Health Tips: கார்போஹைட்ரேட்டுகளை முற்றிலுமாக தவிர்க்கிறீர்களா? இந்த பிரச்சனைகள் உருவாகும்!
Side Effects of Cutting Carbs: கார்போஹைட்ரேட்டுகள் உடலுக்கு எளிதில் கிடைக்கக்கூடிய ஆற்றல் மூலமாகும். இவை அரிசி, ரொட்டி மற்றும் உருளைக்கிழங்கில் மட்டுமல்ல, பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், பால் மற்றும் தானியங்களில் கிடைக்கும். அதன்படி, கார்போஹைட்ரேட்டுகளிலிருந்து கிடைக்கும் குளுக்கோஸ், கிட்டத்தட்ட ஒவ்வொரு செல்லுக்கும், குறிப்பாக மூளை மற்றும் இரத்த சிவப்பணுக்களுக்கும் ஒரு அடிப்படைத் தேவையாக பார்க்கப்படுகிறது.
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு (Healthy Lifestyle) சத்தான உணவுகள் மிகவும் முக்கியம். அதன்படி, நல்ல ஆரோக்கியத்தை பேணுவதற்கு அனைத்து ஊட்டச்சத்துக்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. கார்போஹைட்ரேட்டுகள் (Carbohydrates) உடலுக்கு அவசியமானதாகக் கருதப்படும் ஒரு ஊட்டச்சத்து ஆகும். இருப்பினும், சர்க்கரை நோயாளிகள் மற்றும் உடல் பருமனை குறைக்க விரும்புவோர்கள் கார்போஹைட்ரேட் உட்கொள்ளலை தவிர்க்கிறார்கள். இருப்பினும், உணவில் கார்போஹைட்ரேட்டுகள் இல்லாதது கார்போஹைட்ரேட் குறைபாட்டிற்கு வழிவகுக்கும், இது பல்வேறு சிக்கல்களின் அபாயத்தை அதிகரிக்கிறது என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். உடலில் கார்போஹைட்ரேட்டுகள் இல்லாதது பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். அந்தவகையில், கார்போஹைட்ரேட்டுகள் இல்லாதது உடலில் என்ன பிரச்சனையை உண்டாக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
கார்போஹைட்ரேட்டுகள் எதிலிருந்து கிடைக்கும்..?
கார்போஹைட்ரேட்டுகள் உடலுக்கு எளிதில் கிடைக்கக்கூடிய ஆற்றல் மூலமாகும். இவை அரிசி, ரொட்டி மற்றும் உருளைக்கிழங்கில் மட்டுமல்ல, பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், பால் மற்றும் தானியங்களில் கிடைக்கும். அதன்படி, கார்போஹைட்ரேட்டுகளிலிருந்து கிடைக்கும் குளுக்கோஸ், கிட்டத்தட்ட ஒவ்வொரு செல்லுக்கும், குறிப்பாக மூளை மற்றும் இரத்த சிவப்பணுக்களுக்கும் ஒரு அடிப்படைத் தேவையாக பார்க்கப்படுகிறது. உடலில் கார்போஹைட்ரேட்டுகள் குறைய தொடங்கும்போது, உடலில் சேமிக்கப்பட்ட கிளைகோஜனைப் பயன்படுத்தத் தொடங்குகிறது. கிளைகோஜன் என்பது ஒரு வகையான நீர் ஆகும். எனவே இது தீர்ந்தவுடன், எடை விரைவாக குறைவது போல் தோன்றும். இருப்பினும், நீர் இழப்பு நிறுத்தப்படுவதால் இந்த வேறுபாடு காலப்போக்கில் மாற தொடங்கும்.
கார்போஹைட்ரேட்டுகள் குறைக்கப்படும்போது, உடல் ஆற்றலுக்காக கொழுப்பை நம்பியுள்ளது. கீட்டோன்கள் உருவாகத் தொடங்குகின்றன. இந்த செயல்முறை கொழுப்பை வேகமாக எரிக்க உதவுகிறது. இது பசியையும் குறைக்கிறது. ஆனால் நீண்ட காலத்திற்கு உங்கள் உடலுக்கு தேவையான கார்போஹைட்ரேட்டுகள் உணவு மூலம் கிடைக்காதபோது ஊட்டச்சத்து குறைபாடுகளின் அபாயத்தையும் அதிகரிக்கிறது. இது தொடர்ந்து, குறையும்போது உங்கள் செரிமான அமைப்பில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஏனெனில் இது நார்ச்சத்தையும் குறைக்கிறது.




ALSO READ: ஊறுகாய் இல்லாமல் உணவு சாப்பிட பிடிக்காதா? இதன் பக்கவிளைவு இவ்வளவு இருக்கு!
நார்ச்சத்து குறையும்போது என்ன நடக்கும்..?
நார்ச்சத்து குறைபாடு மலச்சிக்கல், வீக்கம் மற்றும் குடல் நுண்ணுயிரிகளில் ஏற்றத்தாழ்வுக்கு வழிவகுக்கும். சில ஆய்வுகள் நீண்டகால கார்போஹைட்ரேட்டுகளைக் குறைப்பது நல்ல பாக்டீரியாக்களின் பன்முகத்தன்மையையும் குறைக்கும் என்று கூறுகின்றன. கார்போஹைட்ரேட் குறைத்தால் பலருக்கு ஆற்றல் அளவு குறைகிறது. ஆரம்ப நாட்களில், சோர்வு, எரிச்சல், கவனம் செலுத்தும் திறன் இழப்பு அல்லது மூளையின் செயல்பாடு மெதுவாக இருப்பது பொதுவானது. மூளைக்கு குளுக்கோஸ் மிகவும் தேவையான ஒன்று. சிலருக்கு குளுக்கோஸ் பற்றாக்குறை ஏற்படும்போது, லேசான அளவில் இரத்தச் சர்க்கரை அளவும் குறைய தொடங்கும்.
அனைவருக்கும் இது சரியானதா..?
மருத்துவர் ஆலோசனை இல்லாமல் பலரும் உடலை குறைக்க வேண்டும் என்ற அடிப்படையில் கார்போஹைட்ரேட்டுகள் முற்றிலும் தவிர்க்க தொடங்குகிறார்கள். இந்த உணவுமுறை அனைவருக்கும் சரியானது கிடையாது. சிறுநீரக பிரச்சனை உள்ளவர்களுக்கு புரத உட்கொள்ளல் அதிகமாக இருக்கலாம். கல்லீரல் பிரச்சனை உள்ள விளையாட்டு வீரர்கள் அல்லது அதிக தீவிர பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு, கார்போஹைட்ரேட்டுகளைக் குறைப்பது அவர்களின் செயல்திறனை நேரடியாகப் பாதிக்கும்.
ALSO READ: இதய ஆரோக்கியத்திற்கு ஆபத்து.. இந்த 7 உணவுகளை ஏன் தவிர்ப்பது நல்லது?
கார்போஹைட்ரேட்டுகளை முற்றிலுமாக கைவிடுவதற்கு முன், உடலின் சக்தி, செரிமானம் மற்றும் மூளை அனைத்தும் இதில் ஈடுபட்டுள்ளன என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். எந்தவொரு பெரிய மாற்றங்களையும் செய்வதற்கு முன் ஒரு நிபுணரை அணுகுவது அவசியம்.