Health Tips: மாரடைப்பு வரும் என பயமா..? இந்த 4 பழங்கள் போதும்.. உங்கள் இதயத்தை பாதுகாக்கும்..!
Heart Health: தினமும் பழங்களை சாப்பிடுவது உடலுக்கு தேவையான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பைட்டோ கெமிக்கல்களை வழங்குகிறது, அவை நம் இதயத்திற்கும் நல்லது. சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, தினமும் நான்கு குறிப்பிட்ட பழங்களை சாப்பிட பரிந்துரைக்கின்றனர். இந்த பழங்களை உட்கொள்வது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

இன்றைய அவசர காலத்தில் பலரும் மாரடைப்பு (Heart Attack) பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள். இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்க செய்கிறது. இன்றைய காலத்தில் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் அதிகரித்து வரும் நிலையில், நாம் நமது இதயங்களை சிறப்ப்பு கவனம் செலுத்த வேண்டும். இதய ஆரோக்கியத்திற்காக, நமது உணவில் சில மாற்றங்களை செய்ய வேண்டும். இது ஆரோக்கியமான இதயத்தை பராமரிக்க உதவும். அதிக பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுபவர்களுக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் குறைவாக ஏற்பசும். பழங்களில் ஃபோலேட், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி (Vitamin C) நிறைந்துள்ளன. அதன்படி, ஃபோலேட் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்க உதவுகிறது. மேலும், இந்த பழங்களில் ஆண்டி ஆக்ஸிடண்ட்களும் நிறைந்துள்ளன. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
தினமும் பழங்களை சாப்பிடுவது உடலுக்கு தேவையான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பைட்டோ கெமிக்கல்களை வழங்குகிறது, அவை நம் இதயத்திற்கும் நல்லது. சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, தினமும் நான்கு குறிப்பிட்ட பழங்களை சாப்பிட பரிந்துரைக்கின்றனர். இந்த பழங்களை உட்கொள்வது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று கூறுகின்றனர்.
ALSO READ: மாறிவரும் வானிலை..! இந்த 4 பொருட்களுடன் சுரைக்காயை ஏன் சேர்த்து சாப்பிடக்கூடாது?




எந்தெந்த பழங்கள் இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது..?
அவகேடோ:
அவகேடோ பழத்தில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது எல்டிஎல் கொழுப்பைக் குறைத்து எச்டிஎல் கொழுப்பை அதிகரிக்கிறது. இது இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. தினமும் அவகேடோ சாப்பிடுவது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதயத்துடன் சேர்ந்து, அவகேடோவும் நம் உடலுக்கு நன்மை பயக்கும், மேலும் எடை இழப்பு போது மக்கள் இதை பெரும்பாலும் தங்கள் உணவில் சேர்த்துக் கொள்கிறார்கள்.
பெர்ரி பழங்கள்:
ப்ளூபெர்ரி மற்றும் ஸ்ட்ராபெர்ரிகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்த பழங்கள். அவை தமனிகளில் வீக்கம் மற்றும் பிளேக் படிவதை மெதுவாக்குகின்றன. இந்த பழங்களை உட்கொள்வது வகை 2 நீரிழிவு மற்றும் இதய பிரச்சினைகள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவும். உங்கள் உணவில் ப்ளூபெர்ரி மற்றும் ஸ்ட்ராபெர்ரிகளை சேர்ப்பது ஆரோக்கியமான இதயத்தை பராமரிக்க நன்மை பயக்கும்.
ஆப்பிள்கள்:
ஆப்பிளில் நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் பாலிபினால்கள் உள்ளன, அவை கொழுப்பைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. தினமும் ஆப்பிள்களை சாப்பிடுவது இதய நோய் அபாயத்தை குறைக்கிறது. இந்த பழங்கள் எடுத்து செல்லவும் எளிமையானவை. பசிக்கும்போது சிறிதளவு எடுத்துக்கொள்ளலாம். அதன்படி, தினமும் ஒரு ஆப்பிளை தவறாமல் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
ALSO READ: எலுமிச்சை விஷம் போன்றது! இதனுடன் சேர்த்து சாப்பிட்டால் தீங்கு!
திராட்சை:
இனிப்பு மற்றும் புளிப்பு சுவையுடைய திராட்சைகளில் ரெஸ்வெராட்ரோல் மற்றும் அந்தோசயினின்கள் போன்ற பைட்டோ கெமிக்கல்கள் உள்ளன, அவை கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகளைக் குறைப்பதன் மூலம் வீக்கத்தைக் குறைக்கின்றன. நமது அன்றாட உணவில் திராட்சையைச் சேர்ப்பது சிஸ்டாலிக் இரத்த அழுத்தத்தையும் குறைக்கும். இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது இதய நோய்களைத் தடுக்கவும் உதவுகின்றன.