Health Tips: மழைக்காலத்தில் பூஞ்சை தொற்று ஏன் தோன்றுகின்றன..? காரணங்களும், தீர்வுகளும்..!
Fungal Infections: உங்கள் சருமத்தில் இருக்கும் ஈரப்பதத்தைக் குறைக்க, வியர்வை வந்தவுடன் அல்லது உடைகள் மழைநீரில் நனைந்தால் உடனடியாக உடைகளை மாற்றி உங்களை உலர்வாக வைத்து கொள்வது முக்கியம். மேலும், மெடிக்கல் கடைகளில் கிடைக்கும் ஸ்டீராய்டு அடிப்படையிலான கிரீம்களை தவிர்ப்பது நல்லது.

வெயில் காலத்தில் இருந்து மழைக்காலத்திற்கு (Rainy Season) பருவம் மாறும்போது ஆரோக்கியத்தில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக மழைக்காலங்களில், பல தோல் தொடர்பான பிரச்சினைகள் தோன்றும். சருமத்தில் எண்ணெய் பசை, முகப்பரு, ஒவ்வாமை, அரிப்பு, பூஞ்சை தொற்று, வியர்வை சொறி போன்ற பல தோல் தொடர்பான பிரச்சினைகள் தோன்றும். அவற்றில், பூஞ்சை தொற்று (Fungal Infection) மற்றும் வியர்வை சொறி ஆகியவை முக்கியமானவை. இந்தநிலையில், மழைக்காலங்களில் இந்த தோல் தொடர்பான பிரச்சினைகள் ஏன் மோசமடைகின்றன? அவற்றை எவ்வாறு அகற்றுவது உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.
மழைக்காலத்தில் இந்த தோல் பிரச்சினைகள் ஏன் ஏற்படுகின்றன..?
அதிகரித்த ஈரப்பதம்:
அதிகப்படியான ஈரப்பதமும், அதிகப்படியான வியர்வையும் சருமத்தில் உலர்த்துவதை கடினமாக்குகிறது. இது தோல் தொற்றுகளுக்கு வழிவகுக்கும்.
ALSO READ: இடதா..? வலதா..? எந்த பக்கம் தூங்குவது இதயத்திற்கு நல்லது..?




ஈரப்பதம்:
மழைக்காலத்தில் தோலில் தங்கியிருக்கும் ஈரப்பதம் எரிச்சலை ஏற்படுத்தி பூஞ்சை வளர்ச்சியை அதிகரிக்கும்.
ஆடைகள்:
செயற்கை அல்லது இறுக்கமான ஆடைகளை அணிவது சருமத்தில் வெப்பத்தையும் ஈரப்பதத்தையும் சிக்க வைத்து, சொறி மற்றும் பூஞ்சை தொற்றுகளுக்கு வழிவகுக்கும்.
மோசமான சுகாதாரம்:
மழைக்காலங்களில் சரும சுகாதாரத்தை புறக்கணிப்பது சரும பிரச்சினைகள் தோன்றும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
மிலியாரியா:
வியர்வை சுரப்பியில் இருந்து தோலின் மேற்பரப்புக்கு செல்லும் குழாய் அடைக்கப்படும்போது வியர்வை ஏற்படுகிறது. இது மருத்துவ ரீதியாக மிலியாரியா என்று அழைக்கப்படுகிறது. இந்த அடைப்பு தோலின் மேற்பரப்பில் இருந்து வியர்வை வெளியேறுவதைத் தடுக்கிறது. இதனால் தோல் எரிச்சல் ஏற்படுகிறது.
பூஞ்சை தொற்றுகளா ?
உடலில் பூஞ்சை தொற்றுகள் பூஞ்சைகளின் அதிகப்படியான வளர்ச்சியால் ஏற்படுகின்றன. முக்கியமாக கேண்டிடா அல்லது டெர்மடோஃபைட்டுகள் போன்ற பூஞ்சைகளே உடலில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இந்த பூஞ்சைகள் சூடான, ஈரப்பதமான சூழல்களில் செழித்து வளரும் மற்றும் மழைக்காலத்தில் அவற்றின் இனப்பெருக்கம் அதிகரிக்கிறது.
பூஞ்சை தொற்று அறிகுறிகள்:
சிவப்பு கொப்புளங்கள், வட்ட வடிவத் திட்டுகள், கடுமையான அரிப்பு போன்றவை பூஞ்சை தொற்றின் அறிகுறிகளாகும். இதற்கு முறையாக சிகிச்சையளிக்கப்படாவிட்டால், பூஞ்சை தொற்றுகள் உடல் முழுவதும் பரவக்கூடும். இதற்கு, கிரீம்கள், ஒரு சில வீட்டு சமையலறை பொருட்கள் போன்றவற்றை கொண்டு பூஞ்சை எதிர்ப்பு மருந்துகளாக பயன்படுத்தலாம்.
ALSO READ: இறுக்கமாக உள்ளாடைகள் அணிவது சரியா..? பிரபல மருத்துவர் முருகசுந்தரம் விளக்கம்!
மழைக்காலத்தில் சரும ஆரோக்கியத்தை எவ்வாறு பராமரிப்பது?
உங்கள் சருமத்தில் இருக்கும் ஈரப்பதத்தைக் குறைக்க, வியர்வை வந்தவுடன் அல்லது உடைகள் மழைநீரில் நனைந்தால் உடனடியாக உடைகளை மாற்றி உங்களை உலர்வாக வைத்து கொள்வது முக்கியம். சருமத்திற்கு தேவையான சுவாசம் கிடைக்கவும், ஈரப்பதத்தைத் தக்கவைத்துக்கொள்வதைக் குறைக்கும் தளர்வான பருத்தி அல்லது லினன் ஆடைகளை அணியுங்கள். மேலும், கடைகளில் கிடைக்கும் ஸ்டீராய்டு அடிப்படையிலான கிரீம்களைத் தவிர்ப்பது நல்லது. இந்த கிரீம்கள் தற்காலிக நிவாரணம் அளிக்கக்கூடும் என்றாலும், அவை காலப்போக்கில் பூஞ்சை தொற்றுகளை மோசமாக்கும். உங்களுக்கு தொடர்ந்து, பூஞ்சை தொற்று பாதிப்புகள் தொடர்ந்தால் அல்லது மோசமடைந்தால் மருத்துவட்களின் ஆலோசனையைப் பெறுவது மிகவும் முக்கியம்.