Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

உடனே Password-ஐ மாத்துங்க.. 2.5 பில்லியன் ஜிமெயில் பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்த கூகுள்.. காரணம் என்ன?

Gmail Security Alert | ஜிமெயில் பயனர்கள் நாளுக்கு நாள் மோசடி சம்பவங்களுக்கு ஆளாகி வரும் நிலையில், கூகுள் சில முக்கிய எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. அதாவது பயனர்கள் மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க பாஸ்வேர்டு மாற்றம் செய்ய வேண்டும் என்றும், இரண்டு அடுக்கு பாதுகாப்பை இயக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

உடனே Password-ஐ மாத்துங்க.. 2.5 பில்லியன் ஜிமெயில் பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்த கூகுள்.. காரணம் என்ன?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 01 Sep 2025 13:39 PM

உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் கூகுள் (Google) நிறுவனத்தின் ஜிமெயில் (Gmail) செயலியை பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், தங்களது பயனர்களை உடனடியாக பாஸ்வேர்டு (Password) மாற்ற கோரியும், இரண்டு அடுக்கு சரிப்பார்ப்பை (Two Step Verification) இயக்க வேண்டும் என்றும் கூகுள் கூறியுள்ளது. ஜிமெயில் பயனர்கள் எந்த விதமான மோசடிகளிலும் சிக்கிக்கொள்ள கூடாது என்பதற்காக கூகுள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த நிலையில், கூகுளின் இந்த எச்சரிக்கைக்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தொடர்ந்து அதிகரிக்கும் மோசடி – உடனே ரியாக்ட் செய்த கூகுள்

பயனர்கள்  நாளுக்கு நாள் ஹேக்கிங், மோசடி உள்ளிட்ட சம்பவங்களில் பாதிப்பிற்கு உள்ளாகி வரும் நிலையில், இந்த அறிவிப்பை கூகுள் வெளியிட்டுள்ளது. குறிப்பாக Shiny Hunter-ஐ மையப்படுத்தி கூகுள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது ஒரு மோசடி அமைப்பாகும். 2020 ஆம் ஆண்டு முதல் மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மைக்ரோசாஃப்ட், டிக்கெட் மாஸ்டர் உள்ளிட்ட சில மிகப்பெரிய நிறுவனங்களின் தரவுகள் திருடப்பட்டதற்கு பின்னால் இருக்கும் ஒரு பயங்கரமான அமைப்பாக இது உள்ளது.

இதையும் படிங்க : உஷார்! வாட்ஸ் அப்பில் வந்த கல்யாண பத்திரிகையால் ரூ.2 லட்சம் அபேஸ்.. இப்படியும் மோசடி!

மோசடி நடைபெறுவது எப்படி?

இந்த அமைப்பு மிக பயங்கரமானதாக உள்ள நிலையில் அது Phishing முறையை பயன்படுத்தி மோசடிகளை மேற்கொண்டு வருகிறது. அதாவது, பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட தகவல்கள், முக்கிய தகவல்கள், ஓடிபி உள்ளிட்டவற்றை பகிரும் அளவுக்கு மிகவும் துல்லியமான, சந்தேகமே எழாத அளவுக்கு பொதுமக்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பும். இவ்வாறு இந்த நிறுவனம் நூதனமாக மோசடி சம்பவங்களை அரங்கேற்றி வரும் நிலையில், பயனர்கள் தங்களது தரவுகள் மற்றும் தகவல்களை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க : WhatsApp : வாட்ஸ்அப்பில் உருவெடுத்துள்ள ஸ்கிரீன் மிரரிங் பிராடு.. எச்சரிக்கும் ஒன்கார்டு நிறுவனம்!

பயனர்கள் முக்கிய எச்சரிக்கை விடுத்த கூகுள்

இந்த நிலையில் தனது பயனர்கள் மோசடி சம்பவங்களில் சிக்கிக்கொள்ள கூடாது என கூகுள் ஒரு சில எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. அதாவது பயனர்களை தங்களது ஜிமெயில் கணக்கில் கடவுச்சொல்லை உடனடியாக மாற்றும்படி அறிவுறுத்தியுள்ளது. வலிமை அற்ற கடவுச்சொற்கள் மிக எளிதாக ஹேக் செய்யப்படலாம் என்பதால் கூகுள் இவ்வாறு கூறியுள்ளது. மேலும் இரண்டு அடுக்கு சரிப்பார்ப்பை இயக்கவும் கூகுள் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் ஜிமெயில் கணக்கை ஹேக் செய்ய முயற்சி செய்யப்படும் பட்சத்தில் அது குறித்து பயனர்களுக்கு தகவல் சென்று சேர்ந்துவிடும்.