குழந்தையாக இருந்தாலும் சரி, பெரியவராக இருந்தாலும் சரி, இந்தக் காது வலியைத் தாங்குவது மிகவும் கடினம். சளி, தொற்று அல்லது தலைக்கு தண்ணீர் ஊற்றி சரியாக துவட்டாமல் விடுவது போன்றவை காது வலி ஏற்படுவதற்கான காரணங்களாக இருக்கலாம்.

Health Tips: உங்களுக்கு தீராத காது வலியா..? சரிசெய்ய உதவும் சில குறிப்புகள்..!
காது வலிImage Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 01 Oct 2025 22:36 PM IST

திடீரென்று உங்கள் காதில் குத்தல் அல்லது வலி ஏற்பட்டால், வாழ்க்கை ஒரு நொடியில் நின்றுவிடும் போல் தாங்க முடியாத அளவிற்கு மாறிவிடும். நீங்கள் குழந்தையாக இருந்தாலும் சரி, பெரியவராக இருந்தாலும் சரி, இந்தக் காது வலியைத் தாங்குவது மிகவும் கடினம். சளி, தொற்று அல்லது தலைக்கு தண்ணீர் (Water) ஊற்றி சரியாக துவட்டாமல் விடுவது போன்றவை காது வலி (Ear Pain) ஏற்படுவதற்கான காரணங்களாக இருக்கலாம். இது பகல், இரவு என எந்த நேரத்தில் வந்தாலும், நீங்கள் மருத்துவரிடம் ஓட வேண்டிய கட்டாயம் ஏற்படும். வலி அவ்வளவு அதிகமாக இல்லாவிட்டாலும், அது வேதனையாக இருந்தால், வீட்டிலேயே சில எளிய முறைகள் மூலம் உங்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கலாம்.

காது வலிக்கு சில பயனுள்ள குறிப்புகள்:

ஹாட் பேக்குகள்:

காது வலிக்கு சிகிச்சையளிக்க மிகவும் பொதுவான மற்றும் வேகமான வழி ஹாட் பேக்குகளைப் பயன்படுத்துவதாகும். சூடான தண்ணீர் பாட்டிலை மென்மையான துணியில் சுற்றி காதுக்கு அருகில் வைத்திருப்பது வீக்கம் மற்றும் வலியைக் குறைக்கும்.

ALSO READ: மாதவிடாய் காலத்தில் தாங்க முடியாத வலியா..? இந்த பொருட்கள் வலியை குறைக்கும்!

பூண்டு எண்ணெய்:

பூண்டு ஒரு இயற்கை ஆன்டிபயாடிக் ஆக செயல்படுகிறது. முதலில், சிறிது எண்ணெயை சூடாக்கி, அதில் பூண்டை வறுக்கவும். எண்ணெய் குளிர்ந்ததும், காதின் வெளிப்புறப் பகுதியை மெதுவாக மசாஜ் செய்து நிவாரணம் அளிக்கவும்.

துளசி இலைச் சாறு:

புதிய துளசி இலைகளை நசுக்கி, அந்தச் சாற்றை காதைச் சுற்றிப் பூச வேண்டும். இது தொற்று மற்றும் வலி இரண்டையும் குறைக்கும்.

உப்பு:

ஒரு கைப்பிடி உப்பை சூடாக்கி, அதை ஒரு துணியில் சுற்றி, உங்கள் காதுக்கு அருகில் வைக்கவும். இது காதில் உள்ள அழுத்தத்தைக் குறைத்து வலியைப் போக்க உதவும்.

இஞ்சி சாறு:

இஞ்சியில் இயற்கையான அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, அவை வலியைக் குறைக்க உதவுகின்றன. காதைச் சுற்றி சிறிது இஞ்சி சாற்றை மசாஜ் செய்வது நிவாரணம் அளிக்கும்.

வாழை இலை தண்டு:

வாழை இலையின் தண்டை எடுத்து, அதனை தீயில் சிறிது நேரம் காட்டியபிறகு, அதன் சாற்றை காதிற்குள் பிழிந்துவிட்டால் காது வலி சரியாகும்.

சரியான நிலையில் ஓய்வெடுத்தல்:

காது வலி இருக்கும்போது, ​​தலையை உயர்த்தி தூங்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இது காதுகளில் அழுத்தத்தைக் குறைத்து நிவாரணம் அளிக்கிறது.

ALSO READ: மழைக்காலத்தில் பூஞ்சை தொற்று ஏன் தோன்றுகின்றன..? காரணங்களும், தீர்வுகளும்..!

மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்:

முடிந்தவரை காதில் நேரடியாக எந்த திரவத்தையும் ஊற்ற வேண்டாம். காது வலி நீண்ட நாட்களாக உங்களுக்கு இருந்தால், காய்ச்சல் அல்லது காதில் இருந்து சீழ் வடிதல் போன்ற பிரச்சனைகள் இருந்தால், தாமதிக்காமல் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. பலர் காது வலியை ஒரு பொதுவான பிரச்சனையாக கருதுகின்றனர். ஆனால் அதை ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாது. இருப்பினும், நீங்கள் ஆரம்பத்தில் மேலே குறிப்பிட்ட வீட்டு வைத்தியங்களைப் பின்பற்றினால், உடனடி நிவாரணம் பெறலாம். காது கேட்கும் உறுப்பு மட்டுமல்ல, அது நம் உடலின் சமநிலையை பராமரிப்பதற்கான ஒரு முக்கிய வழிமுறையாகும் என்பதை நினைவில் கொள்வது நல்லது. எனவே, காது பராமரிப்புக்கு எந்தப் பற்றாக்குறையும் இருக்கக்கூடாது.