Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இண்டர்நெட் தேவையில்லை! கூகுளின் Gemma 3n ஏஐ மாடல்! – அப்படி என்ன ஸ்பெஷல்?

Google's Gemma 3n AI Model : கூகுள் தற்போது அறிமுகப்படுத்தியுள்ள Gemma 3n என்ற புதிய ஏஐ மாடல் குறைந்த ரேம் கொண்ட போன்களில் கூட வேலை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதனைப் பயன்படுத்த இண்டர்நெட் தேவையில்லை. இதன் மற்ற சிறப்பம்சங்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

இண்டர்நெட் தேவையில்லை! கூகுளின் Gemma 3n ஏஐ மாடல்! – அப்படி என்ன ஸ்பெஷல்?
Gemma 3n
karthikeyan-s
Karthikeyan S | Published: 30 Jun 2025 17:35 PM

செயற்கை நுண்ணறிவின் (Artificial Intelligence) வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் ஆகிய அனைத்து துறைகளிலும் ஏஐயின் பயன்பாடு நுழைந்து விட்டது. இதனைக் கருத்தில் கொண்டு பல முன்னணி நிறுவனங்கள் நாளுக்கு நாள் புதுபுதுப் ஏஐ மாடல்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. இவை ஒவ்வொன்றும் தனித்துவமான பல அம்சங்களைக் கொண்டுள்ளது. அந்த வகையில் கூகுள் (Google) நிறுவனமானது “Gemma 3n” என்ற புதிய ஏஐ (AI) மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாடல் ஒரு சாதாரண ஸ்மார்ட்போனிலேயே, இண்டர்நெட் இல்லாமல் இயங்கக்கூடியது என்பது இதன் மிகப்பெரிய சிறப்பம்சமாகும். மேலும் இது ஒரே நேரத்தில் டெக்ஸ்ட்,  ஆடியோ (Audio), இமேஜையும், வீடியோவையும் (Video) புரிந்து கொண்டு செயல்படக்கூடிய மல்டிமாடல் திறன்களை கொண்டது.

Gemma 3n-ன் சிறப்பம்சங்கள் என்ன?

Gemma 3n ஏஐ மாடல் குறித்த எக்ஸ் பதிவு

 

போனிலேயே இண்டர்நெட் இல்லாமல் தகவல்களை வழங்கும்

தற்போது வரை ஏஐ செயலிகள் பெரும்பாலும் கிளவுட் பவர் சார்ந்தவை. ஆனால் Gemma 3n  அதை விட அதிக திறனுடன் மொபைல் போனிலேயே, இன்டர்நெட் இல்லாமல் வழங்குகிறது. இது ரஷ்யா பொம்மைகளைப் போல, ஒரு பெரிய மாடலுக்குள் பல சிறிய மாடல்கள் என இருக்கும் காரணத்தால், இது செயல்திறனை மேம்படுத்துகிறது. இது இரண்டு வகைகளில் கிடைக்கிறது. இது 2ஜிபி ரேம் கொண்ட பேன்களுக்கு E2B என்ற ஒரு மாடலும், 3ஜிபி ரேம் கொண்ட போன்களுக்கு E4B என்ற மாடலும் கிடைக்கிறது.

Per-Layer Embedding (PLE) என்ற அம்சம் போனில் கொடுக்கப்பட்டிருக்கும் கிராஃபிக்ஸ் சிப்பிற்கு அதிகம் வேலை கொடுக்காமல் பிராசசரை வைத்து வேலை செய்யும். இதனால் மெமரியை சேமிக்கும் போது போனின் வேகம் வழக்கம்போல செயல்படும்.  KV Cache Sharing  என்ற அம்சம் மூலம் ஆடியோ மற்றும் வீடியோவை வேகமாக புரிந்துகொள்ளும் திறன் கொண்டது.

யூனிவர்சல் ஸ்பீச் மாடல் (Universal Speech Model) வழியாக பேசுவதை எழுத்துகளாக மாற்றும் அம்சம், மொழிபெயர்ப்பு போன்றவற்றை சிறப்பாக செய்கிறது. MobileNet-V5 மூலம் 60fps வீடியோவையும் சிறந்த முறையில் புரிந்துகொள்ளும் திறன் கொண்டது.