Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இந்தியாவில் ஏஐ-ஆல் இந்த துறைகளில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் – சமீபத்திய ஆய்வில் ஆச்சரிய தகவல்

AI Impact on Jobs : ஏஐ-ன் தாக்கம் அனைத்து துறைகளிலும் எதிரொலித்திருக்கிறது. ஏஐ காரணமாக வேலை வாய்ப்பு பறிபோகும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் அதற்கு மாற்றாக சமீபத்திய ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. மேன்பவர் குரூப் வெளியிட்ட ஆய்வு முடிவுகள் இந்தியாவில் ஏஐ காரணமாக வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என தெரிவித்திருக்கிறது.

இந்தியாவில் ஏஐ-ஆல் இந்த துறைகளில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் – சமீபத்திய ஆய்வில் ஆச்சரிய தகவல்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 10 Jun 2025 21:40 PM

அடுத்த 3 மாதங்களுக்கு இந்தியாவில் (India) உள்ள நிறுவனங்களில் வேலைவாய்ப்பு நிலைமை சீராக இருப்பதாக, மேன்பவர் குரூப் நிறுவனத்தின் சமீபத்திய வேலைவாய்ப்பு பார்வை அறிக்கை தெரிவிக்கிறது. குறிப்பாக, தனியார் நிறுவனங்களில், அதிலும் குறிப்பாக தகவல் தொழில்நுட்பம் (Information Technology), எரிசக்தி மற்றும் யூட்டிலிட்டி, பொருளாதார நிறுவனங்கள் உள்ளிட்ட துறைகளில் வேலைவாய்ப்பு அதிகரிக்க இருக்கிறது. இந்தியாவின் மொத்த வேலைவாய்ப்பு பார்வை (Net Employment Outlook) 42 சதவிகிதமாக இருக்கிறது. இது உலகளவில் இரண்டாவது மிக உயர்ந்த பணியமர்த்தல் பார்வையாகும். துபாயில் மட்டுமே இது அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் இளைஞர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐடி துறையில் ஏஐ முன்னிலை வகிக்கிறது

அடுத்த காலாண்டில் தகவல் தொழில்நுட்ப துறையில் வேலைவாய்ப்பு அதிகரிக்கப் போகிறது. இங்கு செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence) தொழில்நுட்பத்தில் பயிற்சி பெற்ற நிபுணர்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. மேன்பவர்கரூப் இந்தியா மற்றும் இயக்குநர் சந்தீப் குலாத்தி, ஐடி, எரிசக்தி மற்றும் பொருளாதார நிறுவனங்கள் போன்ற துறைகள், தங்களது ஏஐ தொழில்நுட்பத்தை விரைவுபடுத்துவதில் தீவிரமாக உள்ளதால், வேலைவாய்ப்பு எதிர்பார்ப்பு அதிகரிக்கிறத என்று கூறியிருக்கிறார்.

மேன்பவர்குரூப்பின் வேலைவாய்ப்பு குறித்த சர்வே

 

பணியாளர்களின் தேவை அதிகரிக்கும் துறைகள்

ஐடி துறைகளில் 46 சதவிகிதம் நிறுவனங்கள் புதிய பணியாளர்களை பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் எரிசக்தி மற்றும் யூட்டிலிட்டி துறையில் 50 சதவிகிதம் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக கடந்த ஆண்டை விட 18 புள்ளிகள் உயர வாய்ப்பிருக்கிறது. தொழில் துறையில் 54 சதவிகிதமும், நிதித் துறைகளில் 43 சதவிகிதமும் மருத்துவம், ஆராய்ச்சி துறைகளில் 38 சதவிகிதமும் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கவிருக்கின்றன.

உலகளாவிய வேலைவாய்ப்பு நிலை

துபாயில் 48 சதவிகித நிறுவனங்கள் புதிதாக வேலைவாய்ப்பை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளன. மேலும் இந்தியாவில் 42 சதவிகிதம் பேரும் பிரேசிலில் 33 சதவிகிதம் பேரும் நெதர்லா்தில் 30 சதவிகிதம் பேரும் வேலைவாய்ப்பு பெறவிருக்கின்றனர்.

ஏஐ போன்ற முன்னிலை தொழில்நுட்பங்களில் திறமைகள் மற்றும் தகுதிகள் பெற்ற இந்தியர்கள், குறிப்பாக ஏஐ, கிளவுட் போன்ற துறைகளில், எதிர்காலத்தில் அதிக வேலைவாய்ப்புகளை எதிர்பார்க்கலாம். இந்த அறிக்கை இந்தியாவின் தொழிலாளர்களுக்கு நம்பிக்கையையும், தொழில் வளர்ச்சிக்கும் நல்ல முன்னேற்ற அடையாளமாகும்.