மன அழுத்தம் முதல் இரத்த சோகை வரை… வாழைப்பூவில் உள்ள மருத்துவ குணங்கள்
Banana Flower Benefits: வாழைப்பழங்களைப் போலவே வாழைப் பூவிலும் உடலுக்கு தேவையான பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. நீரிழிவு நோய் முதல் செரிமான பிரச்னை வரை பல நன்மைகளை வாழைப் பூ நமக்கு வழங்குகின்றன. இது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

வாழைப்பழங்களின் நன்மைகள் பற்றி நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் வாழைப்பூ நம் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நல்லது என்று உங்களுக்குத் தெரியுமா? வாழைப்பூவும் வாழைப்பழத்தைப் போலவே நம் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. வாழைப்பூவில் நார்ச்சத்து, புரதம் (Protein), கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இவை நம் உடலை பல கடுமையான நோய்களிலிருந்து பாதுகாக்கின்றன. சிலர் வாழைப்பூவை சமையலிலும் பயன்படுத்துகின்றனர். மேலும், இந்த வாழைப்பூ ஆயுர்வேதத்தில் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த வாழைப்பூ மன அழுத்தம், நீரிழிவு நோய் (Diabetic)போன்ற பல உடல் நல பிரச்னைகளுக்கு மிகவும் நல்லது.
வாழைப் பூ எந்தெந்த உடல்நலப் பிரச்னைகளுக்கு நல்லது?
நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறந்த மருந்து
வாழைப்பூ டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறந்த மருந்து. இதை நம் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இது நமது இரத்த சர்க்கரை அளவைக் குறைத்து அவற்றைக் கட்டுப்படுத்த உதவுகிறது. நீரிழிவு நோயாளிகள் இந்த பூவைத் தொடர்ந்து உட்கொள்வதன் சிறந்த பலன்களைப் பெறுகிறார்கள்.
மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வைப் போக்குகிறது
வாழைப்பூக்களில் மெக்னீசியம், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் மன அழுத்த எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. இவை மன அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம் உங்கள் மனநிலையை மேம்படுத்த உதவுகின்றன. அது மட்டுமல்லாமல், அவை மன அழுத்தத்தைக் கையாள்வதிலும் பயனுள்ளதாக இருக்கும். இது மனச்சோர்வு தொடர்பான பிரச்னைகளையும் தடுக்கிறது.




இதையும் படிக்க : உங்களுக்கு இந்த 5 உடல்நல பிரச்சனைகள் இருக்கா..? ஏன் மாதுளை சாப்பிடக்கூடாது தெரியுமா?
செரிமான அமைப்பை பாதுகாக்கும்
வாழைப்பூ ஆரோக்கியமான செரிமான அமைப்புக்கு ஒரு நல்ல மருந்து. வயிறு தொடர்பான நோய்களைத் தவிர்க்க உதவுகிறது. வயிற்று வலி, வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு போன்ற வயிறு தொடர்பான பிரச்னைகளால் நீங்கள் அவதிப்பட்டால், வாழைப் பூவைத் தொடர்ந்து சாப்பிடுவது மிகவும் நல்லது.
இரத்த சோகையைத் தடுக்கும்
வாழைப்பூவில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. எனவே இது இரத்த சோகையைத் தடுப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அது மட்டுமல்லாமல், இரத்த சோகை தொடர்பான தொற்றுநோய்களிலிருந்தும் உங்களைப் பாதுகாக்கிறது. நீங்கள் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருந்தால், வாழைப் பூவைத் தொடர்ந்து சாப்பிடுவது மிகவும் நல்லது.
இதையும் படிக்க : Smartphone Sleep Problems: தூங்கும்போது படுக்கையருகே ஸ்மார்ட்போனா..? தூக்கத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் ஆபத்து!
வாழைப்பழத்தை உணவாக பயன்படுத்துவது போல வாழைப்பூவையும் உணவாக எடுத்துக்கொள்ளலாம். சில வீடுகளில் வாழைப்பூவை பொறியலாகவும், வாழைப்பூ வடையாகவும் செய்து சாப்பிடுகிறார்கள். குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு இது அறுமருந்து. காரணம் இதில் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது.